search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டியாஞ்சலி"

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
    • கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீபரதகலா அகாடமி இணைந்து 5-வது ஆண்டு கலை விழா நாட்டியாஞ்சலி நடந்தது.

    சிவராத்திரி நாட்டி யாஞ்சலி கலை நிகழ்ச்சி களை ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் தொடங்கி வைத்தார். இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞா்கள் பரதநாட்டியம், நாதசங்கமம், குச்சுப்புடி நடனம், சிவபூஜை உள்ளிட்ட பொருள்களில் பரதநாட்டியம் ஆடினா். பக்தர்கள் விடிய,விடிய விழித்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் விடிய, விடிய மகா சிவராத்திரி விழா பூஜைகள் நடந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, வாகனங்களில் குலதெய்வ வழிபாட்டுக்காக ராமநாதபுரம் கிராமப் பகுதிகளுக்கு பக்தர்கள் வந்தனர். இதனால் கிராம பகுதிகளில் சிவராத்திரி விழா களைகட்டியது.

    • மாயூரநாதர் பெரிய கோவிலில் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.
    • மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாட்டியாஞ்சலி விழாவில் மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினர், பெங்களூரு வைஷ்ணவி நாட்டியஷாலா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னை ஸ்ரீ சாய் ந்ருத்யாலயா குழுவினரின் வள்ளலார் அருள் பெருஞ்ஜோதி நாட்டிய நாடகம் நடைபெற்றது.

    சிங்கப்பூர் கதக்கர்ஸ் கதக் குழுவினரின் சிவனும் பார்வதியும் உலகை உருவாக்குதல் கதக் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதேபோன்று சிதம்பரம் மஞ்சுபாஷினி, சாருவர்தினி குழுவினர் மற்றும் பெங்களூரு விந்தியா அகாடமி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் சான்றிதழும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இதில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலை துறையை சார்ந்தவர்களின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது.
    • ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணன்கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான உறியடி நிகழ்வு, வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது.

    கலை துறையை சார்ந்தவர்களின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது.

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×