என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Deeparathana"
- மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
- வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வரதராஜபெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
- அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பல்வேறு தலபெருமைகளை உடைய இந்த கோவிலில் அபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. 10 நாள் உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.
அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் அபிராமி அம்மன் எழுந்தருளிய தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.வீடுகள் தோறும் தீபாரதனை, அர்ச்சனை செய்து குடியிருப்பு வாசிகள் வழிபாடு செய்தனர்.