search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிராதித்ய சிந்தியா"

    • நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன.
    • பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலையை, ஸ்ட்ரீட் கஃபேயின் விலைப்பட்டியலோடு ஒப்பிட்ட புகைப்படத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    காபி, டீ, லஸ்ஸி மற்றும் டோஸ்ட் ஆகியவற்றுடன் இந்தியாவில் 1 ஜிபி டேட்டாவின் விலையை ஒப்பிடும் ஒரு தெருவோர கஃபேயின் படத்தை தொலைத்தொடர்புத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "இந்தியாவில் 1 ஜிபி டேட்டா ஒரு கப் காபியை விட மலிவானது" என்று எழுதப்பட்டுள்ளது.

    சமீபத்தில், மக்களவையில் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அழைப்பின் விலை 53 பைசா என்று கூறிய அவர், நாட்டில் உள்ள அனைத்து கட்டணங்களும் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்று. ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.9.12க்கு உலகிலேயே மலிவான டேட்டா விலையை இந்தியா வழங்குகிறது என்று கூறியிருந்தார்.

    ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
    • இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்

    கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.

    குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

    மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.

    இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • கோவிட் பெருந்தொற்று விமான போக்குவரத்து துறையை மிகவும் பாதித்தது
    • தொடர்ந்து 3 நாட்கள் விமான போக்குவரத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது

    கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நலிவடைந்த பல தொழில்களில் சுற்றுலா துறையும், அதை சார்ந்திருந்த விமான போக்குவரத்தும் ஒன்று. பல உலக நாடுகளில் 2020 காலகட்டத்தில் சரிவடைந்த விமான போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகம் தற்போது வரை முழுமையாக சீரடையவில்லை.

    ஆனால், இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தும், விமான நிறுவனங்களின் வருமானமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4,63,417 பேர் இதுவரை நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.

    "நேர்மறை கொள்கைகள், வளர்ச்சியை நோக்கிய இலக்குகள் மற்றும் பயணிகளுக்கு இந்திய விமான சேவையில் உள்ள நம்பிக்கை காரணமாக, ஒவ்வொரு விமான பயணமும் ஒரு புதிய உச்சத்தை தொடுகிறது" என சிவில் விமான போக்குவரத்து துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    இது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 


    விமான பயண போக்குவரத்து வியாழக்கிழமை (நவம்பர் 23) கணக்கின்படி 5998 என உள்ளது.

    நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து உள்ளூர் விமான போக்குவரத்து, எண்ணிக்கையின்படி புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

    தீபாவளி பண்டிகை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டி ஆகியவை காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த புதிய சாதனைக்கு ஒரு காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் டாடா குழுமமும் இண்டிகோ குழுமமும் 90 சதவீத சந்தையை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது.
    • வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆவார். இவர் குவாலியரில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை காண்பிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் டிரோனை இயக்கி உள்ளார்.

    குவாலியரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை காட்டிய டிரோன் வானத்தில் பறந்தது. இதுதொடர்பான வீடியோவை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுதொடர்பான அவரது பதிவில், ஆளில்லா விமானம் மூலம் குவாலியரில் நடைபெற்றுள்ள 9 வளர்ச்சி பணிகளை காட்சிப்படுத்தியது மறக்க முடியாத தருணம்.

    இந்த திட்டங்கள் குவாலியர் மக்களுக்கு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் சின்னமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.
    • காங்கிரஸ் ஆட்சியின் போது வடகிழக்கு மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை சிந்தியா நினைவூட்டினார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் பிரதமர் மோடி இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது கடந்த மூன்று தினங்களாக விவாதம் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் மக்களவைக்கு வந்தார். ஆனால் அவையில் வழக்கம்போல் அமைதியற்ற சூழல் நிலவியது. கடும் அமளிக்கு மத்தியில் விவாதம் தொடர்ந்தது.

    பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்ததை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூரில் நடந்த வன்முறையை நாட்டில் உள்நாட்டுப் போர் என்று கூறி, இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை நினைவூட்டினார்.

    மேலும் அவர் பேசும்போது, 'பாராளுமன்றத்திற்கு வெளியே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்தார். ஆனால், பிரதமர் பாராளுமன்றத்தல்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் (எதிர்க்கட்சி) வலியுறுத்தினார்கள். எந்த தேதியிலும் நேரத்திலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று உள்துறை மந்திரி மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால், 17 நாட்களாக அவையை செயல்பட விடவில்லை' என்றார்.

    வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறப்பதாக காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கடை ஊழல், பொய், சமாதானம், ஆணவத்துக்கான கடை. அவர்கள் கடையின் பெயரை மட்டுமே மாற்றுகிறார்கள், ஆனால் தயாரிப்பு அப்படியே உள்ளது என்றும் சிந்தியா குற்றம்சாட்டினார்.

    • மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
    • சாத்தியக்கூறுகளை ஆராய விமான நிலையங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நோடி விமானப் போக்குவாத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 11-2-2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

    அக்கடிதத்தில், பினாங்கில் வாழும் தமிழர்கள் குறித்தும் பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பினையும் முதல்வர் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கும் பினாங்கிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

    இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு, தற்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவும். தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்திடவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கோரியிருந்தார்.

