search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.ம.மு.க."

    • அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாவட்ட நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் மண்டலம் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    நகர செயலாளர் குணசேகரபாண்டியன், அவைத்தலைவர் குருபால முருகன், ஓன்றிய செயலாளர் மலேசியா பாண்டி, சேடபட்டி நரசிங்க பெருமாள் ஏழுமலை பக்ருதீன், தொழிற்சங்க நிர்வாகி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட நிர்வாகிகள் வீரமாரிபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், குமுதா ராமன், சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன், நகர் மன்ற கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கிளைகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.

    • பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    • அ.ம.மு.க. மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அ.ம.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500-க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் ரம்ஜானை கொண்டாட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கஞ்சிக்கு அரிசி கொடுத்தது மட்டுமின்றி உலமாக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் நிதியை அதிகப்படுத்தினார். ஹஜ் பயணிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கினார். பலருக்கு கனவாக இருக்கும் ஹஜ் பயணத்தை அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக முழு முதல் முயற்சியை எடுத்தவர் அவர். ஜாதி, மதம் பாராத அவரின் வழியில்தான் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் செல்கிறார்.

    பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்டாடுகிற இயக்கம் அ.ம.மு.க.மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன் பெயரால் இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களோடு மக்களாக இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பமாக இருக்கும் எங்களுக்கு என்றும் நீங்கள் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட அவை தலைவர் பாலுசாமி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் ரவி, மாவட்ட பொருளாளர் முத்துக்குட்டி, பகுதி செயலாளர்கள் நெருப்பெரிச்சல் சுகம் வீரகந்தசாமி, ஜெகதீஷ், சிவக்குமார், ராஜாங்கம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம் சீமாட்டி குணசேகர், ஜெயலலிதா பேரவை ஆர்.வெங்கடேஷ், ஜெயலலிதா தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வத்திராயிருப்பு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.

    சிவகாசி

    வத்திராயிருப்பு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளரும், வத்திராயிருப்பு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான அழகர்சாமி, மாவட்ட அ.ம.மு.க. துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி முருகேசன், தி.மு.க.வை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்து விலகினர்.

    அவர்கள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜ வர்மன், வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு பேரூர் செயலாளர் வைகுண்ட மூர்த்தி, பேரூர் பொருளாளர் கனகராஜ், வத்திராயிருப்பு முன்னாள் பேரூர் செயலாளர் நெல்லை யப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சக்தி நடேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.

    • மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.
    • 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி தலைமையில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் 'கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம். மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் பதவிகளில் இருந்து விலக்கிக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ரத்தினசாமியிடம் கேட்டபோது, 'எங்கள் புகாரை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் 80-க்கும் மேற்பட்டவர்கள் பெயர், பொறுப்பு விவரத்துடன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றார்.

    • அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் மகாதேவன், அவைத்தலைவர் மகேந்திரன் மாவட்ட பேரவை செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வெள்ளத்துரை வழங்கினார். இதில் ஒன்றிய மாணவர் அணி காளிமுத்து, ஊராட்சி செயலாளர்கள் நல்லமருது, பெருமாள், முனியசாமி, பேரவை துணைச் செயலாளர் கருப்பசாமி, கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு தலைமை வகித்தார். நகர செயலாளர் சரிபு, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர்ஜெசிமா பானு, தொண்டர் அணி ராமசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் .அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பாப்பாகுளம் பூமிநாதன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அ.ம.மு.க. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    பொதுக்குழு உறுப்பினர் புல்லட் ரவி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் பகுதி நிர்வாகி கருப்புசாமி, பாண்டியன்நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்று கட்சிகளில் இருந்து 35 பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

    • 6,7,8,16 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதி கழகத்திற்குட்பட்ட 6,7,8,16 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் சுகம் வீர.கந்தசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

    மேலும் கட்சியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகியும், புதிதாக இணைந்தவர்களையும் விசாலாட்சி சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் பகுதி கழக நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜாங்கம், கீதா, கருப்புசாமி, கோகுலம் மணி, சின்னக்காளை, கவியரசு, சரவணகுமார், பிரியானந்த், நாகேந்திரகுமார், ராஜேந்திரன், மகேஷ்குமார், சஞ்சீவ், சிவகுமார், கோபிநாத், சீதா, மனோன்மணி, பாரதி, ஸ்ரீதேவி, ஜெயகாந்த், செந்தில்குமார், சவுந்திரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
    • மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் நாளை 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் கோவை மேற்கு சேலஞ்சர் துரை, நீலகிரி கலைச்செல்வன், கோவை மத்திய மாவட்டம் அப்பாதுரை, கோவை தெற்கு சுகுமார், திருப்பூர் வடக்கு ஆனந்தகுமார், ஈரோடு மாநகர் கிழக்கு சிவபிரசாத், ஈேராடு புறநகர் கிழக்கு சதாசிவ மூர்த்தி, ஈரோடு மாநகர் மேற்கு வெங்கடேசன், ஈரோடு புறநகர் மேற்கு வேலுச்சாமி, கோவை கிழக்கு செந்தில்குமார் , கோவை வடக்கு பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விழா பேரூரையாற்றுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணி கிருஷ்ணகுமார், மருத்துவ அணி இணை செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர்கள் லட்சுமணன், துளசிமணி, தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வபாண்டி, நெசவாளர் அணி செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முடிவில் வாலிபாளையம் பகுதி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறுகிறார்.

    • ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் கந்தபாரதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ். கதிரவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகங்காதரன்,மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், செய்தி தொடர்பாளர் கண்ணன், நகரச் செயலாளர்கள் ராமகுரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), முருகதாஸ் (ராஜபாளையம்), ஒன்றியச் செயலாளர்கள் செந்தில்காளைபாண்டியன் (ராஜபாளையம்), அலங்காரம் (வத்திராயிருப்பு வடக்கு), குண்டுமணி முத்தையா (வத்திராயிருப்பு மேற்கு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது.
    • மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகிக்கிறார். பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் 13 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கி கொடியேற்றினார்

    மங்கலம் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பல்லடம் ஒன்றியம் 63 வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூணுமடை, 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி கொடியேற்றினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், 63வேலம்பாளையம் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 63வேலம்பாளையம் கிளைசெயலாளர் சிவசுப்பிரமணி, கிழக்கு அண்ணாநகர் கிளை செயலாளர் சுரேஷ், பல்லடம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி ரவிசந்திரன் , மாணிக்காபுரம் ஊராட்சி செயலாளர் பூபதி மற்றும் கிளைச்செயலாளர்களான முருகன்,பிரகாஷ்,வலையபாளையம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×