search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சச்சின்"

    • ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
    • ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா வாழ்த்து.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

    38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

    டெஸ்ட் போட்டியில் 2018- ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சச்சின் தனது எக்ஸ் பதிவில், "கிரிக்கெட் ஆடுகளம் நிச்சயம் உங்களது ஆரவாரத்தை இழக்கும். உங்கள் புன்னகை, உங்கள் ஸ்டைல் மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் மற்றவர்களை ஈர்க்க கூடியது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கங்களை நீங்கள் புரட்டி பார்த்தால் அதில் உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது அனைத்தும் சிறந்ததாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். எப்போதும் சிறிது கொண்டே இருங்கள் ஷிகர் தவான்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர்.
    • இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணியாக களம் இறங்கியது கனடா. இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் "ஏ" அணியில்தான் கனடாவும் இடம் பிடித்துள்ளது.

    கனடா அணி சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்த போதிலும், அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு எதிராக குறைவான ரன்கள் அடித்த போதிலும், 17 ஓவர் வரை வெற்றிக்கான போராடியது.

    இன்று கடைசி லீக்கில் இந்திய அணியுடன் கனடா மோதுகிறது. இந்த நிலையில் அந்த அணியின் ஆரோன் ஜான்சன் கூறுகையில் "இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர். இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார். டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் 1996-ல் இருந்து உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் 2011-ம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் விளையாடும்போது 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

    தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்தில் 52 ரன்கள் விளாசினார்.

    • திக்மான்சு ஜூலியா டைரக்டு செய்கிறார்.
    • பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின், டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வந்துள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலு வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இந்த படத்தில் பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    இவர் ஏற்கனவே கால்பந்து விளையாட்டு வீரர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வங்கர் பாலு வாழ்க்கை கதை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளனர். திக்மான்சு ஜூலியா டைரக்டு செய்கிறார்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல்வங்கர் பாலு புனேயில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது என்பதை இந்த படத்தில் காட்ட உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
    • `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடு.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுசின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் விஜய்யின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. வில்லு படமும் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில் விஜய் நடித்த `சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

    `சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார்.

    இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்டு செய்ய, கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

    'சச்சின்' சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பார்த்தது. அப்போது அப்படத்துடன் ரஜினியின் 'சந்திரமுகி' கமல்ஹாசனின் `மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. 19 வருடங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
    • ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

    சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் டி10 தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தபடுகிறது. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.

    மார்ச் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.

    இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதுகின்றனர். இதன் தொடக்க விழாவில் சச்சின், ராம் சரண், சூர்யா, அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் பிரபலமான நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
    • காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.

    கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

    பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    • கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரல்
    • தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என ஆதங்கம்

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த டீப் பேக் வீடியோவில், ஒரு விளையாட்டு செயலி மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு அவர் கூறுவது போன்றும் எடிட் செய்யப்பட்டிருக்கும். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என்றார். இதுபோன்ற விளம்பரங்களை யாரெனும் பார்த்தால் உடனடியாக ரிப்போட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க, நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    • விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
    • பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் இந்திய அணி ஆட்டத்தின் முடிவில், 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.

    கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும்.

    இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்ரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

    விராட் கோலி அடித்த சதத்தை பாராட்டி கற்பனை நயத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.

    கடந்த ஏப்ரலில்தான் சச்சின் தனது 50வது வயதை எட்டினார். இதை மறைமுகமாக குறிப்பிட்டு, இந்த 50ஐ எட்டுவதற்கு அவருக்கு ஒரு வருடம் (365 நாட்கள்)ஆனதையும், விராட் கோலிக்கு தற்போது இலக்காக இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எடுக்க வேண்டிய 50வது சதத்தையும் குறிப்பிட்டு "எனக்கு 365 நாட்கள் ஆனது. உங்களால் விரைவிலேயே எட்ட முடியும்" என அழகாக பாராட்டியுள்ளார். 


    • விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார்.
    • அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி, லோகேஷ் ராகுல் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தனர்.

