என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விதிமுறை"
- கல்லறைகள், கபர்ஸ்தான் அமைக்க இடம் தேர்வு செய்வதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.
- சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லா மியர் சமுதாயத்தினர் இறந்த உடலை அடக்கம் செய்ய நீண்ட துாரம் எடுத்துச்செல்ல வேண்டி யிருப்பதால் அவர்கள் ஊருக்கு அருகில் கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலம் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தினை நேரடி பேச்சு வார்த்தை மூலம் கைய கப்படுத்த அரசாணைபடி ஒவ்வொரு கலெக்டர் தலைமையில் கொண்ட குழு அமைத்து உத்தர விடப்பட்டுள்ளது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லா மியர் சமுதாயத்தினரின் இறந்த உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் அடக்கஸ்தலங்கள் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தினை அரசாணையில் தெரிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்வு செய்யும் பொருட்டு கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றிட அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசு ஆட்சே பனை அற்ற அரசு நிலம் ஏதும் உபரியாக இருத்தல் கூடாது. கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலம் அமைக்க சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளின் தேவையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தலாம்.
கபஸ்தான் அமைப்பதற்கு உச்சபட்சமாக 1.5 ஏக்கர் வரையிலும் அடக்கஸ்தலம் அமைப்பதற்கும் உச்ச பட்சமாக 2 ஏக்கர் வரைநிலம் கையகப்படுத்த லாம்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டம் உள்ளிட்ட 9 வட்டங்களில் வசித்துவரும் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தினருக்கு தெரியப்படுத்தும் வகையில், தனியார் நிலம் வழங்கும் பட்சத்தில் சிவகங்கை மாவட்ட வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
- விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூரில் விதிமுறைகளை மீறி விதை விற்பனையில் ஈடுபட்ட தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:-
விதை விற்பனையாளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைப் பிடித்தும், விவசாயிகளுக்கு தரமும், உரிய முளைப்புத் திறனும் கொண்ட பருவத்துக்கு ஏற்ற விதைகளை விநியோகிக்க வேண்டும்.
விதை இருப்புப் பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
விதை விற்பனையின் போது பயிர், ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
விதைகளை உர சிப்பங்கள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோரின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
விதை விநியோகதாரர்கள் அனைத்து குவியல்களுக்கும் பணி விதை மாதிரி எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தை உறுதிசெய்த பிறகே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான விதைகளை கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
எனவே, விதைகள் சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளின்படி விதை விற்பனையாளர்கள் கவனத்துடனும், விவசாயிகளின் நலன் சார்ந்தும் விதை விற்பனையில் ஈடுபட வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா என்பதை அறிந்தும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதை விற்பனை செய்த தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
- குமரியில் ஒரே மாதத்தில் 109 வாகனங்கள் பறிமுதல் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
31-ந்தேதி வரை தனி தாசில்தார்கள் தலைமை யிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் அவை கைப்பற்றப்பட்டு நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அபராத நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.
கனிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினர் மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றி சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்து சென்ற 9 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள் மீது தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்து சென்ற 27 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாவட் டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் காவல் துறை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710-ம், மதுரை மண்டல பறக்கும் படை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17 லட்சத்து 41 ஆயிரம், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழு வாயிலாக 29 வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் என்று மொத்தம் ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
- போலீசார் முன்னிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பயணிகள் புகார் அளித்தனர்.
- விதிகளை மீறிச்செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.
மதுரை
மதுரை சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப் பட்டுள்ளன. இருந்த போதிலும் போக்குவரத்தில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. அதன் அருகில் போலீசார் கண்காணிக்கும் இடம் உள்ளது. இந்த நிலையில் சிக்னல் பகுதியில் வரும் பல வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிவப்பு விளக்கு எரியும் போதும் நிற்காமல் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சாலை யை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒரு சில நேரங்களில் மட்டுமே போலீசார் சிக்னல் பகுதியில் நின்று வாகனங்கள் விதிமுறை மீறலை தடுக்கின்றனர். பல நேரம் வாகனங்கள் விதிகளை மீறிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.
மேலும் இன்றைய வாகன ஓட்டிகள் பலர் நடந்து செல்பவர்களுக்கு வழி விடும் மனநிலை இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் வாகன விதிமுறை மீறல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
- 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஊரமைப்பு துறை இயக்குனர் உறுதி
- ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் சண்முகவேல் ராஜா கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
இன்று காலையிலும் ஆய்வுப் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கனவே கட்ட ப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள் அரசின் விதி முறை களுக்கு உட்பட்டு கட்டினால் மட்டுமே அனுமதி அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது.
- விதி மீறிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மேலும் அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
உசிலம்பட்டி
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.மூர்த்தி தேவர் கட்சியை சேர்ந்த 19 பேர் விதிமுறை மீறி வாகனத்தின் மீது ஏறி உசிலம்பட்டி வழியாக மதுரை சென்றனர்.
இவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மேல் இருந்தவர்களை கீழே இறங்கி வாகனத்தில் செல்லுமாறும் வாகனத்தின் மேல் ஏறக்கூடாது எனவும் கூறினர்.
இதில் வாகனத்தில் வந்தவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் போலீசார் வாகனத்தில் வந்தவர்களை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்கள் மீது தேவர் ஜெயந்தி விழாவிற்கு விதிமுறை மீறி வாகனத்தில் வந்ததாகவும், போலீசாருடன் தகராறு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள்.
- விழாவில் 296 மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு குறித்து ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
வணிகவியல் துறை தலைவர் திருநாராயணசாமி வரவேற்றார்.
கருத்தரங்கில் சிதம்ப ரம் அண்ணாமலை பல்கலை க்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதன் திட்டங்களையும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறை களை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கருத்துக்களை வழங்கினார்.
இதில் பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களும், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் 296 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் அனுசியா தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் செய்திருந்தனர்.
- கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
- குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. இதற்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டு றவு சங்கங்கள் மூலமாக விவசா யிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .
விவசாயிகளுக்கு தர மான உரம் தங்கு தடை யின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உர விற்பனை யாளர்கள் தங்கள் உர உரிமத்துடன் தங்களுக்கு உரம் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பெறப்பட்ட"0" படிவங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் . " O " படிவங்களை இணைக்கா மல் உரம் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 - ன்படி கடும் விதி மீறலாகும் .
மேலும் , உர விற்பனையா ளர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கு மிகா மல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் . மானிய உரங்களை கண்டிப்பாக விற்பனை முனைய எந்திர த்தின் ( பி.ஒ.எஸ் ) மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.
யூரியா விற்பனை செய்யு ம்பொழுது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது . மேலும் , உர விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள உர இருப்பையும் , விலையையும் விலை விபர பலகை எழுதி கடைக்கு முன்பாக வாங்கு பவர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
உரங்களை வைத்துக் கொண்டு விவசாயி களுக்கு இல்லை என்று தெரிவிக்க கூடாது . மேலும் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 - க்கு முரணாக செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்ட நட வடிக்கை தொரடப்படும் . விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரம் குறித்த தங்கள் புகார்களை தெரிவிக்க வட்டாரத்தின் பெயர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குந ர்களின் அலைபேசி அகஸ்தீஸ்வரம் -9443700807 ராஜாக்கமங்கலம் -9442136046 , தோவாளை -9443283954 , திருவட்டார் குருந்தன்கோடு -9442151397 , கோழிப்போர்விளை -9442151397 . 9500982980 , மேல்புறம் -9500982980 , கிள்ளியூர் -8610003288 , முஞ்சிறை -8610003288 . மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) மற்றும் வேளாண்மை அலுவலர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) - 9443003044 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்