search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு பலி"

    • அறுந்து கிடந்த கம்பியை மிதித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர், முள்ளிபாளையம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மதன்குமார். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று கொண வட்டம் பைபாஸ் சாலை அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி வேகமாக வந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. இதனால் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.

    அந்த வழியாக சென்ற மதன் குமாரின் பசுமாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதில் பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்த கொணவட்டம் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மின்கம்பத்தின் மீது லாரி மோதியது குறித்து கொணவட்டம் மின்வாரிய பொறியாளர் தினேஷ்குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர் மனைவி ஞானேஸ்வரி(36) மகன்கள் ஹரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்றார்.

    சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே கார் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென 2 எருமை மாடுகள் வந்தன.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மாடுகள் மீது மோதியது. அதிவேகத்தில் மோதியதால் கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ரகுநாதன், ஞானேஸ்வரி மற்றும் அவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோர் காயத்துடன் உயிர்த்தப்பினர்.

    மேலும் இந்த விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.

    விபத்து காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.
    • யானை தாக்கியதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, காட்டுப்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த யானை ஒன்று, ஒரு மாட்டை தாக்கியது. இதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.

    இதனால் கால்நடை வளர்க்கும் மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் யானையின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மேய்ந்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    அரக்கோணத்ம் அடுத்த உரியூர் பகுதியில் நேற்று மாலையில் ஆனந்தன் என்பவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது.

    அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மின் னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. 

    • சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது.
    • அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (50) . இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாடுகளை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

    காலையில் எழுந்து பார்த்த போது தனது மாடு ஒன்று கடிபட்டு பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி அருகில் இருந்த விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் இறந்த மாட்டை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சித்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • லோகநாதன் கார் டிரைவர் மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது.
    • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை சேர்ந்த லோகநாதன் கார் டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் சென்றார். மாம்பாக்கம் ெரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன. அப்போது டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது. இதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மேலும், விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
    • இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.  இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.    இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது
    • இணைப்பு கம்பி மீது மாடு உரசியது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 40). விவசாயி. இவர் நேற்று மாலை வயல் அருகே பசுமாட்டை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த மாடு ஏரிக்கரை அருகே உள்ள மின்மாற்றியின் அருகில் சென்றது. அதற்கான இணைப்பு கம்பி மீது மாடு உரசியது, அப்போது மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கை களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×