    122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 47-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெண்டுல்கரை அவர் நெருங்கியுள்ளார். டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 3 செஞ்சூரி தேவை.

    மேலும் விராட்கோலி 13 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கோலி 267 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்னை தொட்டார். டெண்டுல்கர் 321 இன்னிங்சில்தான் இந்த ரன்னை எடுத்தார்.

    சர்வதேச போட்டிகளில் விராட்கோலி 77 செஞ்சூரி அடித்து (டெஸ்ட் 29 + ஒருநாள் போட்டி 47 + 20 ஓவர் 1) 2-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் விராட்கோலி ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களை அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாக்கர் யூனுஸ் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட்கோலிக்கும், மற்ற வீரர்களுக்கு இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்கையை முடிக்கும் போது ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து இருந்தார். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு நீண்ட காலம் இருக்கிறது. அவர் டெண்டுல்கரின் சாதனையை எளிதில் கடப்பார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர் 100 சதங்கள் அடிப்பார்.

    விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.

    இவ்வாறு வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.

    • ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள்.
    • இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    மும்பை:

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களின் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது.

    புஜாராவின் சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த பேட்டிங் சராசரியை முன்னேற்ற இந்திய அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள் எனவும் இப்போதைய வீரர்கள் இகோ பார்க்கிறார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் அவர்களை அழைத்து இந்திய அணி நிர்வாகம் பேச வேண்டும். உன்னுடைய பேட்டிங் யுக்தி என்ன ஆனது? அதை முன்னேற்ற நீ என்ன செய்து வருகிறாய் என்று பேச வேண்டும்.

    சிறு சிறு மாற்றங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரேந்திர சேவாக்கை அழைத்து நீ தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகிறாய். இதனால் பேட்டிங் போசிஷனை நீ ஆப் ஸ்டம்புக்கு மாற்று என்று நான் அறிவுரை கூறினேன்.இந்த அறிவுரையை அவர் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த பணியை பயிற்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.


    ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள். பேட்டிங்கில் எனக்கு இந்த குறை இருக்கிறது, அதனை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்வதில் எங்களுக்கும் ஈகோ கிடையாது. வந்து கேட்ட அவர்களுக்கும் ஈகோ கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் வந்து எங்களிடம் பேசுவதில்லை.

    இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நானும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்று அவர்களை குழப்ப விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • முகமது ஷமி வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் சிக்சர் அடித்தார்.
    • இந்த சிக்சரை அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர்.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் அபார சதமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சிக்சர் ஒன்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முகமது ஷமி வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் தேர்ட் மேன் திசையில் சிக்சராக்கினார்.


    இந்த சிக்சரை அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர். பந்து வீசிய முகமது சமி கூட திகைத்து போனார் என்றே சொல்லலாம். இதனை நேரில் பார்த்த சச்சின் டெண்டுல்கரே, மிரண்டு போய் சாவ்லாவிடம் அந்த ஷாட் எப்படி அடித்தார் என்பதை சைகை மூலம் செய்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் அது எப்படி திமிங்கலம் என்ற சந்தானம் காமெடி டெம்லேட்டை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

    • எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர் ரியாக் செய்துள்ளார்.
    • ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர்.

    மாத சந்தா தொகை செலுத்தி ட்விட்டர் ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் டுவிட்டர் கணக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் மார்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிலம்பரசன், கிரிக்கெட் வீரர் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களின் அதிகாரப்பூர்வ டிக் மார்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கரின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ப்ளூ டிக் மார்க் எடுத்துவிட்டால் இது சச்சினின் நிஜ கணக்குதான் என்று நாங்கள் எப்படி தெரிந்துக் கொள்வது என கேட்டிருந்தார்.

    இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர் ரியாக் செய்துள்ளார்.

    சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் சரிபார்க்கப்பட்ட சின்னத்தை தனது சைகையால் காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு, இப்போதைக்கு இதுதான் என்னுடைய ப்ளூ டிக் சரிபார்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த டுவீட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

    ×