search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை கூட்டம்"

    • மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச் சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், விருது நகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குதல், தீர்வு வழங்க எடுத்துக்கொள்ளும் சராசரி கால அளவு, பட்டா மாறுதலுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதன் நிலவரங்கள், இசேவை மையங்கள் வட்டார அளவில் தற்போது வரை பெறப்பட்டுள்ள விண்ணப் பங்கள்,

    நிலுவை விவரங்கள், பாலின விகிதம், ஊரக, நகர்ப்புறப் பகுதி களில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், அரசு மருத்துவ மனைகளில் நோய் வாய்ப்பட்டு பிறந்த குழந்தைகள் சேர்க்கை மற்றும் அதற்கான காரணங்கள், கருவுற்ற வளர் இளம் பெண்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ உதவி, தாய்மார்கள் இறப்பு,

    அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள், RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சை யின் செயல்திறன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோய் கண்டறியப்படு வதின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காந் பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும்-48,

    உழவர் சந்தைகளின் செயல்பாடு கள், ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்திறன், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை புதிய தொழில்முனைவோர் மற்றும் நடுத்தர மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல் படுத்தப் பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவை யில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தி னர்.

    நிகழ்ச்சியில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு செயலர் தாரேஸ் அகமது, தனுஷ் எம்.குமார் எம்.பி., ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்,

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாணடியன், ரகு ராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் , விருதுநகர் நகர் மன்றத்தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி ராஜசேகர், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ அலுவலர்கள் உட்பட உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    • சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • புதியதாக கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக் கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் புதியதாக கடனுதவி பெறும் பயனாளி களுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் அனைத்து வங்கிகள் மூலம் கடன் தொகை விண்ணப்பித்த அன்றே வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 402 சாலை யோர வியாபாரிகள் பயன்பெற்று உள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதிக ளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிக ளுக்கும் அனைத்து வங்கி களும் கடனுதவி வழங்க வேண்டும். கடனுதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தாமல் விண்ணப் பித்த அன்றே கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும். வங்கி கள் பொறுப்பு அலுவலர் களை நியமித்து கடனுதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. வருகிற 1-ந்தேதி சாலை யோர வியாபாரி களுக்கான சிறப்பு கடன் மேளா தமுக்கம் மைதா னத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், சிவசுப்பிரமணியன், கோபால், சுகாதார ஆய்வாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
    • கூட்டத்தில் 14-ந்தேதி வைகோ பேசுகிறார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ எம்.பி. சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ந்தேதி

    (திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமநாத புரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரையாற்று கிறார். மேலும் தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்தில திபன், முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரொஹையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நன்றி கூறுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க. சார்பில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், அவைத் தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார், திருக்குமார், சின்னசாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலத்தில் நடைபெறும் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஏ.வ. வேலு வருகை-வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    • பிளாஸ்டிக் பைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • காணொலி விளக்கக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகிலுள்ள கடைகளில் "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதையும்,

    விற்பனை செய்வதையும் முற்றிலும் தவிர்ப்பது" தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகம்,

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், பெருந்துறை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சுற்றச்சூழல் பொறியாளர் (பெருந்துறை) உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் குறித்து காணொலி விளக்கக்காட்சி மூலம் விழிப்புணர்வும், சட்ட விதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் கோவில் வளாகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்கான நடவடி க்கைகளை மேற்கொ ள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்புக ளில் மீண்டும் மஞ்சப்பை தொடர்பான விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டினை கட்டுப்படுத்தவும் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அதன் விபரங்களை வாரி யத்திற்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிமுகப்படு த்தப்ப ட்டுள்ள வலை தளத்தில் நெகிழி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்படும்போது அதன்மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை வலைத ளத்தின் வாயிலாக தெரிவி க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அன்னக்கொடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கிருஷ்ணசாமி,செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் சிவகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் ராஜீ தலைமை தாங்கினார்.

    அம்மன் கோவில் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் மற்றும் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டமைப்பின் செயலாளர் வேலுமணி வரவேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பால் விலை உயர்த்தி தரக்கோரி பேசினர்.

    இக்கூட்டத்தில் வருகிற 17-ந் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் ஆவின் நிர்வாகத்திற்கு பால்உற்பத்தியாளர்கள் பாலை அனுப்புவதில்லை என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், ஆவின் இயக்குனர் அசோக் குமார், கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கரட்டாங்காட்டுப்புதூர் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.

    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வருகிற 11ந்தேதி மாலை சிவகங்கை அம்மா உணவகம் அருகே ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்.

    இதையொட்டி சிவகங்கை யில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச்செய லாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சிவாஜி, சிவசிவஸ்ரீதர், சேவியர்தாஸ், பழனிச்சாமி, கோபி, ஜெகதீஸ்வரன், செல்வமணி, பாரதிராஜன், அருள் ஸ்டீபன், வாசு, சோனைரவி, செந்தில் குமார், மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்கத்தலைவர் சகாய செல்வராஜ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் மற்றும் நகர செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலி தாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூவந்தியில் இருந்து பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு கழக பொதுச்செயலாளரை வரவேற்க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    • நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகிற 27-ந் தேதி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது.
    • ஆர்வமுள்ள இளைஞர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.

    ஊட்டி

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதிஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகிற 27-ந் தேதி நடக்கவிருக்கும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிமுக இளைஞர் அணி சார்பில் குன்னூர் நகர செயலாள ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

    குன்னூர் நகரசபை துணை தலைவர் வாசிம் ராஜா, நகர கழக துணைசெயலாளர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், தலைமை கழக பேச்சாளர் ஜாஹிர் ஹீசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரவீன் , செலின் ராஜா மற்றும் நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பயிற்சி பாசறையில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபனிடம் வழங்கினர். 

    ×