search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூடோ"

    • இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக இன்று கராத்தே, ஜூடோ, குத்து சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

    பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்து எடுத்து வாரத்தில் 2 நாட்கள் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்க செய்து, வெற்றி பெற வைப்பதுதான் இலக்காகும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

    பெரம்பூர், ராயபுரம், தண்டையார் பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவொற்றியூர் தொகுதியில் தலா ஒரு பள்ளி வீதம் கராத்தே பயிற்சி கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.

    அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.

    4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான  போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ், நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர்.
    • தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. டேக்வோண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் தேவேஷ் காளிதாஸ் தங்க பதக்கமும், சுபாஷினி வெள்ளி பதக்கமும் , பிரணவ், ஜீவா, மாணவி ஹர்சிதா ஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ் மற்றும் நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோகுல சுதன், திருமலைவிஸ்வா, சிவபிரதீப் ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர்.

    மேலும் மாணவர் செண்பகநாதன் வெள்ளி பதக்கமும், ஜெய்சன் நீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜீடோ போட்டியில் மாணவர் மகேஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர். 

    • தேசிய அளவிலான ஜூடோ போட்டி
    • பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய அளவிலான ஜூடோ போட்டி

    பெரம்பலூர்,

    தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு, தமிழ்நாடு ஜூடோ அணிகளுக்கான போட்டியானது பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது. தமிழக அளவில் 684 மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு பள்ளி கல்வி துறையின் மூலமாக பங்குபெற அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதன் துவக்க விழாவிற்கு ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் நிறுவன துணைத்தலைவர் விவேகானந்தன் முதல்வர் கலைச்செல்வி, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் உடற்கல்வி இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், மணி, பாஸ்கர் மற்றும் பல்வேறு பள்ளியை சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

    • அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
    • ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.

    உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

    கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

    உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.

    உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.

    ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

    ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

    ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

    • ராமநாதபுரத்தில் ஜுடோ தேர்வு போட்டி 21-ந் தேதி நடக்கிறது.
    • மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை ஜுடோ பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் வருகிற 21-ந் ேததி (வெள்ளிக் கிழமை) காலை 8 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுப் போட்டி யில் கலந்து கொள்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், சான்றளிப்பு கையொப்பத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    இதில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவ, மாணவி களுக்கு பயிற்சியாளர் வாயிலாக தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஜுடோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர்.

    தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது. இந்த வாய்ப்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் துலிகா மான் வெள்ளி வென்றார்.
    • இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

    6-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கத்துக்கான சுற்றில் இன்று விளையாடினார்.

    இந்த போட்டியில் துலிகா மான், ஸ்காட்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார். இதன்மூலம் துலிகா மான் வெள்ளி வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×