என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய பஸ்நிலையம்"
- வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
- பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கடலூர்:
அ.தி.மு.க.ஆட்சியில் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். சி.சம்பத் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், அழகானந்தம், ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மீனவர் அணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய செயலா ளர்கள் தமிழ்ச்செல்வன், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர் தாடி முருகன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ச்சுனன், இலக்கிய அணி ஏழுமலை, முத்து, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வெங்கட்ராமன் ஆகியோர் நன்றி கூறினர்.
- ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
- 2 இடங்களில் தற்காலிக நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, கும்பகோணம், புதுக்கோட்டை,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட ங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப் படுகிறது. இங்கு 6ஆயிரம் பேருக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்தும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தான முறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர். பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.
இதையடுத்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை சீரமைக்கவும் சந்தை திடல் வரை விரிவு படுத்தவும் நகராட்சி திட்டமிட்டது.இதற்காக நகராட்சி நிர்வாகத்துறை முதற்கட்டமாக ரூ.20 கோடியில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளது.அடுத்த மாதம் விரிவாக்க பணிகளை தொடங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையம் தற்போ தைய வாகன நிறுத்துமிடம் வரை வணிக வளாகத்துடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் முதற்கட்டமாக ரூ.20 கோடியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து கூடுதல் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.
விரிவாக்க பணிக்காக மகர் நோன்பு பொட்டல் வரை பஸ் நிலையம் வர உள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. பழைய பஸ் நிலைய பகுதி, ராம நாதபுரம்-மதுரை ரோடு பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய காலியிடம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர், நகராட்சி மண்டல இயக்குநரிடம் அனுமதி கேட்டுள் ளோம்.
அனுமதி வந்தபின் போக்குவரத்து அதிகாரிகள் போலீசாருடன் ஆலோசனை நடத்தி பஸ்கள் நிறுத்தப்படும். வழித்தடங்கள் மற்றும் பஸ் நிலைய இடமாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டரிடம் அளித்தனர்
திருச்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் வேலுச்சாமி மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-
திருச்சி பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, எடமலைப்பட்டி புதூர், பிராட்டியூர், கிராப்பட்டி, காஜாமலை, சாத்தனூர் ஆகிய பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பசியும் பட்டினியமாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பஞ்சபூர் பஸ் நிலையத்தில் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. எனவே புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் திருச்சி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் பஞ்சப்பூர் பகுதியில் விபத்தை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைத்து விபத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.
பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவை பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு நிரந்தரம் ஆக்கிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது சதாசிவம், சேட்டு, பழனிவேல்,மோகன்ராஜ், பெரியசாமி, நஜ்மா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
- தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ெரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.
மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பஸ் நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.
இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பஸ் நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர்.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் கே.என்.நேரு பச்சைக்கொடி காட்டி விட்டதாக மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பினை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.
அமைச்சர் தேர்வு செய்துள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திட்ட மதிப்பீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.25 கோடி அளவுக்கு திட்ட மதிப்பீடு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.
மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை யாத்திரி நிவாஸ் எதிர்ப்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டு ெரங்கநாதர் கோவில் அறநிலைய துறையிடம் கேட்டிருக்கிறோம். ஏற்கனவே யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக மாநகராட்சிக்கு இடம் தருவதாக அப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.
அந்த அடிப்படையில் யாத்திரி நிவாசுக்கு எதிர்ப்புறம் உள்ள நிலத்தை கேட்போம். அதனை அவர்கள் தர ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தரை வாடகைக்கு கேட்டு சுற்றுலா பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். அதன் மூலம் கோவில் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறும் போது, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மேயர் அன்பழகன் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோன்று அடிமனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றார். இந்த புதிய பஸ் நிலையம் அமைவதன் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க துணைத் தலைவர் செல்வி குமரன் மற்றும் மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் ஆகியோர் தெரிவிக்கையில்,
பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரெங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீண்ட நாட்களாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்தோம். எங்களின் கோரிக்கைகளை நேற்று நடந்த திருச்சி மாநகராட்சியில் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் ஜவஹர் வலியுறுத்தி பேசியதற்கும், இதற்கு ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி கிளப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கபட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்ட ப்பட உள்ளது என்று மேயர் தெரிவித்ததற்கும், இத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கும், பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்