என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராக்கெட் தாக்குதல்"
- காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது.
- பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது.
பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதியின் ரியாத்தில் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது:-
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது. உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.
அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம்.இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே வடக்கு இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
- கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களின் பாக்கெட்டுகளில் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த டெக்கனிகல் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று யூகிக்க முடிந்தாலும் இது பற்றி அந்நாடு வாய் திறக்காமல் இருந்தது.
ஆனால் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்தார்.இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக நடத்திய ராக்கெட் தாக்குதல் நிலைமையை மோசமாகியுள்ளது.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட சுமார் 165 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா பே பகுதியில் மக்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் மேல் பாய்ந்தது.. இந்த தாக்குதலில் 1 வயது பெண் குழந்தை, 27 வயது பெண், 35 வயது ஆண் உள்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80 ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை இடைமறித்து அளித்ததால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
மீதமுள்ள ராக்கெட்டுகள் திறந்த வெளிகளில் விழுந்தன. கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஹைபா பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே பெரிய அளவிலானது என்று அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் ராணுவம் அலர்ட்டில் உள்ளது. தற்போதைய தாக்குதல் குறித்து கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா இந்த ராக்கெட்டுகளை ஏவ பய்னபடுத்திய லான்சர்களை டிரோன் தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
Vivid reported: Over 80 rockets were launched by Hezbollah at Israel since this morning, 1 hypersonic missile by the Houthis, and over 4 drones from Iraq. Israel is fighting for its existence for 402 days, completely alone. pic.twitter.com/YIHoHzRhL5
— Midnight Crier (@prepperdaves) November 11, 2024
Breaking: Over 90 rockets were launched by Hezbollah into Israel this morning. Hezbollah continues to provoke Israel and escalate this war.This is not a military base in flames, it's an Israeli town. pic.twitter.com/4ZjVTmy9IH
— Eyal Yakoby (@EYakoby) November 11, 2024
- இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர் தலைவர் கொல்லப்பட்டார்.
- பதிலடியாக இதுவரை இல்லாத அளவிற்கு ஏவகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது ஹிஸ்புல்லா.
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் உள்ள பல ராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளிவிற்கு நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கருதப்படுகிறது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஏராளமான ஏவுகணைகள் மற்றும் வான்வழி இலக்குகளை இடைமறிக்கப்பட்டது. இது தொடர்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா? என்பது குறத்து உடனடி தகவல் ஏதும் இல்ல என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெடிபொருட்கள் நிரப்பிய கட்யுஷா ராக்கெட்டுகள், ஃபலாக் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு தளங்களை குறிவைத்து வெடிக்கும் டிரோன்களையும் செலுத்தியுள்ளது. மேலும் வியாக்கிழமையும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு பக்க எல்லைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வடக்கு இஸ்ரேலில் 16 வீரர்கள், 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். லெபனானில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள். டஜன் கணக்கில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
- டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர்.
திருவனந்தபுரம்:
இஸ்ரேலில் நடந்துவரும் போர், அங்கு மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து பதிலுக்கு பதிலாக எதிர் தாக்குதல் நடத்தியபடியே இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இஸ்ரேலில் நடந்துவரும் இந்த போரில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் யாரும் பலியாகியதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு ஒருவர், ராக்கெட் தாக்குதலில் படுகாயமடைந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் ஸ்ரீகண்டாபுரத்தை சேர்ந்த வர் ஆனந்த். இவரது மனைவி ஷீஜா, இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் என்ற பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த இடம் காசா பகுதியின் எல்லையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்நிலையில் ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷீஜா படுகாயமடைந்தார். அவர் முதலில் பார்சிலாய் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் ட்டார்.
பின்பு டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கணவருடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தான், ராக்கெட் தாக்குதலில் ஷீஜா சிக்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேலில் போர் நடப்பதையறிந்த ஷீஜாவின் கணவர் ஆனந்த், அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசி பத்திரமாக இருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தான், ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கிறது.
அதில் ஷீஜா சிக்கிக் கொண்டதால், அவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பதறிப்போன் ஆனந்த், தனது மனைவியை மீண்டும் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது செல்போனைதொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தனது மனைவிக்கு என்ன ஆனது? என்பது தெரியாமல் ஆனந்த் மற்றும் ஷீஜாவின் குடும்பத்தினர் தவித்தபடி இருந்தனர். இந்நிலையில் ராக்கெட் தாக்குதலில் ஷீஜா காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் தகவலை, அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷீஜாவின் குடும்பத்தினர் கதறினர். ஷீஜாவின் நிலை நன்றாக இருப்பதாக குடும்பத்தினரிடம் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷீஜாவுடன் வீடியோ காலில் பேச வைத்தனர்.
ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர். தனது மகளின் நிலையை கண்டு அவர்கள் வேதனையடைந்தனர்.
- ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்.
- மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.
உக்ரைன், கார்கிவின் கிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை மற்றும் ஓட்டல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 வயது சிறுவன் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "சாதாரண மளிகைக் கடையை ராக்கெட் மூலம் தாக்கிய கொடூரமான ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்" என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடல் அருகே பெண் ஒருவர் மண்டியிட்டுக் கிடப்பதைப் போன்ற ஒரு படத்தை ஜெலென்ஸ்கி வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணை சுற்றி சடலங்கள் சிதறிக்கிடப்பதை காணமுடிகிறது. மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கார்கிவ் பிராந்தியத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் கூறுகையில், "க்ரோசா கிராமத்தில் இன்று மதியம் 1:15 மணியளவில் ஒரு ஓட்டல் மற்றும் கடையில் ராக்கெட் தாக்கியது.
இந்த கிராமம் ஒரு முன்னணி நகரமான குபியன்ஸ்கிற்கு மேற்கே 30 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) தொலைவில் உள்ளது. மேலும், இங்கு, போருக்கு முந்தைய மக்கள் தொகை சுமார் 500 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இரு தரப்பும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் முடிவுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மகிவ்கா நகரில் ரஷிய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 ராக்கெட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷிய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
- இது மிக மோசமான படுகொலை என்று மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தகவல்.
- அண்மையில் துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.
பெய்ரூட்:
சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.
இந்நிலையில் வடக்கு சிரியாவின் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த சந்தை பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர்காயமடைந்தனர். இந்த தாக்குதல் மிக மோசமான படுகொலை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு மைய தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் குர்து இன போராளிகள் படை வெளியிட்ட அறிக்கையில், அல்-பாப் நகரம் மீது தங்கள் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசு தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்