    முதலமைச்சலின் கடிதத்தைப் பரிசீலித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது 2-3-2023 நாளிட்ட கடிதத்தில், சென்னை மற்றும் பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இந்திய நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
    • 100 ஆண்டில் நாம் பார்க்காத மாற்றங்களை கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், புதிய இந்தியா-பல வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக அளவில் மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. 100 ஆண்டுகளில், நாம் பார்க்காத மாற்றங்களை, கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இன்று உலகளாவிய பிரச்சினைகளுக்கு இந்தியாவை நாடி வரும் சூழல் உண்டாகியுள்ளது. உக்ரைன், ரஷியா போர் பிரச்சினைக்கு, இந்தியாவால்தான் தீர்வு கொண்டுவர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது.

    விமான போக்குவரத்து துறையைப் பொறுத்தவரை உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்து கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் 7-வது இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடியின் கடந்த எட்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 147 விமான நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த மாதம் பிரதமர் மோடி 148-வது விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார்.

    அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200-க்கும் மேல் கொண்டு செல்ல திட்டம் உள்ளது. 2013-ல் 400 விமானங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.

    உலக அளவில் 5 சதவீதம் பெண் விமானிகள் உள்ள நிலையில் இந்தியாவில் 15 சதவீத பெண் விமானிகள் உள்ளனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பங்களிப்பு முக்கியமானது. இளைஞர்கள், பெண்கள் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

    • வெளியேறிய பின்னர் கட்சியை விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது.
    • கண்ணியத்தைக் காப்பாற்றிய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள்.

    அகர் மால்வா: 

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை இன்று மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா பகுதியை அடைந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடக பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது

    கட்சியை விட்டு வெளியேறிய பிறகு கண்ணியமான மௌனம் காத்த கபில் சிபல் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப அனுமதிக்கப்படலாம், ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

    கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளனர், எனவே அவர்களை திரும்பப் அழைக்கக் கூடாது. ஆனால் கட்சியில் இருந்து கண்ணியத்துடன் வெளியேறியவர்களும் உள்ளனர், மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை குறித்து அவர்கள் கண்ணியமான மவுனம் காத்து வருகின்றனர்.

    சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறிய எனது முன்னாள் சகாவும் மிக நல்ல நண்பருமான கபில் சிபலைப் பற்றி என்னால் நினைக்க முடிகிறது அவர், சிந்தியா மற்றும் சர்மாவைப் போல அல்லாமல் மிகவும் கண்ணியமான மௌனம் காத்துள்ளார்.

    எனவே, கண்ணியத்தைக் காப்பாற்றிய அத்தகைய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கட்சியை விட்டு வெளியேறி பின்னர் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது. ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான, 24 காரட் துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஜெயராம் ரமேஷின் கருத்துக்கு பதிலளித்த மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், சிந்தியா வலுவான கலாச்சார வேர்களைக் கொண்ட 24 காரட் தேசபக்தர் என்று குறிப்பிட்டுள்ளார். சிந்தியா மற்றும் சர்மா இருவரும் தங்கள் பணியில் 24 காரட் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளனர், ரமேஷின் கருத்துக்கள் பண்பாடு இல்லாதது, முற்றிலும் ஜனநாயகமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

    • பாஜக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிந்தியா பாதியில் வெளியேறினார்.
    • காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

    போபால்:

    விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிந்தியா, காய்ச்சல் காரணமாக பாதியிலேயே அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், தாம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தமக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்து வந்த அனைவரும் அருகிலுள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் மந்திரி ஜோதிராதித்யா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய பிரதேச பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இன்று மாலை 4:30 மணி விமானத்தில் டெல்லிக்கு திரும்ப அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சமூக வலைதளத்தில் பிரபலமானவர் பாபி கட்டாரியா என்பவர்.
    • இவர் விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட் பற்ற வைக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமானவர் பாபி கட்டாரியா. இவர் சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிக்கிறார். இந்த வீடியோ வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பு கூறுகையில், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், விதிகளை மீறி, விமானத்திற்குள் சிகரெட் புகைத்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபாய நடத்தையை ஒருபோதும் ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.

    • அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள்.
    • உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும்.

    மும்பை முதல் அகமதாபாத் வரை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவும், இணை மந்திரி வி கே சிங்கும் மெய்நிகர் வழியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி சிந்தியா, முன்பு விமானப் பயணம் மிக உயர் வகுப்பினருக்கானதாக இருந்தது என்றார். இப்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை காரணமாக மலிவான விமானப் பயணம் ஏழை எளியவர்க்கும் சாத்தியமாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

    கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்றும் உடான் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 425 வழித்தடங்கள், ஆயிரம் வழித்தடங்களாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    மேலும் 68 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதன் மூலமாக நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100 என்ற இலக்கை எட்ட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

    அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    ×