என் மலர்
நீங்கள் தேடியது "ராஜா எம்.எல்.ஏ."
- போட்டிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் போட்டிகளில் பங்கேற்றன.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசை பாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இதில் ஆலங்குளம் காளத்திமடம் அணி 3-வது இடமும், சேரன்மாதேவி ஏ.வி.எஸ். கபடி குழு 2-வது இடமும், குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும் பெற்றது.
இதில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.15ஆயிரம், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 10ஆயிரமும், 3 மற்றும் 4-ம் இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தி.மு.க. நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம்,காளிசாமி மற்றும் பிரகாஷ் ஜெயக் குமார், கேபிள்கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிர பாகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கோலப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 12 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசைபாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசு பெற்ற சுப்புலட்சுமிக்கு பிரிட்ஜ், 2-ம் பரிசு பெற்ற குருக்கள்பட்டியை சேர்ந்த பெண்ணிற்கு கிரைண்டர், 3-ம் பரிசு பெற்ற பெண்ணிற்கு மிக்ஸி மற்றும் ஆறுதல் பரிசாக 12 பேருக்கு குக்கர் வழங்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், இளைஞர் அணி சரவணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம், காளிசாமி மற்றும் பிரகாஷ், ரகுமான், ஜெயக்குமார், கேபிள் கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிரபாகரன் மற்றும் நகர நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரிய கருப்பன் கலந்துகொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், திலீப்குமார், வர்த்தக அணி பத்மநாபன் மற்றும் அஜய்மகேஷ்குமார், வக்கீல்கள் காசிராஜன் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேஷ், வீரா வீரமணி, சிவா, கணேஷ், சிவாஜி, ஜான்சன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 100 ஆண்டு பழமையான ஈஸ்வரன் கோவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருந்தார்.
- சங்கரன்கோவில் தங்கத்தேரில் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கதேர் உலா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் 100 ஆண்டு பழமையான ஈஸ்வரன் சமேத சிவகாமி அம்பாள் கோவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருந்தார்.
கும்பாபிஷேக பணிகள்
அந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று சட்டசபையில் பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேல சிவகாமியாபுரத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கோவிலான ஈஸ்வரன் கோவிலில் வருகிற 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு 8 மாத்திற்குள் கும்பாபிஷேக பணிகள் நடத்தப்படும் என்றார்.
மேலும் இதற்கான 10 பணிகளில் 6 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 4 பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதற்காக சுமார் ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சங்கரநாராயண சுவாமி கோவில்
அதனை தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ. 1000 ஆண்டு பழமை வாய்ந்த சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் தற்போது நகராட்சி வசமாக இருக்கும் ஆவுடை பொய்கை தெப்பத்தின் சுற்றுச்சுவர் மோசமான நிலையில் உள்ளதால் அதை பராமரிக்க வேண்டும், அந்த தெப்பக்குளத்தை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டுக்குள் ரூ. 6 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். சங்கரன்கோவில் தங்கத்தேரில் தங்க முலாம் பூசும் பணிகள் இன்னும் சில நாட்களுக்குள் பூசப்பட்டு மீண்டும் தங்கதேர் உலா நடைபெறும்.
ஆவுடைபொய்கை தெப்பம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து சுமார் ரூ. 90 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தை மாதம் கடைசி வெள்ளி அன்று தெப்ப தேரோட்டம் நடக்கும். அதில் ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஈஸ்வர சமேத சிவகாமி அம்பாள் கோவில் மற்றும் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டுக்குள் நடத்தப்படும், ஆவுடை பொய்கை தெப்பமும் சரி செய்யப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
- சங்கரன்கோவிலில் சாலை வியாபாரிகள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு சாலை வியாபாரிகள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன்,
முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் காளிசாமி, கோமதிநாயகம், வக்கீல் ஜெயகுமார், முருகன், வெங்கடேஷ், காவல் கிளி, வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ், சிவாஜி, சிவா, ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
- 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய் சாந்தி மஹாலில் நடந்தது.
இதில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் மாநில அயலக அணி இணைச் செயலாளர் புகழ்காந்தி, வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் நல்லசேதுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார்.
இதில் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் விதத்தில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை அந்தந்த பகுதி செயல் வீரர்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க.வில் 1 கோடி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற அறிவி ப்பின்படி சங்கரன்கோவில் தொகுதியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், இந்தியாவை வியக்கும் வகையில் ஆட்சி செய்த கலைஞர் நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக தி.மு.க. தலைவர் அறிவித்தது போல தி.மு.க.வில் புதிதாக 1 கோடி பேர்களை இணைக்க வேண்டும் என முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதமாக செயல்பட்டு முடிக்க வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் விரைவாக முடிக்க வேண்டும் . தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் சாதனைகளை அனைவரும் எடுத்து கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் மற்றும் மகளிர் திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் வளர்ச்சி பணிகளுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்து கூறி புதிய உறுப்பினர்களை குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை சேர்க்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, பராசக்தி, சங்கரன்கோவில் நகரத் துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன்மற்றும் ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.
- தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக வென்றிலிங்கபுரம், தட்டான்குளம், ஈச்சந்தா ஆகிய கிராமங்களில் 7-நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து பேசினார்.
இதில் தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் குமாரி செல்வி, மேனகா, பேராசிரியர் கணபதி, வென்றிலிங்கபுரம் ஊராட்சி தலைவி சுமதி, தொழிலதிபர் கனகவேல் மற்றும் பெஞ்சமின் நிர்மல் முத்துக்குமார், கணேசன் உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக காசிராஜன் நியமிக்கப்பட்டார்.
