என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெண்கல பதக்கம்"
- மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கல பத்தக்கம் வென்றார்.
- வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப்பத்தக்கத்தை வென்றார்.
இந்த நிலையில் அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெரா வத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறும்போது, அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு மகத்தான பெருமையையும் புகழையும் கொண்டு வந்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவருக்கு வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.
இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேவுக்கு இந்திய ரெயில்வேயின் பயணச் சீட்டு பரிசோதகரில் இருந்து சிறப்புப் பணி அதிகாரியாக இரட்டைப் பதவி உயர்வு அளிக்கப் பட்டது.
- பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச்சுடுதலில் பிரிவில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றெடுத்த வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பியுள்ளார். ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மனுவின் குடும்பத்தினர் உட்பட 100 கணக்கானோர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில் விமானமானது ஒரு மணி நேரம் தாமதமாகி 9.20 மணிக்கு தரையிறங்கியது.
தொடர்ந்து மனு பாக்கருக்கும் அவருடன் வந்த பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களின் வரவேற்பினால் நெகிழ்ந்த மனு பாக்கர், இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் 10m ஏர் பிரிஸ்டல் துப்பாக்கிச்சூடுதல் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், 10m பிரிஸ்டல் இரட்டையர் பிரிவில் சரபோஜித் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
- இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.
சேலம்:
கோவாவில் நடைபெற்று வரும் 37-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் சேலத்தை சேர்ந்த அனுஷியா ப்ரியதர்ஷினி டேக்வாண்டோ - 62 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டெல்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படி லக்னோவில் நடைபெற்ற ஓபன் செலஷன் டெரயல்ஸ் - ஓய்ல்டு கார்டு என்டீரி டேக்வாண்டோ போட்டியில் 62 கிலோ எடை பிரிவில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இருந்து 37-வது தேசிய அளவிலான விளையாட்டு டேக்வாண்டோ விளையாட்டில் பங்குபெற்றவர்களில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை அனுஷியா ப்ரியதர்ஷினி ஆவார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆைணயத்தின் மிஷன் சர்வதேச பதக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு டேக்வொண்டொ பயிற்சி பெற்று வருகிறார்.
அனுஷியா ப்ரியதர்ஷினிக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்துக்களை தெரிவித்துள்ளனர்.
- முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
- 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.
இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியது. 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.
கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
- தேசிய அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது
- வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
தண்டராம்பட்டு:
தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் திருவண்ணாமலை மாணவர்கள் வெண்கல பதக்கம் என்று சாதனை புரிந்தனர். அவர்களை மாநில கைப்பந்து சங்க துணை தலைவர் இரா. ஸ்ரீதரன் வாழ்த்தினார்.
44 வது தேசிய அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் கடந்த மாதம் 26,27,28,29,30 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைப்பந்து அணியில் திருவண்ணாமலை மாவட்டம் கைப்பந்து சார்பாக கலந்து கொண்டு விளையாடிய திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆர். ஆகாஷ் மற்றும் சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் மகேஷ் சர்மா ஆகியோர் வெண்கலம் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் மாநில துணை தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து சங்கம் தலைவருமான இரா. ஸ்ரீதரனிடம் வாழ்த்துப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலை மாவட்ட கூடைப்பந்து செயலாளர் ரமேஷ் திருவண்ணாமலை மாவட்ட கோ கோ சங்க செயலாளர் ஆனந்தன் திருவண்ணாமலை மாவட்ட கைப்பந்து செயலாளர் ஏ.கமல்ராஜ், சங்க பொருளாளர் பி.தண்டாயுதபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.
- முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்.
- நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அனுப்பர்பாளையம் :
மதுரையை பூர்வீமாக கொண்ட தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் (வயத 23) பெர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார். முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மதன் பவுண்டேஷன் சார்பில் திருமுருகன்பூண்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேஜஸ்வின் சங்கருக்கு பொன்னாடை போர்த்தி ரூ.5 லட்சம் காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினர். மேலும் பயிற்சியாளர் சுனில் குமாருக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளிக் குழந்தைகளுடன் விளையாட்டு துறையில் சாதிப்பது குறித்த கலந்துரையாடலில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பதிலளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்