search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலர்கள்"

    • அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலைகளில் குழாய் பதிக்கும் போது பள்ளங்களை மூட வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா கோபிநாத், உறுப்பினர்கள் சுமத்ரா மோகன், வெங்கட், செல்வ பாரதி கண்ணன், சுப்ரமணியன், வனிதா, மற்றும் செல்வம், உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர் வெங்கட் பேசும்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஊராட்சி பகுதியில் சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கப்படுவ தாகவும் சரிவரபள்ளங்களை மூடுவதில்லை எனவும், இதனால் கிராம சாலைகள் அதிகளவில் சேதமடைந்தது வருவதாகவும் கிராம மக்கள் பெரிய அளவில் பதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    இதற்கு பதில் அளித்த ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பதில் அளித்தார்.

    இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் நன்றி கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

    மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.

    கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.

    இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    • வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    பல்லடம் :

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, பல்லடம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரவி வரவேற்றார்.மாநிலத் தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சங்க பொருளாளர் ஜெயக்குமார், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பிரகாஷ்பாபு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச்செயலாளர் சோமசுந்தர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார். வரவு-செலவு அறிக்கை குறித்து மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    திருச்சியில் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட இணை செயலாளர் இங்கர்சால், வட்டத் தலைவர் சுப்புலட்சுமி, வட்ட மூத்த உறுப்பினர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    நாளை (புதன்கிழமை) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊரக வளர்ச்சி துறையில் கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது.
    • இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கதின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

    அலுவலர்களின் நலன், உரிமைகள் சார்ந்த கோப்பு களை உருவாக்கவதிலும், அரசாணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த போக்கு மாற்றி கொள்ளப்பட வேண்டும்.

    இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியான அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம், விடுபட்டுள்ள உரிமைகள், பணி விதிகள் தொடர்பான அரசாணையை முறையாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

    100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் முதல் விதிப்படி பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல் விதிப்படி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:

    ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறை க்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தி ஏற்க னவே 3 கட்ட போராட்டம் நடத்தினோம்.

    கூடுதல் கலெக்டர் பேச்சு வார்த்தை யை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் 5 அலுவலர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக சார்ஜ் வழங்கி உள்ளனர்.

    எனவே விதிப்படி வேலை என்று கோரிக்கை யை வலியுறுத்தி போராட்ட த்தை தொடங்கி உள்ளோம். வரும் 9-ந் தேதி வரை இந்த போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும்.

    இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள். பணி நேரத்துக்கு பின் நடக்கும் ஆய்வு கூட்டம், காணொளி கூட்டங்கள், கள ஆய்வுகளை தவிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.
    • அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

    இதில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை தலைவர் முத்துச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலுப்பக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.

    திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×