என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டத்தில் தீர்மானம்"
- பிரான்மலையில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
- விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை தனியார் மண்டபத்தில் வட்டார அளவி லான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கிருங்காக் கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் சிங்கம்புணரி சேவுகப்பெரு மாள் கோவிலை சேர்ந்த 5 ஆயிரம் கோவில் மாடுகள் நிலை கொண்டுள்ளது.
இந்த மாடுகள் இப்பகுதி யில் விவசாயம் செய்யவிடாமல் விவசாயத்தை அழித்து விடுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நில மாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக விவசாயிகள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கவும்.
இந்த பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும். பிரான்மலை வட்டார 20 கிராமங்களை சுற்றி விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் நிர் வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அரசு மற்றும் நிர்வாகம் இந்த கோவில் மாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் தேவஸ்தான நிர் வாகமும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும் பட்சத்தில் 20 கிராம விவசாயிகளும் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் .
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்லம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்றத்தில் பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு அணைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது.
மேலும் தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை முதன்மை செயலர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இப்பணியிடங்கள் நிரப்பும்போது கொரோனா அதிகம் பரவி வந்த கால கட்டங்களில் தன் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இந்த பணியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டன.
- ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும்.
- கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
தருமபுரி,
தமிழக விவசாயி சங்க தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை தீவனங்களின் விலை 50 சதவீதம் உயர்வு மற்றும் உற்பத்தி செலவு உயர்வு ஆகிய காரணங்களால் பசும் பால் லிட்டருக்கு ரூ. 42-ம், எருமைப்பால் லிட்டருக்கு 52-ம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆவின் நிர்வாகத்தை காப்பாற்றவும், தனியாரிடம் பால் ஊற்றுவதை தடுக்கவும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். தமிழக பட்ஜெட் நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படும் நிலையில் பால் கொள்முதல் விலையை உடனே அறிவிக்காவிட்டால் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
தருமபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக திப்பம்பட்டி கூட்டுரோட்டில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் அனைவரும் கறவை மாடுகளுடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவு சங்கத்தின் மார்ஜின் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். லிட்டருக்கு ரூ. 7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணிவேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்தி ஆவின் பணியாளராக நியமிக்க வேண்டும்.
ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும். கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
ஆரம்ப சங்க பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணையத்திலிருந்து கிராம சங்கங்களுக்கு நேரடியாக பால்பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சின்னசாமி, கந்தசாமி, முருகேசன், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
- இதில் வார்டு உறுப்பினர்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் மனோ கரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சியில் ரூ.36.50 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் பணிமேற்கொள்ள மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும் 18 வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணை செயலாளர் மாதேஸ்வரன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார்.
- மாநிலக்குழு உறுப்பினர்சின்னசாமி மாவட்டக்குழு முடிவுகள் குறித்து பேசினார்.
நல்லம்பள்ளி,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இண்டூர்வட்டாரம்,பி.எஸ்.அக்ராகரம் கிளை கூட்டம் முன்னால் ஒன்றிய கவுன்சிலர்பெரியண்னன் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணை செயலாளர் மாதேஸ்வரன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர்சின்னசாமி மாவட்டக்குழு முடிவுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் பி.எஸ்.அக்ரகாரம் 2-வது வார்டில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும். ரேசன் கடையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர்
- அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தருமபுரி,
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்தருமபுரி மாவட்ட மாநாடு அரூர் தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர்தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. கர்ணன், ராஜசேகர்,சிவபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.
செல்வகுமார், அப்பு என்கின்ற சுரேஷ்,ரங்கநாதன், அருண்க ுமார்,கார்த்திக்,முகமது ரபிக்,அரவிந்த்,அசோகன், இளஞ்செழியன், மணி,குரல்வாணி, மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் வருகின்ற 23-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது,மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர் .
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. அந்த விலையை குறைக்க வேண்டும்.
பிப்ரவரி 23, 24, 25, 26, ஆகிய தேதிகளில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- நகராட்சி ஆணையர் தகவல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மேலும் இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொது மக்களின் சுகாதாரம் குடிநீர் விநியோகம் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் மூலம் துறை அதிகாரிகளால் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது அனைத்து வார்டுகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கண்டறிந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பழனி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடு இருந்தால் 73973 92675 (நகராட்சி ஆணையாளர்), 73973 92676 (நகராட்சி பொறியாளர்), 8248887937 துப்புரவு ஆய்வாளர் (பொறுப்பு) வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்