என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலவச கண் சிகிச்சை முகாம்"
- சிவகங்கை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- இந்த முகாமில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார் பில், அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்க ளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற் றும் இலவச கண் சிகிச்சை முகாம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப் பினர் பிஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்து, பார்வை யிட்டனர். அப்போது வட்டா ரப் போக்குவரத்து அலுவ லர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் கரைக் குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாக னங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவைக ளின் ஓட்டுனர்க ளுக்கு, சாலை பாதுகாப்பு தொடர் பான பல்வேறு விழிப்பு ணர்வு கருத்துக்கள் எடுத்து ரைக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கின்ற வகையில், ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ பரிசோதனைகள் இம் முகாமில் மேற்கொள்ளப் பட்டது.
இதில், மாவட்டம் முழு வதும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர். இம்முகாமினை, சிவ கங்கை வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தியது.
- பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது.
- மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், புளியங்குடி மருதம் மாடசாமி கலைவாணி தொண்டு அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தியது.
முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து துறை சுந்தர் ராஜ், மருதம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் முகேஷ் சிங் மாடசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், புளியங்குடி தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வருவாய் துறை அதிகாரி அருண்குமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் மருதம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருதம் தொண்டு நிறுவன நிர்வாகி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.
- நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நத்தம்:
நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வேலம்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
இதற்கு வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராசு, நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதி குடகிப்பட்டி அழகர்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
- பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியம் வீரசிகாமணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக லென்ஸ், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாரிசாமி, நிர்வாகிகள் முருகையா, வைரமுத்து, வெள் ளைச்சாமி, வேலுத்தாய், முனியம்மாள், முக்கையா, தர்மராஜ், சந்திரன், ஈஸ்வரன், சந்திரசேகர், ஹைதர்அலி, கடல்துரை, ராமகிருஷ்ணன், நடராஜன், பாஸ்கர், மதியழகன், பூக்குமார், கருப்பசாமி வீரபாண்டி, கணேசன், முருகன், கிருஷ்ணன், சண்முகையா, குருசாமி, அனுசிய பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
- 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்
- ஏராளமானனோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அமரர் மு.க.மெய்ஞானம்- வசந்தி அம்மாள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.எம்.ராஜேந்திரன், இயக்குனர் பாபு, தலைவர் தேர்வு ரங்காவாசுதேவன், சி.கண்ணன்,மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண் சிகிச்சை முகாமை கே.எம்.ஜி.கல்வி நிறுவன ங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் ஆர்.கே.மகாலிங்கம், செ.கு.வெங்கடேசன், அரிகிரு ஷ்ணன், அன்பு அன்பரசன் உள்பட ஏராளமான ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
முகாமில் 650 பேர் கண் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
- கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
- 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருபானந்த வாரியார் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி கிருபானந்த வாரியார் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தொழில் அதிபர்கள் பிரதீப் குமார், கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சமூக ஆர்வலர் பானுமதி வரவேற்றார்.
இந்த முகாமில் ராஜேஷ் கண் பரிசோதனை மைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் பள்ளித் தாளாளர் சுரேஷ், நிர்வாகிகள் சரவணன், கார்த்திக், முதல்வர் வாணி ஸ்ரீதர், தலைமை ஆசிரியை தீபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
தேனி:
தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தேனி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி, பாண்டியராஜன் உள்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்