என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓடும் பஸ்"
- பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார்
- பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது
நாகர்கோவில் :
திங்கள் சந்தையில் இருந்து வெள்ளிச்சந்தை வழியாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பஸ் வந்தபோது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
பெண் பஸ்சில் நகையை தேடி பார்த்தார். எனினும் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்றது. பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பஸ் பஸ் நிலையத்திற்கு செல்வதற்குள் போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். ஆனால் நகை சிக்க வில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
ஆனால் சம்பவம் நடந்தபோது நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் என்பதால் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகும். எனவே அங்கு தான் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கோட்டார், நேசமணி நகர் போலீசார் மாறி மாறி நகை இழந்த பெண்ணை அலைக்கழித்ததால் அந்த பெண் புகார் கொடுக்காமலையே திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் இன்றும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஓடும் பஸ்களில் பர்தா அணிந்து நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஓடும் பேருந்துகளில் பலரிடம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). இவர் பேருந்தில் பயணம் செய்தார். அப் போது அவருக்கு அருகில் பர்தா அணிந்து வந்தி ருந்த 2 பெண்கள் பயணம் செய்த–னர்.
மேலும் அந்த 2 பேரும், சரோஜாவுக்கு உதவி செய் வது போல் தங்களை காட் டிக்கொண்டனர். அதனை நம்பிய சரோஜாவும் அதனை ஏற்றுக்கொண்டார். இதையடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் கீேழ இறங்கி சென்றனர்.
பின்னர் சரோஜா பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மாய மாகி இருந்தது. அப்போது தான் அருகில் நின்ற பெண் கள் திருடிது தெரிந்தது. இதுகுறித்து சரோஜா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதேபோல், அருப்புக் கோட்டை தனியார கல்லூரி–யில் படித்த வருமை் மாணவி நந்தினி என்பவர் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அரு கில் உரசியபடி நின்ற வாறு பர்தா அணிந்து கொண்டு பயணம் செய்த 2 பெண்கள் பாலவநத்தம் பஸ் நிறுத்தத் தில் இறங்கி சென்றனர்.
அதன்பின்னரே நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் செயின் திருடப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் விருதுந கர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசபெரு மாள் உத்தரவின்பேரில் விருதுந கர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா தலைமை யில் தனிப்படை அமைத்து தீவிரமாக காண்காணித்து வந்தனர். அப்போது விருது நகர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பர்தா அணிந்து நின்ற 2 ெபண்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் மதுரை வண்டியூரை சேர்ந்த ரேகா (38), அமலா (37) என்பதும், ஓடும் பேருந்துகளில் பலரி டம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிட் இருந்து திருடிய நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருடப்பட்டது.
- இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சமுத்திரவள்ளி(வயது48). இவர் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் தனது நகையை அடகு வைத்திருந்தார்.
நேற்று அந்த நகையை மீட்டுக்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். பின்னர் சத்திரப்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ரூ.7ஆயிரம் ரொக்கமும் இருந்தது. பஸ்சில் யாரோ மர்ம நபர் கட்டைப்பையில் வைத்திருந்த மணிபர்சை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சமுத்திரவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- களியக்காவிளை அருகே வேகமாகச் சென்ற போது சம்பவம்
- சமூகவலைதளத்தில் வீடியோ வெளியானதால் பரபரப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் பினு. இவரது மகள் மான்யா (வயது 18).
பாறசாலை பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி யில் இவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் அரசு பஸ்சில் மான்யா கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று காலை யும் அவர் நெய்யாற்றின் கரையில் இருந்து கல்லூ ரிக்கு செல்வதற்காக பஸ் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மான்யா, பஸ்சின் கதவு பக்கமாக நின்றார்.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் டிரைவர் வேகத்தை அதிகரித்து உள்ளார். ஒரு இடத்தில் எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.
அப்போது பஸ்சின் கத வோரம் நின்ற மான்யா, நிலை தடுமாறி பஸ்சில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஆனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பஸ் அதி வேகமாக சென்றதாலும் மான்யா தவறி விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.
பஸ் டிரைவருக்கும் இதுபற்றி தெரியாததால் அவரும் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்த மாணவி மான்யா வை அக்கம் பக்கத்தினரும் வாகன ஓட்டிகளும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாணவி மான்யா, பஸ்சில் இருந்து தவறி விழுந்ததை சிலர் வீடியோவாக எடுத்து உள்ளனர். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு தான் மாணவி மான்யா பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட விவகாரம் பலருக்கும் தெரியவந்தது.டிரைவரின் அஜாக்கிருதையும் அதி வேகமும் தான் சம்பவத்திற்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
- மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
- கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்
கன்னியாகுமரி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.
உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.
அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை மாட்டுத்தாவணியில் ஓடும் பஸ்சில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ்சின் இருக்கையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் பிணமாக கிடந்தவர் மேலூர் அருகே உள்ள எஸ்.கல்லம்பட்டியைச் சேர்ந்த சேக் தாவூத் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இதய நோய்க்காக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த சேக் தாவூத் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மதுரையில் வேலை தேடுவதற்காக சம்பவத்தன்று தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
- அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மலையனூரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி கோகிலா. சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். விருத்தாசலம் வந்து பஸ்சில் இருந்து இறங்கியபின்னர் தனது கைப்பையை கோகிலா சோதனை செய்தார். அதில் இருந்த நெக்லஸ், செயின, மோதிரங்கள் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ேபாலீசில் புகார் செய்தார். அப்போது அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல் போன நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார்.
- அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
கடலூர்:
புதுவை மாநிலம் உழவர்கரை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் பலராமன். அவரது மனைவி கவிதா (வயது 45). இவர் மயிலாடுதுறையில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிதம்பரம் பஸ் நிலையம் வந்து இறங்கி னார். அப்போது தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார். அந்த டிராவல் பேக்கில் 10பவுன் நகை, பட்டுபுடவை ஆகியவை இருந்தது. திடீரென அந்த பெண் டிராவல் பேக்குடன் மாய மானார். அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.
- காலையில் எல்சிபாய் தனது மகனை கல்லூரியில் விட சென்றார்
- புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 46). இவரது மனைவி எல்சிபாய் (42).
இவர்களது மகன் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் தனது மகனை கல்லூரியில் விட சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக மண்டைக்காட்டில் இருந்து திங்கள்நகர் வந்த பஸ்சில் சென்றார்.
திங்கள்நகர் பஸ் நிலையம் வந்து இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி செயினை காணவில்லை. இதுகுறித்து எல்சிபாய் இரணியல் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்