search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாபிஷேகம்"

    • 3 சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர மூலஸ்தானத்தில் எழுந்தருளி காட்சி அளிப்பர்.
    • 3 சக்கரத்தாழ்வார்களும் சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார்.

    தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும்.

    இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர மூலஸ்தானத்தில் எழுந்தருளி காட்சி காட்சி தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனை தரிசிக்க முன்ஜென்ம கர்மவினைகளும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை ஆடி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களும் சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்த சிறப்பு அலங்காரமும் தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து முப்பெரும் தேவியர்களாக திகழும் மிகவும் பிரசித்தி பெற்ற உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன், கோலாலம்பூர் மகாலெட்சுமி, சிவ துர்க்கை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாரியம்மனுக்கு 11 லிட்டர் பால் மூலம் பாலாபிஷேகம் செய்தனர்.
    • 100 நெய்தீபம் ஏற்றி மணிப்பூர் மக்களுக்காக அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    தஞ்சாவூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டி தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் ஜோதி அறக்க ட்டளை ஏற்பாட்டில் தஞ்சை நகர பெண்கள் ஒன்றுகூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதுகுறிந்து அவர்கள் கூறுகையில்:- மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காகவும் மாரியம்மனுக்கு 11 லிட்டர் பால் மூலம் பாலாபிஷேகம் செய்து, 100 நெய்தீபம் ஏற்றி மணிப்பூர் மக்களுக்காக அர்ச்சனை செய்து வழிபட்டோம் என்றனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆனி மாத தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு தீர்த்தம், அட்சதை கற்கண்டு துளசிகள் மற்றும் புஷ்பங்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடவா ற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தா வனத்தில் இன்று ஆனி மாதம் கடைசி வியாழக்கிழமை மற்றும் ஆனி மாத தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் ,அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.

    பக்தர்களுக்கு தீர்த்தம், மிருத்திகை,அட்சதை கற்கண்டு துளசிகள் மற்றும் புஷ்பங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
    • தொடர்ந்து, 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதி அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மூலை அனுமார் வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    ஆண்டு தோறும் ஆனி அமாவாசை அன்று பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மூலை அனுமாருக்கு நடைபெறும் தேங்காய் அலங்காரத்திற்கு தேவையான தேங்காய் மட்டை மற்றும் தேங்காய்கள் வாங்கி தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனி அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்புக்குரியதாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை (சனிக்கிழமை ) காலை 7 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு தேங்காய்களான சிறப்பு அலங்காரமும் அதனைய டுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது. இந்த வழிப்பாட்டி ற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் , பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • தொடர்ந்து, கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகரில் எழுந்தருளி இருக்கும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.

    குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், அலகு காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேத்தி கடன் செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    108 சிவாலயம் முல்லை நகர், கிராமவாசிகள், விழா குழுவினர், மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அனுமன் ஜெயந்தி, தீபா வளி, பொங்கல் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி, வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார்.
    • மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். சிறிது தூரம் தேர் இழுத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கடந்த 6,7-ந் தேதிகளில் தேர் இழுக்–கப்–பட்டு நிலையை வந்தடைந்தது. இதையடுத்து தெப்பத்தேர், காமதேனு வாகனம், குதிரைவாகன உற்சவம் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை முன்னிட்டு சாமிக்கு வடமாலை சாத்துப்படியும்
    • அதனை தொடர்ந்து நல்லெண்ணெய் சீயக்காய் 1008 லிட்டர் தயிர், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசை, பவுர்ணமி ,அனுமன் ஜெயந்தி ,தீபாவளி ,பொங்கல், புத்தாண்டு நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

    அதன்படி மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை முன்னிட்டு சாமிக்கு வடமாலை சாத்துப்படியும், அதனை தொடர்ந்து நல்லெண்ணெய் சீயக்காய் 1008 லிட்டர் தயிர், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    அதன் பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பால்குட ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் காயரோ கணசுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    மஞ்சள் ஆடையுடன் பால்குடம் சுமந்து வந்த பக்தர்களின் ஊர்வலமானது நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத் தொடர்ந்து அங்கு அம்மனுக்கு பாலாபி ஷேகம் செய்து பக்தர்கள் தங்களது தை மாத கடைசி வெள்ளி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    • மதுரை தியேட்டர்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
    • மேளதாளம் முழங்க கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.



