என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காட்டு யானைகள் கூட்டம்"
- கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
- யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.
இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.
யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.
தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.
இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு
- 22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட்டை சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன.
இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப் போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. அண்மைக்காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி திரிகின்றன.
வால்பாறை அருகே கருமலை எஸ்டேட், ஐயர் பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட் பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் 22 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து, பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.
இந்நிலையில் அப்பர் பாரனை எஸ்டேட் வனப்பகுதிக்குள் இந்த 22 யானைகளும் முகாமிட்டிருந்தன. மாலையில் அங்கிருந்து தேயிலைத் தோட்டம் வழியாக புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்தன.
இதனை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தம் போட்டு ஊருக்குள் வராமல் விரட்டி விட்டனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது.
எனவே குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெகுநேரமாக குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானைகள் சுற்றி திரிந்தன.
- அகழிகள் வெட்டி தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்கள் அனைத்தும் வனத்ைதயொட்டி இருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிரா மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
சோலூர் மட்டம் அருகே உள்ள முடியூர், வக்கனாமரம் கிராமத்திற்குள் நேற்று 5 காட்டு யானைகள் கூட்டம், நுழைந்தது. வெகுநேரமாக குடியிருப்பு பகுதிக்குள்ளேயே யானைகள் சுற்றி திரிந்தன.
யானை வந்ததை அறிந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய காட்டு யானைகள் திடீரென குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரியை அடித்து நொறுக்கியது.பின்னர் அங்கிருந்து சென்றன. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராமபு றங்களுக்கு வராதவண்ணம் அகழிகள் வெட்டி தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்