search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாக பூஜை"

    • ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாள் இன்று ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்

    ஆன்மிக விழாவை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் மற்றும் அவரது சிைல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இன்று காலை கணபதி யாக பூைஜகள் நடந்தது. பின்னர் அங்குள்ள பால முருகன், தேவர் திருமகனார் கோவிலுக்கு சிறப்ப பூஜை நடந்தது. இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு ஆன்மீக சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம் நடக்கிறது.

    நாளை (29-ந்தேதி) நடைபெறும் அரசியல் விழாவில் அரசியல் சொற் பொழிவுகள் நடைபெறும். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

    முக்கிய நிகழ்ச்சியான தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்றயை நாளில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ராமநாதாபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது.
    • இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. காவல் தெய்வமாக விளங்கும் இங்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வருடத்தின் ஆடி அமாவாசை நாளில் மட்டும் ராஜ கோபுரத்தின் 18-ம் படி வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த நிலையில் 18-ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் பழமை மாறாமல் கோபுரத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவில் திருமண மண்டபத்தில் முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக நூபுர கங்கையில் இருந்து 160 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் நாளை (23ந்தேதி) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டுள்ளது.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவிலில் செய்யப்பட்டு ள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்தார்.

    • 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டுள்ளது
    • நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் விழுப்புரம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளன. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பூஜைகள் நடந்து வருகிறது.

    இன்று காலை ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்து யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

    நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு ஒட்டி வேலூர் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் டிஎஸ்பிக்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    நாளை காலை அபிஷேக விழாவின் போது கோவிலுக்குள் 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் விஐபி பாஸ் வழங்கப்பட்டு உள்ள கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்கிட யாக பூஜை நடத்தப்பட்டது. கீழ்பென்னாத்தூரில் மிகவும் பழமையான வாய்ந்த ஆலயமான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதியதாக கருவறை அம்மன் அமைத்திடவும், கோவில் சுற்றுசுவர்கள் அமைத்திடவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு பணிசெய்திட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, புனரமைப்பு பணிகள் துவங்கும் பணிக்காக அங்காளம்மன் கோவில் வளாகத்தில் 11 கலசங்கள் அமைக்கப்பட்டு அஸ்திரயாகபூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், அங்காளம்மன் கருவறை அமையும் இடத்திலும், சுற்றுசுவர் அமையும் இடத்திலும் வாஸ்து பூஜைமுறைப்படி பூமிபூஜை போடப்பட்டது. ஆலய நிர்வாகிகள், திருப்பணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    ×