    காளவாசலில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் கோஷமிட்டபடி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர்.

    மதுரை

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய 2 திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரை யரங்குகளில் இன்று அதி காலை ரிலீஸ் செய்யப்பட்டது.

    மதுரையில் 19 தியேட்டர் களில் துணிவு திரைப் படமும்,14 தியேட்டர்களில் வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் துணிவு சிறப்பு காட்சிகள் தொடங்கின.முதல் காட்சியை காண தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் கூட்டம் களை கட்டியது.பட்டாசு வெடித்து கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளம் முழங்க ரசகர்கள் ஊர்வலமாக வந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் அதிகாலையில் விஜய் ரசிகர்களும் திரளாக பங்கேற்று தியேட்டர்களில் குவிந்தனர்.பின்னர் பட்டாசு களை வெடித்து மேள தாளம் முழங்க ரசிகர்களை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

    ரசிகர்களின் இந்த வெற்றி கொண்டாட்டத்தால் மதுரை தியேட்டர்களில் ரசிகர் களின் ஆரவாரங்களால் விசில் சத்தம் பறந்தது. ஒரே தியேட்டர்களில் அஜித்- விஜய் படங்கள் திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்களின் மோதலை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகை வரை இந்த 2 திரைப்படங் களுக்கும் சிறப்பு காட்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது .துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஆயிரம் ரூபாயை தாண்டி டிக்கெட்டுகள் ரசிகர் களுக்கும் பொது மக்களுக்கும் கொடுக்கப்படு வதாக தெரிய வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட தியேட்டர்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதுதவிர ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் ரசிகர் மன்றங்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார் இருந்து உள்ளது.இதனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை பொதுமக்கள் பொங்கலுக்கு வழக்கமான கட்டணத்தில் திரையில் பார்ப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டன. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து இன்று துணிவும், வாரிசும் திரைக்கு வந்து உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி யுடனும், ஆரவாரத்துடனும் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

    • ஆடிப்பூர விழா விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் பாலாபிஷேகம்- அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி சக்தி கொடியை ஏற்றி வைத்தார்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் 13-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூர பெருவிழாவிழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு 13-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது. இவ்விழா அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் 4.30 மணிக்கு கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு சக்தி கொடியேற்றுதல் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி சக்தி கொடியை ஏற்றி வைத்தார். கஞ்சிவார்த்தல்- பாலாபிஷேகம் அதன் பிறகு கஞ்சி வார்த்தலும், கருவறை அன்னைக்கு பாலாபிஷேகமும் நடந்தது.

    இதனை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கஞ்சி வார்க்கப்பட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் அரசு வக்கீல் சுப்பிர மணியன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தின சிகாமணி, துணை த்தலைவர் ராமமூர்த்தி, வேள்விக்குழு மாவட்ட பொறுப்பாளர்கள் திரிபுரசுந்தரி, மணிவாசகம், வட்டத்தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், சிகாமணி, மோகனகிருஷ்ணன், மணிகண்டன், மகாலிங்கம், முனுசாமி, முன்னாள் தலைவர் பழனிச்சாமி, வேள்விக்குழு நிர்வாகிகள் கார்த்திகேயன், மாரிமுத்து மற்றும் ஒன்றிய தலைவர்கள், மன்ற தலைவர்கள், வேள்விக்குழு தொண்டர்கள், செவ்வாடை பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் சக்தி பீட தலைவர் வசந்திசம்பத், துணைத்தலைவர் பார்வதி அம்மாள், பொருளாளர் சாவித்திரி லட்சுமி நாராயணன், முன்னாள் தலைவர் சீத்தாராமன், முன்னாள் பொருளாளர் சண்முகம் மற்றும் சக்தி பீட அனைத்து தொண்டர்களும் செய்திருந்தனர்.

    ×