என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண்மை துறை"
- ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
- நெல் பயிரை காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம்.
ஆழ்வார்குறிச்சி:
கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள கார் நெல் பயிரை கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், வேளா ண்மை உதவி அலுவலர்கள் அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆழ்வார்குறிச்சி-2 (செங்கானூர் முதல் கருத்தப்பிள்ளையூர் வரை) சாகுபடி செய்திருந்த ஐ.ஆர்.-50 நெல் பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. நோய் தாக்குதலால் நெல் பயிர் அங்காங்கே காய்ந்து வைக்கோலாக மாறி வருகிறது. இதிலிருந்து நெல்பயிரை பாதுகாக்க புப்ரோபுசின் -300 மில்லி (அல்லது) தையோ மெத்தாக்ஸைம்-100 கிராமுக்கு டிரைசைக்குளோஜோல்-120 கிராம் ஒரு ஏக்கர் என்ற விகிதா சாரத்தில் கலந்து மருந்தை தெளித்து கட்டுப்ப டுத்தலாம். மேலும் நெல் வயலில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்தல் மற்றும் நெல் பயிரை அங்காங்கே விலக்கி விட்டு காற்றோட்டமாக வைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பாது காக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தெரிவித்தார். ஆய்வின் போது விவசாயிகள் சண்முகநாதன், மாரிமுத்து தலைமையில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.
- இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது.
ராஜாக்கமங்கலம் :
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை நலத்துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நோக்கத்தில் குமரி மாவட்ட உழவர் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் நடைபெற்றது.
இப்பயிற்சியினை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் துறை இணை இயக்குனர் வாணி முன்னிலை வகித்தார். வேளாண் துறை துணை இயக்குனர் ஆல்பட் ராபின்சன் 6 நாள் நடைபெற்ற முகாமிற்கு தலைமை ஏற்று நடத்தினார். முகாமில் துணை இயக்குனர் கீதா மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.பயிற்சியில் ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், தக்கலை, திருவட்டார், மேல்புறம், முஞ்சிறை ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 28 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையம் வேளாண் துறை விற்பனை நிலையம் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், தொழில்முனைவோர் ஆக்குதல் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச மதிய உணவு மற்றும் தேநீர் மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர் சுபாஷ் செய்திருந்தார்.
- தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை.
- நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் அறுவடை செய்யலாம்.
கடையம்:
கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்டு ள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையம் வட்டாரத்தில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கடனா மற்றும் ராமநதி அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை.
இந்த காலகட்டத்தில் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்ய நெல் நாற்று விடும் பணி நடக்கிறது. பின்வரும் காலங்களில் மழை பெய்ய தவறி விட்டால் நெல் பயிரை காப்பாற்ற முடியாது. எனவே விவசாயிகள் குறைந்த வயது நெல் ரகங்களான ஐ.ஆர். 50, ஆடுதுறை 45 போன்ற நெல் ரகங்கள் அல்லது தண்ணீர் தேவை குறைவாக உள்ள உளுந்து, சோயா மொச்சை, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து தண்ணீரை சேமித்து கொள்ளலாம்.
மேலும் நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நாற்று பாவி நடவு செய்யாமல் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் நெல் பயிரை அறுவடை செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூலி பணியாளர்களின் வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது என தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழ்நாடு அரசு ஏ.ஐ.டி.யூ.சி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு ஏ.ஐ.டி.யூ.சி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. பண்ணை சங்க மாநில பொது செயலாளர் அரசப்பன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், அரசு வேளாண்மை துறை பண்ணைகளில் தின கூலியாக பணிபுரிபவர்களை வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது.
தற்போது இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதால் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு தொடர்ந்து இவர்கள் வேலை பார்த்து வரும் பண்ணைகளில் பணிபுரிய பண்ணை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டுமென்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ராதா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொருளாளர் கோவிந்த ராஜன், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் பானுமதி, குணசேகரன், பருத்திவேல், வெள்ளைச்சாமி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களையுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளுர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும்
- உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பயிரிட ஆர்வமுள்ள விவசாய பெருமக்கள் இந்த இனிய வாய்ப்பினை பயன்படுத்தி இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் இணைந்து நடத் தும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின் நோக்கமானது பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களையுடைய பாரம் பரியமிக்க பல்வேறு உள்ளுர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க முடியும். எனவே பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை வேளாண் விஞ்ஞானிகளுக்கு எடுத்துரைக்க ஏதுவாக வேளாண்மை உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆண்டுக்கு மூன்று முறை உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன.
இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் வேளாண் துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் உழவர் பெருமக்கள், அட்மா உழவர் நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவ கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.
இதில் வேளாண் அறிவியல் மையம் திருப்பதிசாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உள்ளூர் பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படும். விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பல்வேறு பயிர்களின் உயர்தர உள்ளூர் ரகங்களின் விளை பொருட்களையும் இதர விளை பொருட்களையும் காட்சிப்படுத்திட உள்ளனர்.
