என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவசம்"

    • நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
    • “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    "பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.

    நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • 21-ந்தேதி அறிமுக வகுப்பு நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 46 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    மேலும் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தத் திட்ட மிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி (திங்கள்கிழமை) பகல் 11 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகல் மற்றும் தேர்வு மைய அனுமதிச் சீட்டு ஆகியவற்றுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21-ந் தேதி வருகை புரியுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்து உள்ளார்.

    • மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.
    • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வரு கிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நியாயவிைலக் கடைகள் மூலம் வேட்டி-சேலை களை வழங்க அரசு உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததும் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து மண்டலம் வாரியாக அனுப்ப ப்பட்டு, பின்னர் மாவட்ட ங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதன்படி குமரி மாவட்டத்தில் விநியோ கிக்கப்பட வேண்டிய வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் வந்தன. மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.

    தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் வேட்டி-சேலைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தாலுகா அலுவலகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட வேட்டி-சேலைகள்,வட்டா ட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

    அங்கிருந்து அவை விரைவில் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

    • குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) தகவல்
    • பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகை வழங்கப்படும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு வழிகாட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய நிதி ஒப்பளிப்பு அரசாணை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்தி முடிக்கப்பட்டது. 9-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்பட உள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி உள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலு வலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவல கங்களில், இருந்தும் மேலும் மீனவர் கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள் ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்.

    இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகையும் வழங்கப்படும்.

    எனவே 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சத வீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் ஏற்பாடு
    • பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அழைப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் 2023-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வருகிற 8-ந் தேதி இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • பொருட்காட்சியை இலவசமாக கண்டு களிக்கலாம் என பொருட்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முதல்முறையாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி மே 2-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் இந்த பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது. கண்காட்சி மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்ற னர். துபாயில் உள்ள அரபா லோட்டஸ் ரிப்பன் பில்டிங் புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, வரிக்குதி ரை,மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.மேலும் இப்பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்,பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சிறுவர்களுக்கான நீச்சல் குளம்,பொருட்காட்சி திடலை சுற்றி வரும் அப்பளம்,வாழைத்தண்டு சூப்,ஜிகர்தண்டா போன்ற சுவையான தின்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.நுழைவு கட்டணமாக ரூபாய் 50 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பொருட் காட்சியை கண்டு களிக்க லாம் என பொருட் காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார்.
    • சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றார்.

    தென் மேற்கு டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் சவிதா சர்மா. இவர் வங்கியில் மூத்த நிர்வாகியா பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று சவிதா பேஸ்புக் பக்கம் மூலம் ஒரு தாலி (உணவுத் தட்டு) வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையால் ஈர்க்கப்பட்டார். இந்த சலுகை பற்றி அறிந்துக் கொள்வதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொண்டார்.

    ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. என்றாலும் சில மணி நேரத்திற்கு பிறகு சவிதாவிற்கு அழைப்பு வந்துள்ளது. சாகர் ரத்னா என்கிற பிரபல உணவகத்தில் இருந்து இலவச உணவுத் தட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சலுகையை பெற லிங்க் உள்ளே நுழைந்து பதிவு செய்யவும் கூறியுள்ளனர். 

    அதன்படி சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார். செல்போன் ஹேக் செய்யப்பட்டு அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ.40 ஆயிரமும், இன்னும் சில வினாடிகளில் மீண்டும் ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறுச்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டை புகார் மூலம் ரத்து செய்துள்ளார்.

    இதையடுத்து மே 2ம் தேதி அன்று, சவிதா சர்மா இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற மோசடி சலுகைகளின் வலை இணைப்புகள் வாட்ஸ்அப் மூலம் இன்னும் மக்களிடையே பரவி வருவதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றும் சர்மா கூறியுள்ளார்.

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    கனரா வங்கியின் சாா்பில் நடத்தப்படும் இலவச அழகு கலைப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது காலை, மாலை வேளைகளில் தேநீா், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் மற்றும் தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    காமராஜரின் 121 வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில்அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் 150 மாணவ மாணவிகளுக்கும், தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .

    இதில் மத்திய மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் அப்பாஸ்,மத்திய மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்,மத்திய மாவட்ட கௌரவ ஆலோசகர் லோகு ,மத்திய மாவட்ட ஆலோசகர் வசந்த் ,மாவட்ட நிர்வாகி மகேந்திரன் , மருது, தெற்கு நகர நிர்வாகிகள் ஹரிஸ் ராம்,முருகன், சரவணக்குமார், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
    • மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

    தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.

    தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.

    இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.

    இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மழையூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. முத்துராஜா மாணவர்களுக்கு வழங்கினார்

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நி லைபள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர். முத்துராஜா இரண்டு நாள் பயிற்சி பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் சங்க மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன் , ராஜேந்திரன், சந்திரசேகர், பிரபுகாந்தி, சேகர், கணேசன், மணிகண்டன், மதி, ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×