என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது விருந்து"
- மது விருந்து என்ற பெயரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
- 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் அது அளிக்கக்கூடாது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் தனியார் விடுதிகள், வீடுகள் மற்றும் ஓட்டல்களில் அனுமதி இன்றி மது விருந்து நடத்தப்படுகிறது.
இதில் பல அசம்பாவிதங்களும் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் கட்டுப்பாடு தனிப்பிரிவு மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மது விருந்து என்ற பெயரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதனால் மாநிலத்தில் மது விருந்து நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 பாட்டில் மதுவுக்கு மேல் வாங்கி விருந்து வைத்தால் கட்டாயம் அந்த விருதுக்கு அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி மற்றும் மாலை 4 மணி என 2 நேரங்களில் மட்டுமே மது விருந்து தொடங்கும் வகையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மது விருந்து நடத்துபவர்கள் வீடு மற்றும் விடுதிகளில் நடத்தினால் ஒரு நாளைக்கு ரூ 10,000 வரை கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
வணிக வளாகங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகள் ஓட்டல்களில் மது விருந்து நடத்தினால் டிக்கெட் எண்ணிக்கை பொறுத்து கட்டணங்களை செலுத்தி முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் அது அளிக்கக்கூடாது. அனுமதி இன்றி மது விருந்து நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமண மண்டபத்திற்கு அருகில் காரில் பார் அமைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட கார் டெல்லியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மது இல்லாமல் திருமண கொண்டாட்டமா?... என்கிற நிலை நிலவுகிறது. மணமகன் மது அருந்தி வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள், திருமண விருந்தில் சிக்கன் பீஸ் இல்லாததால் மது போதையில் உறவினர்கள் செய்த ரகளையால் நின்ற திருமணம் என்பதுபோன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன.
அந்த வகையில், திருமண கொண்டாட்டத்தின் போது திறந்தவெளியில் காரில் மது அருந்திய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் செக்டார் 73 இல் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அருகில் காரில் பார் அமைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹைதர் (30), அர்ஜூன் (20), அஜித் (21), மற்றும் பிரதீக் தனேஜா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் டெல்லியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
- கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனவர் சுதாகர்.
- இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி ஒருவர் கட்சித் தொடர்களுக்கு அசைவ உணவுடன் மது விருந்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனவர் சுதாகர்.
தற்போது இவர் தனது வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக தொண்டர்களுக்கு அசைவ உணவுடன் மது பாட்டில்களை விநியோகித்து மது விருந்து வைத்துள்ளார். மது பாட்டிலைகளை வரிசையில் நின்று பாஜக தொண்டர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருந்து நடந்தப்போவதாக போலீசிடம் அனுமதி வாங்கிய சுதாகர், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விநியோகித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் பாஜக எம்.பி யின் செயலுக்கு அம்மாநில துணை முதலவர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவினரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத்திடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
- மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் மது விருந்து நடந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக செண்பகதோப்பு ஓடையை கடந்து 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மது விருந்து முடிந்து நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு ஓடையில் அதிக அளவு தண்ணீர் வர தொடங்கியது.
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றால் ஓடையை கடந்து விடலாம் என எண்ணி ஓடைக்குள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி உள்ளனர்.
ஆனால் அதிக நீர்வரத்து காரணமாகவும், போதையில் இருந்ததாலும் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து சிக்கிக் கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினார். மற்ற இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் தனி நபராக அவர் நண்பர்களை மீட்க முயன்றார். ஆனால் இயலவில்லை. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரம் அவர்கள் தண்ணீரிலேயே அங்கிருந்த கோரைப் புல்லை பிடித்து கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர்.
அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.
விசாரணையில் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ராஜபாளையம் குப்புசாமி ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்குமார் (வயது 25), பி.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (31) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு மது விருந்து நடந்ததா? நடத்தியவர்கள் யார்? அதில் கலந்து கொண்டவர்கள் யார்-யார்?, ஓடையில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து விட்டு வந்தவர்களா?, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே பாகோடு மதில்தாணிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சுனில்குமார் வழக்கு ஒன்றில் குழித்துறை நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்றுள்ளார். இதை கொண்டாடும் விதத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார்.
அப்போது இவருக்கும், பாகோடு மதில் குளத்து விளையைச் சேர்ந்த சேம் (வயது 43) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதம் முற்றியதையடுத்து சுனில்குமார், சேமை கல்லால் தாக்கி உள்ளார்.
