என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில்வே ஊழியர்"
- எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
போரூர்:
சென்னை ஐ.சி.எப்., மற்றும் தெற்கு ரெயில்வேயில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகம் அருகே திரண்டனர். நீண்டகாலமாக பணி நிரந்தரம் செய்யாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வழங்குவதாகவும், இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி தலைமை தேர்தல் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
- மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.
சென்னை:
தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகா சபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-
ரெயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாமர, ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய பென்சன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல், ஓய்வு பெறும்போது கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர். ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரெயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.எப்.யில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷியா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரித்து கொடுக்க உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.
பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகிற 21, 22-ந் தேதி மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.
இதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்
நாகர்கோவில் :
பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதி துண்டான நிலையில் நேற்று காலையில் கிடந்தது. இதை பார்த்து காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்ட தகவல் மாவட்டம் முழுவதும் பரவி யது. இதையடுத்து விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், தோவாளை வட்டார காங் கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.
போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். இது தொடர்பாக அருமநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சஜூன் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்தனர்.
பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது மதுபோதையில் ராஜீவ் காந்தி சிலையை சேதப்ப டுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சஜூனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜூன் நாகர்கோவில் ரெயில்வே யில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
- கென்னடிக்கு ஜெசிமோள் மீது முன் விரோதம் ஏற்பட்டது.
- ஜெசிமோள் இரணியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெசிமோள் (வயது 51). இவரது பக்கத்து ஊர் வர்த்தான்விளையை சேர்ந்தவர் ஜாண் சுந்தர் சிங் என்ற கென்னடி (55), ெரயில்வே ஊழியர்.
கடந்த அக்டோபர் மாதம் இங்கு ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தலில் கென்னடி மனைவி ஜெனிட்டா செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது கென்னடி ஜெனிட்டாவுக்கு ஆதரவாக செயல்பட ஜெசிமோளிடம் கூறினார். இதனை ஜெசிமோள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கென்னடிக்கு ஜெசிமோள் மீது முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி ஜெசிமோள் வீட்டு முன் நிற்கும்போது அங்கு வந்த கென்னடி, அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெசிமோள் இரணியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த கோர்ட் கென்னடி மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் கென்னடி மீது பெண் வன்கொடுமை உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் நிலையத்தில் 8 டிக்கெட் கவுண்டரில் தற்பொழுது 3 கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்கள் வழங்குகின்றனர்
- டிக்கெட் கவுண்டர்களில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை
நாகர்கோவில் :
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ரெயில் நிலையத்தில் 8 டிக்கெட் கவுண்டர்கள் உள்ளது. தற்பொழுது 3 கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்கள் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் கவுண்டரில் வட மாநில ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார்.
அப்போது டிக்கெட் எடுக்க வந்த பயணி ஒருவரின் சந்தேகங்களுக்கு பணியில் இருந்த வட மாநில ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் பயணிகளுக்கும் வடமாநில ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அங்கிருந்த சக பயணிகள் வீடியோவில் பதிவு செய்தனர். தற்பொ ழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது. நடந்த சம்பவம் குறித்து ரெயில் பயணிகள் ெரயில்வே அதிகாரியிடமும் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் பயணிகளுக்கிடையே நடந்த சம்பவம் குறித்துரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டிக்கெட் கவுண்டர்களில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. டிக்கெட் எடுக்க வருகை தரும் பயணி கள் சிரமத்திற்கு ஆளா கிறார்கள். எனவே டிக்கெட் முன் பதிவு மையங் களில் வட்டார மொழி தெரிந்த பணியா ளர்களை நியமனம் செய்ய வேண் டும் என்று சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
- பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.
- சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் கீப்பராக அம்பையை சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வழக்கம்போல் அவர் பணியில் இருந்தார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற பயணிகள் ரெயில் அந்த வழியாக சென்றபோது ரெயில்வே கேட்டை மூடி திறக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.
பின்னர் அவர் தனது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த அறைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அவர் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். உடனே பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்த பெண் கேட் கீப்பரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அருகில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கேட்டின் அருகே மேம்பால பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களில் யாரேனும் இதில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பணியில் இருந்த ரெயில்வே பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் பல நாட்களாக நோட்டமிட்டு ஊழியர் தனியாக இருப்பதை அறிந்து நேற்று உள்ளே புகுந்திருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
- பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமல ம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி விஜயலட்சுமி. . தற்போது ஜெயவரதன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளார். விஜயலட்சுமி தனியாக கொமலம்பட்டு பகுதியில் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் டி.பரங்கனி பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 22) கூலித்தொழிலாளி. இவர் நேற்று கொமலம்பட்டு பகுதிக்கு வந்தார். விஜயலட்சுமி கடையில் இருப்பதை பார்த்து அவரது வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார். நகையை திருடிச் சென்ற பின்னரும் விஜயலட்சுமியின் கடையின் அருகிலேயே இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.அப்போது விஜயலட்சுமியின் வீட்டில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் விஜயலட்சுமி வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் மூட்டையாக கட்டி வைத்திருந்த 20 பவுன் நகையை கவுதமிடம் இருந்து மீட்டனர். மீதமு ள்ள 3 பவுன் நகையை கவுதமிடம் கேட்டதற்கு அவர் 20 பவுன் நகை மட்டும் தான் திருடினேன் என்று கூறினார். இதனால் பொதுமக்கள் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமை மீட்டு வழக்கு பதிவு செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் நகை மீட்டு விஜயலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
- கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் பகுதியை சேர்ந்த வர் கதிர்வேல் (வயது 65) இவர் உளுந்தூர்பேட்டை ரெயில்வே நிலையத்தில் ஊழிய ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று கதிர்வேல் பாண்டூ ரிலிருந்து அரளி செல்லும் சாலை ஓரமாக நடந்து அந்த பகுதி யில் உள்ள தனது வயல்வெளிக்கு சென்றார். அப்போது அவ ருக்கு பின்னால் வேக மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து இந்த விபத்து ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை போட்டு தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் விக்னேஷ் (வயது 32). ரெயில்வே ஊழியரான இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுபா கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள பெற்ேறார் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.மனைவியிடம் பேசியும் அவர் வர மறுத்துவிட்ார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்