என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை.
- ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சையும் சேர்த்து ரோகித் 91 ரன்கள் மற்றும் கோலி 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர்.
இந்நிலையில், ஒழுங்காக விளையாடவில்லை எனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கர்சான் காவ்ரி, "இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள். குறிப்பாக ரோஹித் மற்றும் விராட் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். உங்கள் சொந்த மண்ணில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முதலில், நீங்கள் பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தீர்கள். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களைச் செய்தீர்கள், ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த போட்டியில் தோல்வியடைந்தீர்கள்.
ஒரு டெஸ்ட் போட்டியில் போட்டியிடுவதற்கு 350 அல்லது 400க்கு மேல் ஸ்கோர்களை எடுக்க வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நமது பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் சிரமப்படும்போது, வெளிநாடுகளில் என்ன செய்வார்கள்? உண்மையிலேயே ஏமாற்றம்தான். ஆஸ்திரேலியாவில் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சரியாக விளையாடவில்லை எனில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.
அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவை. எதிர்காலத்திற்காக நாம் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். செயல்படாத வீரர்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?
அவர்கள் சிறப்பாக விளையாடினால், அவர்களை அணியில் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சரியாக விளையாடாத வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள் எனில் புஜாரா அல்லது ரஹானேவைக் கொண்டு வாருங்கள். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?
ஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில், அதிக நேரம் களத்தில் நின்று பெரிய ஸ்கோர் முடிக்கக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் நமக்கு தேவை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க பெரிய ஸ்கோரை நீங்கள் அடிக்க வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபாரமாக வென்றது.
- இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என 62.82 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது.
துபாய்:
வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
- டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.
துபாய்:
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74.24 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் 5-வது இடத்தில் இருந்து சரிந்து 7வது இடத்துக்கு சரிந்தது.
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
- டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.
துபாய்:
இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.
டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.
இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும்.
- இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும்.
மெல்போர்ன்:
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள நாதன் லயனின் வீடியோ பதிவில் 'நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக நடப்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு செஷனில் சரியாக செயல்படாவிட்டாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோற்க நேரிடலாம். ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியாக இருந்தால் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும்.
அத்துடன் ஆதிக்கம் செலுத்தினால் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற முடியும். 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும் இந்த இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக இல்லாமல் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் போட்டியில் சவாலும், விறுவிறுப்பும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
- முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை தொடங்கிய இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. முதல் சீசனில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
அதன்பின் நடைபெற்ற 2-வது ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
3-வது முறையாக அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வென்ற ஐசிசி சாம்பியன்ஷிப் தனக்கு உலகக் கோப்பை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
2023 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் சாய்த்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும்.
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என வென்றது.
- டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் கடும் சரிவை சந்தித்தது.
துபாய்:
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என வென்று முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்கதேசம் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது.
டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து கிடுகிடுவென முன்னேறி 5வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- அந்த மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
- நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தேதி மற்றும் நடைபெறும் இடம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்-ஆஃப்ட் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டி ஓவல் மைதானத்திலும் நடைபெற்றன. இவற்றில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.
இரு பிரிவுகளில் முதல் இடத்தை பிடிக்கும் இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்த இரு அணிகளைத் தொடர்ந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்றது.
- டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
துபாய்:
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
- இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
துபாய்:
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.
புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 68.52 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன.
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
- இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.
இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்