எனவே உள்ளூர் பாரம் பரிய ரகங்களை பயிரிட ஆர்வமுள்ள விவசாய பெருமக்கள் இந்த இனிய வாய்ப்பினை பயன்படுத்தி இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கருங்குளம் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பாசிபயறு 15000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- இலைப்புள்ளி நோயானது இலைகளில் சிறிய, சிறிய வட்டப்புள்ளிகளாக தோன்றும்.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து மற்றும் பாசிபயறு சுமார் 15000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் உளுந்து பயிரில் ஒரு சில கிராமங்களில் மஞ்சள் தேமல் நோய், துரு நோய், இலைபுள்ளி நோய் ஆகிய நோய்கள் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோய்களை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மஞ்சள்தேமல் நோயின் அறிகுறியானது இளம் இலைகளின் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும். பின்னர் இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும் பச்சையும் கலந்த பகுதிகள் தோன்றும்.
நோய்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இலைகள் மற்றும் காய்கள் முழுவதும் மஞ்சளாக மாறிவிடும். இந்நோயினை கட்டுப்படுத்த ஆரம்ப கால அறிகுறி தோன்றிய உடனே செடிகளை வேருடன் பிடுங்கி எரித்து விட வேண்டும். வயலில் ஹெக்டருக்கு 12 எண்ணம் என்ற வீதத்தில் வெள்ளை ஈக்களை மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1கிராம் போராக்ஸ் மற்றும் 10சதவீத நொச்சி இலைச்சாறு கலந்த கரைசலை தெளிக்க வேண்டும். வேம்பு சார்ந்த பூச்சி கொல்லியான அசாடிராக்டின் 300 பிபிஎம் லிட்டருக்கு 5 மி.லி. அல்லது எக்டருக்கு 50கிராம் தையோமீத்தாக்சம் 25மி.லி. அல்லது 50மி.லி. இமிடாக்குளோப்ரிட் 17.80 ஆகிய பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை கைதெளிப்பான், பேட்டரி கைதெளிப்பான் அல்லது தெளிப்பான மூலம் காலை,மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
ஒன்றை இலைத்துரு நோயின் அறிகுறியானது இலைகளின் அடிப்பக்கத்திலும், மேல் பாகத்திலும் ஆரஞ்சு கலந்த துருப்புள்ளிகள் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடுவதால் காய்ப்பு மிகவும் குறைந்து விடுகிறது.
மான்கோசப் ஏக்கருக்கு 800 கிராம் அல்லது புரோபிகோனசோல் ஏக்கருக்கு 200மி.லி. நனையும் அளவிற்கு கைதெளிப்பன் மூலம் கந்தகம் ஏக்கருக்கு 1000கிராம் இந்நோயினை கட்டுபடுத்த வேண்டும்.
இலைப்புள்ளி நோயின் அறிகுறியானது இலைகளில் சிறிய, சிறிய வட்டப்புள்ளிகளாக தோன்றும். இப்புள்ளியானது சாம்பல் நிறமாக நடுவிலும் அதனைச் சுற்றி பழுப்பு நிற வளையத்துடனும் காணப்படும். நாளடைவில் இலைகள் காய்ந்து கருகி உதிர்ந்து விடும். கார்பன்டசிம் ஏக்கருக்கு 200கிராம் அல்லது புரோபிகோனசோல் ஏக்கருக்கு 200மி.லி. என்ற அளவில் கைதெளிப்பன் மூலம் தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.12 லட்சம் மதிப் பில் ரூ.85 ஆயிரம் மானியத்தில் விசை உழுவை எந்திரம்
- (Plastic Crates), ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய ஏணி (Ladder) ஆகியவை 50 சதவீத மானியம் என மொத்தம் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள்
நாகர்கோவில்,:
தோவாளை சகாய நகர் பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதி வுத்துறை அரசு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்க லைத்துறையின் சார்பில் விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜோதி நிர்மலாசாமி பேசிய தாவது:-
சகாயநகர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலை ஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.12 லட்சம் மதிப் பில் ரூ.85 ஆயிரம் மானி யத்தில் விசை உழுவை எந்திரத்தினையும், தோவாளை வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.21 லட்சம் மதிப்பில் விசை உழுவை எந்திரத்தினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.1,500 மதிப்பிலான கைத்தெளிப்பான் 50 சதவீதம் மானியத்திலும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விசைத்தெளிப்பான் சதவீதம் மானியத்தில் ஒரு 50 வழங்கப்பட்டதோடு, 3 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங் கப்பட்டது.
மேலும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.500 மதிப்பிலான மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு (Head Light). ரூ.7,500 மதிப்பிலான நெகிழி கூடைகள்
(Plastic Crates), ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய ஏணி (Ladder) ஆகியவை 50 சதவீத மானியம் என மொத்தம் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளி களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தோவாளை ஊராட்சி ஒன்றி யம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பழுத டைந்த வீடுகளை சரி செய் யும் பணியினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு பணி களை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விசுவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவல கத்தினை ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குநர் ஹனி ஜாய் சுஜாதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசா யம்) வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஜோஸ், விவசாய பெருமக்கள் உட்பட துறைசார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டார்கள்.
- 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று தென்னங் கன்றுகள் வீதம் 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி அலுவலர் தீப்சீலா தலைமை வகித்தார்.கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார் .விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசு,ஆகியோர் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் வார்டு மெம்பர்கள், மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு, ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்