என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி மாவட்ட கோர்ட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்
Byமாலை மலர்7 Aug 2022 12:24 PM IST
- தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
தேனி:
தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தேனி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி, பாண்டியராஜன் உள்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×