என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையல் எரிவாயு"
- பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
- எரிவாயுவை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
இன்று பெரும்பாலானோர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றனர். இந்தநிலையில் சில விஷயங்களைப் பின்பற்றினால், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த முடியும்..
* சமையல் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை எரிவாயு அடுப்பின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு சமையல் பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
* சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ஒரே சமயத்தில் பருப்பையும், அரிசியையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
* சமையல் பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் தீப்பிழம்பை குறைத்து வைத்தால் எரிவாயு குறைவாக காலியாகும்.
* உணவுப்பொருட்கள் வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால், எரிவாயு அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்தினால் எரிவாயு அதிகம் காலியாகாது.
அடுப்பு சரியாக எரியவில்லை என்று எரிவாயு வரும் பர்னரை குத்தி குத்தி பெரிது செய்தால், பிழம்பு சிவப்பாக எரியும், எரிவாயுவும் வீனனாகும்.
- மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார்.
- நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்ததுடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.
இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது.
- சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும்.
எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாடுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றியமைத்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு உருளை புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 21 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சமையல் எரிவாயு உருளை இன்று முதல் ரூ. 84 குறைக்கப்பட்டு, ஆயிரத்து 937 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ஆயிரத்து 118 ரூபாய் 50 பைசா கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும். இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு உருளை வர்த்தக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகம் என்று இரண்டு விதங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை புதிய விலை
சென்னை: 2 ஆயிரத்து 21 ரூபாய் 50 பைசா
மும்பை: ஆயிரத்து 808 ரூபாய் 50 பைசா
புது டெல்லி: ஆயிரத்து 856 ரூபாய் 50 பைசா
கொல்கத்தா: ஆயிரத்து 960 ரூபாய் 50 பைசா
- இனி வரும் நாட்களில் இயற்கை எரிவாயுவின் விலை கணிசமான அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.
- உலக நாடுகள் இடையே இயற்கை எரிவாயுவின் விலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்படும்.
புதுடெல்லி:
இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக மத்திய எரிவாயு துறையின் மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு கொள்முதல் செய்வதில் புதிய முறையை பின்பற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 10 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது. இதுபோல சி.என்.ஜி. எரிவாயுவின் விலை 6 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. அறிவிப்பு வெளியானதும் இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்த முடிவின்படி எவ்வளவு இணைக்கப்படும் என்பது மாதாந்திர பயன்பாட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்பட உள்ளது.
இதுபோல தற்போதைய முதன்மை எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம் இனி வரும் நாட்களில் இயற்கை எரிவாயுவின் விலை கணிசமான அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.
புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது இயற்கை எரிவாயுவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது ஏற்படும் இழப்புகள் குறைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இதுபோன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும்போது நுகர்வோருக்கு விலையை குறைத்து கொடுக்க வாய்ப்பு ஏற்படும்.
உலக நாடுகள் இடையே இயற்கை எரிவாயுவின் விலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் தான் இந்தியாவிலும் இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்றவும் இயற்கை எரிவாயு துறை முடிவு செய்துள்ளது, அதன்படி பழைய முறைக்கு பதில் புதிய முறைப்படி மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்யும்போது இனி வரும் ஆண்டுகளில் கியாஸ் விலை கணிசமாக குறையும் என்றும் இதன்மூலம் உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பலன் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மந்திரி ஹர்தீப் பூரி டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், சர்வதேச எரிவாயு விலை உயர்வின் தாக்கத்தை இந்தியாவில் எரிவாயு விலையை குறைப்பதன் மூலம் எரிவாயு நுகர்வோரின் நலனை பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சி வரவேற்கத்தக்கது. என்று குறிப்பிட்டுள்ளார்.
- கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
- கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.
எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருவாரூர்:
திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை களை கண்டித்தும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.என்.அனிபா, மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ரகுபதி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பவானி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து எரிவாய்வு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
+2
- எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொன்னேரி:
பொன்னேரியில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை விளக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தின்போது மண் அடுப்பை பற்ற வைத்து அதில் சமைக்கும் கற்கால நிலைக்கு பெண்கள் சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார், இதில் நகரத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் மகிளா காங்கிரஸ் எழிலரசி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(27-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.
- பிளாஸ்டிக் பையில் உள்ள எரிவாயுவை சிறிய மின்சார பம்ப் உதவியுடன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பில் குறைந்து வருவதால், மக்கள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை வீடியோவில் காண முடிந்தது.
நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் இயற்கை எரிவாயுவை இந்த பிளாஸ்டிக் பைகளில் நிரப்புகின்றனர். கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் அந்த பையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர். பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் ஒரு சிறிய மின்சார பம்ப் உதவியுடன் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இரண்டு சிறுவர்கள் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. "இந்த பிளாஸ்டிக் பைகள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சம் ஏற்பட்டாலும், சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏழைகளாகிய எங்களுக்கு வேறு வழியில்லை, என்கின்றனர் மக்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானது என்பதால், வீடியோவைப் பார்த்த பலரும் பாதுகாப்பு குறித்த கவலையை பதிவிட்டுள்ளனர். சிறிதளவு தவறு நேர்ந்தால்கூட வாயு கசிவு மற்றும் வெடிப்புக்கு வழிவகுக்கும் என்பதை பயனர்கள் குறிப்பிட்டனர். ''என்னால் இதை நம்ப முடியவில்லை. பாகிஸ்தானில் சரக்கு மற்றும் சேவை துறை என்ற ஒரு துறை இல்லையா? அடிப்படை பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டுமா, இல்லையா?'' என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிலிண்டர்களின் இருப்பு குறைந்ததால், விற்பனையாளர்கள் சப்ளையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்கு நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு இல்லை. எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய் உடைந்ததில் இருந்து சரிசெய்யப்படாமல் உள்ளது.
- மதுரையில் 27-ந் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன், எரிவாயு நுகர்வோர்கள், ஆயில் மார்கெட்டிங் கம்பெனி நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
- திருவொற்றியூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர்.
- சமையல் கியாஸ் உபயோகிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வினியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும்.
சென்னை:
சென்னையை அடுத்த மணலியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தின் மூலம் குருடாயிலை சுத்திகரித்து அதில் இருந்து பல்வேறு எண்ணெய் பொருட்கள் பிரித்து தயாரித்து வினியோகிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குருடாயிலை பல்வேறு வகையில் தரம் பிரித்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் என பல்வேறு எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றது.
சமீபத்தில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவொற்றியூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் சி.பி.சி.எல். ஆலையை ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆலையின் உற்பத்தி இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உற்பத்தி அவை குறைக்க அறிவுறுத்தியுள்ளது.
100 சதவீத உற்பத்தியை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதால் பெட்ரோல், சமையல் கியாஸ் டீலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தொழிற்சாலை உற்பத்தியை குறைத்தாலும் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாமல் தங்கு தடையின்றி எரிபொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையால் உற்பத்தி குறைக்கப்படும்போது வினியோகஸ்தர்களுக்கு சப்ளை தட்டுப்பாடு வராமல் நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பெட்ரோல், டீசல் உற்பத்தியை 25 சதவீதம் குறைக்கப்பட்டாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் எண்ணெய் நிறுவனங்கள் சப்ளை செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு வினியோகத்தை சீராக கண்காணிக்க வேண்டும் என்றார்.
அதே போல் சமையல் கியாஸ் உபயோகிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வினியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும்.
மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதோடு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று கியாஸ் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்