என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருடியவர் கைது"
- சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
- அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார்.
சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார். இதை ஊழியர்கள் சி.சி.டி.வி கேமிராவில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்து செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சபியுல்லாகான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- காலை எழுந்து பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
- செல்வராஜ் (40) என்பவர் வாசீமின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வாசீம் (வயது26). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை எழுந்து பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து வாசீம் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பாகலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வாசீமின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
- டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்
- ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.
ஈரோடு,
கோபி கோடீஸ்வரா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(35). இவர் நேற்று அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கோபி பஸ் நிலையம் சென்றார்.
அப்போது அங்கு இருந்த டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்.
மஞ்சுநாதனின் மோட்டார் சைக்கிளை ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்த மஞ்சுநாதன் கூச்சல்போட அக்கம்பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த நபர் கோபி நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த முருகேசன்(40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவரது மனைவி கோமதி. இவர்கள் சொந்தமாக அதே பகுதியில் ஹாலோ பிளாக் கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை கடையை திறப்பதற்காக கணவன், மனைவி சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் ஹாலோ பிளாக் செய்யும் மெஷினை திருடி கொண்டு ஓட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அவர் செய்யாறு அடுத்த சின்ன செங்காடுவை சேர்ந்த தனசேகர் (40)என்பது தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்ட தனசேகரை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் திருட்டு சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையின் சுவரில் துளை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ஹபீப் (56) என்பவர்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த டேகிஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அபு (வயது 48). இவர் திருப்பத்தூர் சாலையில் செருப்பு மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அபு நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் சுவரில் துளை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1,500 திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தருமபுரி நகர போலீசில் அபு புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் அதே பகுதியை சேர்ந்த ஹபீப் (56) என்பவர்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூ.1,500-ஐ திருட சுவற்றில் துளை போட்ட சம்பவம் நகைச்சுவையாக பேசப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது
புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி முத்து விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (36). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
இவர் சம்பவத்தன்று டானா புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் டீ குடிக்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு டீ குடிக்க கடைக்குள் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதி அம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சந்த கடை பகுதி அருகே புளியம்பட்டி போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார்.
அவரை விசாரித்ததில் அவர் அந்தியூர் அடுத்த செம்புளி ச்சாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.
- கேத்தனூரில் இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது.
- 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளது. இங்கு உள்ள இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து காற்றாலையின் மேலாளர்கள் ரமேஷ் கண்ணன், கார்த்திக் பிரபு ஆகியோர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் 4 பேர் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேத்தனூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகன் கவியரசு (வயது 25), தங்கராஜ் மகன் தீபக்( 25), காசிராஜா மகன் தனபால் (25), ராஜாமணி மகன் சதீஷ் (25) என்பதும் காப்பர் கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது.அவர்களிடமிருந்து 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்