search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைக்கால தடை"

    • போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
    • வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த 17-ந் தேதி முதல் தடை விதித்தது.
    • பஸ்களை சிறைபிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி.

    சென்னை:

    வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை கடந்த 17-ந் தேதி முதல் தடை விதித்தது.

    இதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை சிறைபிடித்த நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் ஆல் இந்தியா பெர்மிட் மூலம் ஆம்னி பஸ்களை தமிழ்நாட்டில் இயக்கிக் கொள்ளலாம். அந்த பஸ்களை சிறைபிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தற்போது வழக்கம் போல வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை இயக்கத் தொடங்கி உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் , கொச்சின், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு செல்லக் கூடிய வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    அதேசமயம் தமிழகத்திற்கு உள்ளேயே வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தற்போது வரை இயக்கவில்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • ரோஸ் அவென்யு கோர்ட் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
    • இதனால் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று, ரோஸ் அவென்யு கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன் உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. அமலாக்கத் துறையின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிசீலிக்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் ஜாமின் உத்தரவு அமைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளது என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.

    பாராளுமன்ற தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
    • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் வழக்கு.
    • ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு.

    நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது.
    • நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்த ரவிட்டார்.

    மதுரை

    கேரள மாநிலம் கொல் லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச்செயலாளர் நாக ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கேரளா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் வாகனங் களை இயக்குகிறோம். கேர ளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள் ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்தி றன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இத னால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள் சாலைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிக ளுக்குத் தேவையான கிரா வல் ஜல்லிகற்கள், எம். சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழ்நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தையே சார்ந்துள் ளோம். தமிழ்நாட் டின் உத வியின்றி கேரளாவின் உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.

    ஜிஎஸ்டி, நடைசீட்டு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனு மதியுடன் தான் தமிழ்நாட்டில் இருந்து கனிமங்கள் கேரளா விற்கு கொண்டு செல்லப்ப டுகிறது. இந்நிலையில் தென் காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை இன்ஸ்பெக்டர் மற்றும் கனிமவன அதிகாரி கள் உள்ளிட்டோர் 10 சக்க ரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனை கொண்டு செல்ல மறுக்கின்ற னர்.

    கன்னியாகுமரி மாவட் டம் புளியரை களியக்கா விளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலை யார் செக்போஸ்ட்டுகளில் இந்த வாகனங்களுக்கு அனு மதி மறுக்கப்படுகிறது. புளியரை செக் போஸ்ட்டை மட்டும் நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்லாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதித்துள்ள னர்.

    எனவே தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங் களில் இருந்து 10 சக்கரங்க ளுக்கு மேற்பட்ட வாகனங்க ளில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்கள் கொண்டு செல்ல அனு மதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தமிழக அர சுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது

    இதனை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவ காசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, தென் காசி புளியரை பகுதியில் 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற தமிழக அரசின் உத்த ரவிற்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தர விட்ட நீதிபதி, வழக்கு விசா ரணையை நான்கு வாரங்க ளுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவில் மீது அந்த மசூதி கட்டப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய, ஒட்டுமொத்த மசூதி வளாகத்திலும் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாரணாசி கோர்ட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் மனுதாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு, மசூதியில் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளுடன் ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையினர் வாரணாசிக்கு நேற்று சென்றனர். மசூதியில் ஆய்வுப் பணிகளை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். இந்த தகவலை வாரணாசி மாவட்ட கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார்.

    இன்று காலை 7 மணிக்கு தொல்லியல் துறையை சேர்ந்த 30 பேர் ஆய்வுப் பணிகளை தொடங்கினார்கள். அவர்களுடன் இந்து வக்கீல்கள் உடன் இருந்தனர்.

    அதுபோல இஸ்லாமியர்கள் சார்பிலும் பிரதிநிதிகள் உள்ளே இருந்தனர். அவர்களுக்கு உதவ இஸ்லாமிய வக்கீல்களுடன் உடன் இருந்தனர்.

    தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மசூதி வளாகத்தில் 40 கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். வெளியே உத்தரபிரதேச போலீசார் அரண்போல நின்றனர். இந்த ஆய்வு மூலம் உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியில் உள்ள வடிவம் ஒன்றை சிவலிங்கம் என்று கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்துக்கள் தரப்பு கூறி வருகிறது. அந்த வடிவம் உள்ள பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவைப் பின்பற்றி அந்த பகுதியில் மட்டும் இன்று அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மற்ற பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து தகவல்களை சேகரித்தனர்.

    ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரி மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது. வருகிற 26-ந்தேதி வரை இந்த தடை இருக்கும். அதற்குள் மசூதி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

    • தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
    • வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு பெருந்தொகை லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு நடத்தாமல் பணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் பால்வள துணைப்பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின் அடிப்படையில், ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக 26 அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, முறையான நியமனத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆவினில் பணியாற்றிவரும் நிலையில், எங்களுக்கு எவ்வித நோட்டீசும் அளிக்காமல் திடீரென பணிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தன.

    மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர்களான ஆவின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு
    • இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்துவிடவேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தியது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும் அதை சில குறிப்பிட்ட பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வந்தது. அந்த அடிப்படையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.

    இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை த்தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதன் பிறகும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை தொடர்ந்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதை கண்டித்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12- வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியாகும் குழாயை அடைப்பதற்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    • சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தலைவராக உள்ளவர் சரவணக்குமார். வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து, சமூக வலைதளத்தில் வந்த ஒரு பதிவை பரப்பியதாக, அக்கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இதை காரணம் காட்டி வடுகபாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவியில் இருந்து சரவணக்குமார் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். சங்க துணை தலைவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஜாமீனில் வந்த சரவணக்குமார், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்ததில், சஸ்பெண்டு நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சரவணகுமார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'என் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால், பொறுப்பு தலைவரை உடனடியாக விலக உத்தரவிட்டு என்னை மீண்டும் தலைவராக பணியாற்றிட வழிவகை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×