search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி"

    • அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை.

    திருப்பூர் :

    அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெயபால் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.

    ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்காமல் சீட்டில் தூங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து நடத்துனர் தேவராஜ் அவரிடம் பஸ் நிலையம் வந்து விட்டது, கீழே இறங்கவும் என்று கூறினார். ஆனால் அந்தப் பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர் அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பிணமாக இருந்தவரை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 52) என்பதும் வேலைக்காக இன்று காலை பஸ்சில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    சீனாவில் மீண்டும் கொேரானா பரவல் அதிக ரித்து உள்ள நிலையில் தமிழ கத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடு களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தை ஓட்டியுள்ள கேரளாவில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவ னந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும் டிரைவர் கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பஸ் களை இயக்கி வருகிறார்கள். பஸ் பயணி களும் கட்டா யம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவி லுக்கு வந்த அனைத்து பஸ் களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

    இதே போல் வடசேரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு செல்லும் பஸ்களிலும் டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். களியக்கா விளையை தாண்டி திருவனந்த புரத்திற்கு செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் பெரும்பா லான ஆஸ்பத்திரிகளிலும் முககவசம் கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆஸ்பத்தி ரிக்கு வரும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடந்த சில நாட்க ளாக கொரோனா பாதிப்பு எதுவும்

    இல்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சளி தொல்லை, மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள சுகாதார மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்

    கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதை யடுத்து தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்றனர்.

    ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    • தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன்..?
    • நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார்.

    அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு சம்பவத்தன்று ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் பிசினஸ் வகுப்பில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சங்கர் மிஸ்ரா இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென சிறுநீர் கழித்தார்.

    இதனால் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரின் உடை மற்றும் அவரது பையில் சிறுநீர்பட்டு நனைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.

    ஆனால் அவர்கள் பெண் பயணியை தொட மறுத்தனர். அவரது காலணி மற்றும் பை மீது கிருமி நாசினி தெளித்தனர்.மேலும் பைஜாமா மற்றும் கையுறையும் கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனக்கு இருக்கையை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் வேறு இருக்கை இல்லை எனக்கூறி அவருக்கு மாற்று இருக்கை கொடுக்க விமான பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

    விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் பயணி தன் மீது சிறுநீர் கழித்த தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிறிது நேரம் கழித்ததும் அந்த பெண், தொழில் அதிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார். இதனால் இருவரும் சமாதானமாகி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பவம் நடந்த அன்று சங்கர் மிஸ்ராவிடம் நடந்த விவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அந்த சமயம் அங்கு இருந்த பெண் பயணியை பார்த்த அவருக்கு கண்களில் இருந்து பொலபொல வென கண்ணீர் வடிந்தது. நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடுங்கள் என அவர் அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறினார்.

    நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார். ஆனாலும் என்னை பற்றி கேள்விபட்டால் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

    அதனால் தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். அந்த பெண் அவர் மீது மேலும் குற்றம் சுமத்தினால் கடினமாக இருக்கும் என நினைத்து நடந்ததை கெட்ட கனவாக எண்ணி புகார் கொடுக்காமால் சமாதான மாக சென்று விட்டார். இதனால் தொழில் அதிபர் தண்டணையில் இருந்து தப்பிவிட்டார்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
    • ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.

    இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.

    அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.

    நாகர்கோவில்:

    குழித்துறை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 52).

    இவர், சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து லூக்காஸ் ஊருக்கு புறப் பட்டார். நேற்று மாலை சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.

    இன்று காலை கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து லூக்காஸ் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் குழித்துறை செல்வதற்காக மற்றொரு ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது லூக்காஸ் பிளாட்பாரத்தில் திடீ ரென சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் லூக்காசை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லூக்காஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கொண்டு செல்லப்பட்டது. லூக்காஸ் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாட்ஜில் தங்கியிருந்த சுற்றுலா பயணி இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மேற்குவங்கம் முர்ஜிதாபாத்தை சேர்ந்தவர் அமலன் பதன் பதோ பாய். இவர் சிலருடன் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு பெருமாள் தெப்பம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்கிறது.
    • 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது.

    திருப்பூர்

    மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூரில் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தினமும் மாலை 4:20மணிக்கு சென்னையில் புறப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 7:10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 4:55க்கு மங்களூரில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 8:05 க்கு சென்னை செல்கிறது.சென்னையில் இருந்து மங்களூருக்கு (12685) செல்லும் போது, ஜோலார்பேட்டை - சேலம் இடையே மொரப்பூரில் இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் நிற்கிறது. அதே நேரம், மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது மதியம் 2:40க்கு சேலத்தை கடக்கும் ரெயில் மாலை 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது. மொரப்பூரில் நிறுத்தப்படுவதில்லை.

    இது குறித்து திருப்பூர் ெரயில் பயணிகள் கூறியதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ஜோலார்பேட்டைக்கு பயணிக்கும் ெரயில்களில் இன்டர்சிட்டி, சென்னை எழும்பூர் ஆகிய ெரயில்கள் மதியத்துக்கு முன்பாக மொரப்பூர் கடந்து விடுகிறது.மாலையில் கோவை எக்ஸ்பிரஸ், இரவில் சபரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வடமாநிலத்தில் இருந்து வரும் வாராந்திர ெரயில்கள் நின்று சென்றாலும், அவற்றில் ெரயில் பெட்டிகளில் கால் வைப்பதுக்கு கூட இடமிருப்பதில்லை. தர்மபுரி, பொம்மிடி, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர், திருவண்ணாமலை பகுதிக்கு மொரப்பூரில் இருந்து செல்வோர் பலர் உள்ளனர்.மங்களூரு செல்லும் போது நிறுத்தப்படும் ரெயில் சென்னை திரும்பும் போது நிறுத்தப்படாததால் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மங்களூரு - சென்னை ெரயிலை மொரப்பூரில் மாலையில் நிறுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    ×