என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேங்கிய மழைநீர்"
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி பகுதியில் ெரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இதன் வழியாக நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கொக்கரா யன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.
குளம்போல்...
மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியின் வந்து சேரும். இவ்வாறு வரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. மழை நீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
தானியங்கி மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மழை நீரை வெளியேற்ற வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக மோட்டார்சைக்கிள், வாகனங்களில் சென்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மழை நின்றவுடன் சாலை பணியாளர்கள் வந்து சாதாரண மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றி சரி செய்தனர்.
- விவசாயிகள் வேதனை
- தென்னை மரங்கள், பயிர்கள் சேதம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தற்போது, விவசாயிகள் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள நிலக்கடலை பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிய நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் புத்துயிர் பெற்று செழுமையாக உள்ளது. இருந்தாலும், இந்த கனமழை நீடித்தால் மற்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- வாகனங்கள் ஊர்ந்து சென்றன
ஆம்பூர்:
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இதனால் வாணியம்பாடி, ஆம்பூர் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர்.
கடந்த 4 நாட்களாக அவ்வப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டபெரியாம்பட்டி கிராமத்தில் உள்ள நச்சுவா யனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு உள்ளது. இதில், தற்போது 50-க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது நிலம் உள்ளது. இங்கு அம்மன் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் கடந்த ஆறு மாதமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், கிராமத்தில் பெய்யும் மழைநீரும் கசிவுநீரும் வந்து இங்கே தொடர்ந்து தேங்கி நிற்கிறது.
அங்கு மரங்கள் இருப்ப தால், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் தண்ணீ ரில் அழுகி அந்த பகுதி துர் நாற்றம் வீசுகிறது. மேலும், ஈக்கள் கொசுக்கள் தொல் லையும் அதிகரித்து காணப் படுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல கிராமத்தின் பொது காரியங்கள், திரு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இந்த இடத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம் கள், கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற முடி யாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.
மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மைய பழைய கட்டிடம் மிகவும் பாதிப்ப டைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், சுவர்களும், ஓடுகளும் உடைந்து விழுந்து வருகிறது.அதனால், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், தண்ணீர் செல்லும் கால் வாய்களின் ஆக்கிரமிப்பு களை அகற்றி குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது.
- மழை நீருடன்,கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பல்லடம் :
பல்லடத்தில் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுமார் ஒரு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பல்லடம் கிராம பகுதிகளான, சுக்கம்பாளையம், கரடிவாவிபுதூர் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சுக்கம்பாளையம் காலனி பகுதியில் மழை நீருடன்,கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விட்டது.
இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதேபோல கரடிவாவி புதூர் பகுதியில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும், வீடுகள் முன்பு குளம் போல் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்