என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் சாலைமறியல்"
- பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
- ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி செட்டிபாளையம் என்ற ஊரில் பவானி ஆற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென அந்தியூர்-கோபி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் கோபிசெட்டி பாளையம் இன்ஸ்பெக்டர் அ.சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
- தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது.
- மாலைக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல்-பழைய கரூர் சாலை தொட்டண ம்பட்டி பிரிவு பகுதியில் பழனிச்சாமி(60) கூலித்தொழிலாளி நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த பால் வாகனம் பழனிச்சாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
- மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
- ஏராளமான பெண்கள், மாணவ,மாணவிகள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகேயுள்ள நவலை கிராமத்தில் விடிய,விடிய திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பல குடும்பங்களின் நிம்மதி தொலைந்து கணவன்,மனைவி இடையே தகராறுகள் ஏற்பட்டு வருகிறது.சில நேரங்களில் இந்த தகராறு தற்கொலையில் முடியும் சோகமும் நிகழ்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மது குடிப்பதை மனைவி தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இப்பகுதியில் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை போலீசில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் மொரப்பூர்-கம்பை நல்லூர் சாலையில் நவலை கிராமத்தில் ஏராளமான பெண்கள், மாணவ,மாணவிகள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. மறியல் பற்றிய தகவல் அறிந்த கம்பைநல்லூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திருட்டுத்த னமாக மது விற்பனை நடப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கள்ளத்தன மது விற்பனைக்கு எதிராக நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
குன்னூர்: -
நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூா் சாலையில் அமைந்துள்ளது மந்தாடா ராஜ்குமாா் நகா்.
கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதி சரிவான மலைப் பகுதியில் அமைந்துள்ளது.
குடிநீா் விநியோகம் தொடா்பாக கேத்தி பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்ப டவில்லை. இருப்பினும் கடந்த வாரத்தில் பெய்து வந்த மழையால் மழை நீரையே குடிநீருக்காக பிடித்து வைத்து பயன்ப டுத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊட்டி-குன்னூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் கேத்தி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அடுத்த 2 நாள்களுக்குள் இப்பகுதியின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். மேலும், உடனடியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறிய லால் ஊட்டி-குன்னூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்