search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்-மகன்"

    • சோழவந்தான் அருகே தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்லம் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவர் மனைவி உமாதேவி, மகன் செல்லப்பா ண்டியுடன் (27) வசித்து வந்தார். திருமணமாகாத இவர் பெயிண்டராக வேலை பார்த்தார். மதுபோதையில் தாய் உமாதேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இதே ஊரை சேர்ந்த செந்தில்(50) தட்டிகேட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் செல்லப்பாண்டி மற்றும் உமாதேவியை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து செந்திலை கைது செய்தனர்.

    • தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன், முருகம்மாள் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன் கார் ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    செங்கோட்டை தாலுகா அச்சன்புதூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 62). இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), உதயமூர்த்தி (38) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

    கார் விபத்தில் பலி

    சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று காலையில் முருகம்மாள் தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் அச்சன்புதூர்-சிவராம்பேட்டை சாலையில் சென்றார்.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகம்மாள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.

    சொத்து தகராறில் கொலை

    இதுகுறித்து இலத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், அது விபத்து இல்லை என்பதும், சொத்து தகராறில் முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன் காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. மோகனுக்கும், அவரது தாய் முருகம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் முருகம்மாளை காரை ஏற்றி கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் ஒருவரின் காரை வாங்கி கொண்டு நெல்லைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். முருகம்மாள் தனது இளையமகனுடன் சென்று கொண்டிருந்த நேரத்தில் அச்சன்புதூர் காட்டுப்பகுதியில் வைத்து காரால் இடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    கேரளா தப்பியோட்டம்

    இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது மோகன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.

    • தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    பவானி மூன் ரோடு கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிரியா (42). இவர்களது மகன் சஞ்சூதீப் (13). பிரியா சின்ன பெரிச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.

    அவர்கள் சித்தோடு செல்லப்பம்பாளையம் பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தாய்-மகன் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சை க்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதேபோல் பவானி, ஜம்பை, சின்ன வடமலை பாளையம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (46). டைலர். இவர் தனது நண்பர் பூவேந்திரன் என்பவருடன் மொபட்டில் பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் ஆறுமுகம் மற்றும் பூவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயமானர்.
    • அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 36). இவரது மனைவி சரளா (வயது 27). இவர்களது மகன் அஸ்வந்த் (வயது 4). சம்பவத்தன்று சரளா தனது மகன் அஸ்வந்துடன், தனது தாய் வீடான வில்லியநல்லூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து மனைவி மற்றும் மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

    ×