இதில் சேம் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர்.
இது குறித்து சேம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என் தோழிகளை பார்த்து ஒருமுறை தவறு செய்து விட்டேன். அதன்பிறகும் பார்ட்டிக்கு அழைத்தார்கள்.
- ஆடியோ வெளியிட்ட மாணவி போன்று வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் பங்கேற்க சில தோழிகளையும் அழைத்திருந்தார். அப்போது மாணவியின் பள்ளிக்கூட நண்பரான ஒரு வாலிபரும் அங்கு வந்தார். அவர் மாணவியுடன் தகராறு செய்ததோடு, கட்டையை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக தாக்கினார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுதொடர்பாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற ஆண் நண்பர்களுடன் சம்பந்தப்பட்ட மாணவி பழகியதால் காதல் முறிவு ஏற்பட்டதும், இது தொடர்பான பிரச்சினையில் பார்ட்டி நடந்த வீட்டில் இந்த தாக்குதல் நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த வீடு முழுவதும் இளைஞர்கள், இளம்பெண்ணின் ஆடைகள், சிகரெட் துண்டுகள், ஆணுறைகள், மதுபாட்டில்கள் ஏராளமாக கிடந்தன. இதுதொடர்பாக பார்ட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இளம்பெண் ஒருவர் கண்ணீர்மல்க பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் பேசும் இளம்பெண் கல்லூரி மாணவி ஆவார்.
பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் இரவு நேரங்களில் குளச்சல் பகுதியில் உள்ள தோழியின் உறவினர் ஒருவரின் பங்களா ஒன்றில் ஆண் நண்பர்கள், கல்லூரி தோழிகள் ஒன்றுகூடி மது விருந்தை தொடங்கி உள்ளனர். முதலில் ஒரு மாணவி தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருப்பதை பார்த்த மற்ற மாணவிகளும் மது விருந்துக்கு வரும் வேறு ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க தொடங்கியுள்ளனர். கான்செப்ட் சரக்கு பார்ட்டி- ஜாயின்ட் என்ற பெயரில் இந்த மது விருந்து நடந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ஆடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி கதறி அழுதவாறு அந்த கல்லூரி மாணவி பேசிய ஆடியோவில் உள்ள விவரம் வருமாறு:-
அன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு என்னை 2 தோழிகள் தொடர்ந்து செல்போன் மூலம் அழைத்துகொண்டிருந்தார்கள். வா... வெளியே செல்லலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூப்பிட்டார்கள். அவர்கள் கேர்ள் பிரண்டுகளுடன் மது அருந்துவது எனக்கு தெரியும். அதேபோல் மது குடிப்பதற்குதான் என்னை அழைக்கிறார்கள் என்று நினைத்துதான் நான் அவர்களுடன் சென்றேன். அங்கு பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் ஒரு பையன் வரப்போகிறான் என்று தெரிந்தது. அதுவும் அங்கு சென்றபிறகுதான் ஜாயின்ட் இருக்கிறது என்பது தெரிந்தது. முன்பே ஜாயின்ட் இருப்பது தெரிந்திருந்தால் நான் அங்கு சென்றிருக்க மாட்டேன்.
என் தோழிகளை பார்த்து ஒருமுறை தவறு செய்து விட்டேன். அதன்பிறகும் பார்ட்டிக்கு அழைத்தார்கள். திரும்பதிரும்ப அழைத்து கொண்டிருந்தார்கள். நான்தான் ஒருமுறை தவறு செய்துவிட்டேன். அதன்பிறகு எதற்கு என்று செல்லவில்லை. தற்போது என்னை சிக்க வைக்கப்பார்க்கிறார்கள். அந்த தோழிகளால் ஒரு முறை தவறு செய்து விட்டேன். இனி இவ்வாறு செய்ய மாட்டேன். தவறாக நினைக்காதீர்கள். என் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம், என்று அந்த மாணவி பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
இந்த ஆடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பார்ட்டி நடந்த பங்களாவின் உரிமையாளர் யார்? இந்த பங்களாவுக்கு யார், யார் வந்து செல்கிறார்கள்? ஆடியோ வெளியிட்ட மாணவி போன்று வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற கலாசார சீரழிவு சம்பவம் நகர்புற பகுதிகளில்தான் அதிகமாக நடப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது மெல்ல மெல்ல கிராம பகுதிக்குள்ளும் கால் பதித்து இருப்பது பலரது புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்த வைத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்