என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டோல்கேட்"
- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
- சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
விழுப்புரம்:
சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், இதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி டோல்கேட்டை தே.மு.க.தி.க.வினர் இன்று காலை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், தே.மு.தி.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் தே.மு.தி.க.வினர் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினரை கைது செய்த போலீசார், சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.
- டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வீடூர் அணையை பார்வையிட சென்ற குழு வழியில் விக்கிரவாண்டி டோல் கேட்டை கடந்த போது அங்கு குழுவின் தலைவர் வேல்முருகன், டோல்கேட் அதிகாரிகளுடன் நடை முறைகள் குறித்து வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி டோல்கேட்டில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கவர்னர், அரசு அதிகாரிகள், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல தனியாக ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 54 டோல்கேட்டுகளில் 25-க்கும் மேற்பட்ட டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.
ஆனால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நடைமுறை படுத்துவது இல்லை. இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துள்ளனரா என்றும், இது வரை டோல்கேட் மூலம் எத்தனை மரக்கன்று கள் நட்டுள்ளனர் போன்ற விபரங்கள் வெளி யிட வேண்டும். இதனை பின்பற்றாத டோல்கேட்டு கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு இக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், கோட்டாட்சியர், பிரவீனாகுமாரி, குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
- 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
- மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.
விழுப்புரம்:
சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.
- கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
- ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருமங்கலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் இளங் கோ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்ததார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை மற்றும் தீர் மானங்களை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், திருமங் கலம் அருகேயுள்ள கப்ப லூர் டோல்கேட் நகராட்சி எல்லையிலிருந்து 5 கி.மீ தூரத்திற்குள் விதிமுறை களை மீறி அமைந்துள்ளது.எனவே இங்கிருந்து டோல் கேட்டினை அகற்றி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு உடனடி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்,
திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் பணிகள், ெரயில்வே மேம் பால பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கப்ப லூரில் ஆர்.டி.ஓ. அலுவல கம் அருகே இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வா கத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் கோட்ட துணைத்தலைவர் பால கிருஷ்ணன் மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன், திருமங்கலம் கோட்டத்தினை சேர்ந்த ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
- மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 ஆக நிர்ணயம்
- கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
நாகர்கோவில் :
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதர சுங்கச்சாவடிகளில் செப் டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகி றது. இதில் டோல் கேட் கட்டணம் ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்தி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை எண்: 944ல் (பழைய 47பி சாலை)நாகர்கோவில் காவல்கிணறு பிரிவில் திருப்பதிசாரம் அருகே அமைக்கப்பட் டுள்ள சுங்கச்சாவடியில் கட்ட ணம் உயர்த்தப்பட்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனம் ஒருவழி முறை பயணம் செய்ய ரூ.40, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.60, வாகனம் ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒரு வழிமுறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவு சீட்டு கட்ட ணம் ரூ.1375, சுங்கச்சாவடி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.20 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாக னம், மினி பஸ் போன்றவற் றுக்கு ஒருவழி முறை பயணம் செய்ய கட்டணம் ரூ.65, வாக னம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய கட்டணம் ரூ.100, மாதாந்திர கடவு சீட்டு கட்டணம் ரூ.2225, மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வாகன கட்டணம் ரூ.35 ஆகும்.
பஸ் அல்லது டிரக் இரண்டு அச்சுகள் ஒருவழி முறை பயணத்திற்கு ரூ.140, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.210, மாதாந்திர கடவுசீட்டு கட்டணம் ரூ.4655, மாவட்ட எல்லைக்குள் ஒருவழிமுறை கட்டணம் ரூ.70 ஆகும்.
3 அச்சு கொண்ட வணிக வாகனங்கள் ஒருவழிமுறை பயணம் செய்ய ரூ.150, வாகனம் அதே நாளில் திரும்ப பயண கட்டணம் ரூ.230, மாதாந்திர கடவு சீட்டு ரூ.5080, மாவட்ட எல் லைக்குள் பயண கட்டணம் ரூ.75 ஆகும். பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்தி ரங்கள், மண் ஏற்றி செல்லும் வாகனம், 4 முதல் 6 அச்சுகள் கொண்ட வாகனம் ஒரு வழி முறை பயணம் செய்ய கட்ட ணம் ரூ.220, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.330, மாதாந்திர பயண சீட்டு ரூ.7305, மாவட்ட எல்லைக்குள் பயண கட்டணம் ரூ.110.
அதிக அளவு கொண்ட வாகனம் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண் டவை ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.265, வாகனம் அதே நாளில் திரும்ப பயண கட்டணம் ரூ.400, மாதாந்திர கடவு சீட்டு ரூ.8890, மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப் பட்ட வாகனத்திற்கு ரூ.135 ஆகும்.
வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங் களுக்கு 2023-24ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330 ஆகும். இது ஏற்கனவே ரூ.315 ஆக இருந்தது. தற்போது ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்.பி.வலியுறுத்தல்
- டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே 13½ டன் எடை கொண்ட லாரிைய 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்தார் தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். நிகழ்ச்சியை விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா பொருளாளர் முத்துராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கண்ணனின் சாதனை மெய்சிலிர்க்க வைத்தது. இவர் இதற்கு முன் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:
நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் கண்ணன் 13½ டன் எடை உள்ள லாரியை இழுத்து சாதனை படைத்துள்ளார். அவர் குமரி மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு பிரச்சினைகளால் நடைபெறாமல் இருந்தன. இது தொடர்பாக மத்திய மந்திரியிடம் பேசி தற்போது பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் ஓரளவு முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த நிலையில் நாகர்கோவில் - காவல்கிணறு சாலை முடிவுற்று தற்போது கட்டண விபரங்களும் அறி விக்கப்பட்டிருக்கின்றன .
ஏற்கனவே நாங்கு நேரியில் டோல்கேட் இருக்கும் பட்சத்தில் 45 கிலோமீட்டருக்குள் மற்றொரு டோல்கேட் என்பது வாகன ஓட்டிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். மேலும் டோல்கேட் அமைந்துள்ள பகுதியை கடந்து நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் செல்லும்.
இந்த வாகனங்களுக்கு எல்லாம் கட்டணம் என்பது பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த டோல்கேட்டை திரும்ப பெற வேண்டும் . இது தொடர்பாக ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகளை பொறுத்தவரை தற்போது ஒன்றிய அரசு மிகவும் மந்தமான நிலையில் நடந்து கொள்கிறது .
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி இங்கு வலுவாக இருப்பதால் பணிகள் முடிந்தால் அந்த நற்பெயர் தங்களுக்கு கிடைக்காதோ என்ற வருத்தத்தில் பணி களை கிடப்பில் போட்டு உள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.
- வாகனங்கள் சென்று வர கட்டணம் நிர்ணயம்
- இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 4 வழிச் சாலை திட்ட பணிக்காக காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில்அப்டா மார்க்கெட் வரை 14 கி.மீ. தூரம், அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீட்டர் தூரம், அப்டா மார்க்கெட் முதல் முருகன்குன்றம் வரையில் 12 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு 2016 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரையிலான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் முடிய மேலும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதற்கிடையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த டோல்கேட் வருகிற 24-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்பு 47 பி என இருந்த நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை, திருத்தப்பட்டு இனி தேசிய நெடுஞ்சாலை எண் 944 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கீழக்கோட்டை, மேலக்கோட்டை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் யூனியனை சேர்ந்த கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்புலட்சுமி, நிர்வாக உதவியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கீழக்கோட்டை, லட்சுமிபுரம், மல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய கீழக்கோட்டை ஊராட்சியில் சுமார் 529 ரேசன்கார்டுகள் உள்ளன. ஆனால் கிராமமக்கள் ரேசன் பொருள்கள் வாங்க 3 கி.மீ தூரமுள்ள கிரியகவுண்டன்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளது. 500 கார்டுகளுக்கு மேல் இருந்தாலே புதிய கடை திறக்கவேண்டும் என்ற அரசு உத்தரவுபடி கீழக்கோட்டை கிராமத்தில் புதிய ரேசன்கடை அமைக்கவேண்டும்.விதிமுறைகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ணஎனவே கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மேலக்கோட்டை
மேலக்கோட்டை ஊராட்சி கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பற்றாளர் முகமதுஇலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலக்கோட்டை ரெயில்வேத ரைப்பாலத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது. இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும்.மேலக்கோட்டையில் இருந்து 4 வழிச்சாலையை கடந்து எதிரேயுள்ள ஹவுசிங்போர்டு காலனிக்கு செல்லவேண்டி உள்ளது. 4 வழிச்சாலையில் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தடுக்க பேரிகார்டுகள் வைக்கவேண்டும். ஹவுசிங்போர்டு காலனியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. அங்கு ரோடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அவற்றை சரிசெய்யவேண்டும். இல்லையெனில் ஹவுசிங்போர்டுகாலனியை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கப்பலூர் டோல்கேட்டை அகற்றவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொ.புளியங்குளம்
திருமங்கலம் ஒன்றியம் கொ.புளியங்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவகாமிதர்மர் தலைமை தாங்கினார். திருமங்கலம் யூனியன் ஆணையாளர் சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தார். கிராமத்தின் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்