- புதிய நிர்வாகிகள் ராஜா எம்.எல்.ஏ.வை. சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு புதிதாக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலோடு விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. அறிவித்தார். அதன்படி தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக பொய்கைமேட்டை சேர்ந்த காசிராஜனும், துணை அமைப்பா ளர்களாக சிவகிரி சேவுகபாண்டியன், சங்கரன்கோவில் கணேசன், வாசுதேவநல்லூர் கிருஷ்ணமூர்த்தி, சிவகிரி சரவணக்குமார், சின்னகோவிலாங்குளம் மகாராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், மாணவர் அணி கார்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- பல ஆண்டுகளாக சிதிலமடைந்த இக்கோவில் பராமரிப்பற்ற நிலையில் இருந்தது.
- கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காகவும், கும்பாபிஷேகம் நடத்தவும் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சிவகாமியாபுரத்தில் சிவகாமி அம்பாளுடன் காட்சியளிக்கும் உமையொருபாக ஈஸ்வரர் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
பல ஆண்டுகளாக சிதிலமடைந்த இக்கோவில் பராமரிப்பற்ற நிலையில் இருந்தது. பழுதடைந்த இக்கோவில் புனரமை க்கப்பட்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும், தினசரி பூஜைகள் நடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை யை ஏற்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. , அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து சட்டமன்றத்திலும் ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் மேல சிவகாமியாபுரத்தில் உள்ள பழுதடைந்த கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறும் என அறிவித்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பராமரிப்பற்று பழுதடைந்த நிலையில் உள்ள இக்கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காகவும், கும்பாபிஷேகம் நடத்தவும் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.
இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலை புனரமைக்கும் பணிக்கு உத்த ரவிட்ட முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- தாம்பரத்தில் உள்ள புதிய இரண்டு நடை மேடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- தென்காசி ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீ கவுசல் கிஷோரை நேரில் சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரெயில், தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களாக இயங்கிக் கொண்டிருக்கும் நெல்லை - தாம்பரம், நெல்லை - மேட்டுப்பா ளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும்.
ஈரோடு - நெல்லை ரெயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்தல், பாவூர் சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் ரெயில் நிலையங்களின் நடை மேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும்
தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கும் வகையில் தாம்பரத்தில் உள்ள புதிய இரண்டு நடை மேடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தென்காசியில் இருந்து ரெயில்கள் இயக்கும் வகையில் தென்காசி ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும். அனைத்து ரெயி ல்களும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நடவடி க்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லுதல், நெல்லை - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்சத்தி ரத்தில் நின்று செல்ல வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட தெற்கு ரெயில்வே பொது மேலாளர், சங்கரன்கோவிலில் ரெயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தென்காசி வழியாக பெங்களூருக்கு ரெயில் இயக்குவதற்கு சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும் எனவும் தரெிவித்தார். சந்திப்பின்போது ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் சாந்தசீலன் உடன் இருந்தனர்.
- சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்போது தினமும் நேரத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
- விசைத்தறி உற்பத்தியாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
சங்கரன்கோவில்:
தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலத்திற்குள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முயற்சியாலும் முதல்- அமைச்சரின் நடவடிக்கையால் சங்கரன் கோவில் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மக்களு க்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
ரூ. 12 கோடியில் புதிய கட்டிடம்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்போது தினமும் நேரத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அங்கு வரும் தொகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏ. ராஜா இல்லாத நேரத்திலும் எழுதிக் கொடுத்து விட்டு சென்றால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம், ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலக கட்டிடம், திருவேங்கடத்தில் ரூ. 2.61 கோடி மதிப்பீட்டில் புதிய தாசில்தார் அலுவலகம், குருவிகுளம் பள்ளி வளாகத்தில் ரூ. 5.2 லட்சம் மதிப்பில் கழிப்பறை வசதியுடன் கூடிய வகுப்ப றைகள், பெருங்கோட்டூர் மற்றும் பெரும்பத்தூர் கிராமத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை, சங்கரன்கோவில் தொகுதியில் சுய உதவிக் குழுக்கள் தொழில் வாய்ப்புகள் பெருக்கவும் புதிய தொழில்கள் உருவாக்கவும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் 3 வட்டார வணிக மையங்களுக்கு 107 லட்சம் நிதி ஒதுக்கீடு, பெண் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 46 லட்சம் வழங்கப்பட்டுள்ளது,
அடிப்படை வசதிகள்
ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில ரூ. 2.80 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள், சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் ரூ. 6.99 லட்சம் மதிப்பீட்டில் மின்சாதனம், மக்களை தேடி மருத்துவ வாகனம், சங்கரன்கோவில் நகராட்சி யில் ரூ. 69 லட்சத்தில் நமக்கு நாமே திட்டம் திட்டத்தின் கீழ் 4 பணிகள், நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு விழா நடத்தாமல் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சாயமலை கோவில் கும்பாபிஷேக பணிகள், சங்கரன்கோவில் கோவில் கும்பாபிஷேக பணிகளு க்காக நிதி ஒதுக்கீடு, அரசு மருத்துவமனைக்கு முன்னோடி கட்டிடம் கட்ட ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு, விசைத்தறி உற்பத்தி யாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று உத்தரவு, புதிய பஸ்நிலைய பணிகள், புதிய வணிக வளாகம், சங்கரன்கோவில் தொகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம், சங்கரன்கோவில் தொகுதி குருவி குளம், மேலநீலித நல்லூர், மானூர், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டின்றி கிடைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தி அது விரைவில் சரி செய்யப் படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேவநேய பாவாணர்
சங்கரன்கோவில் தொகுதியில் பிறந்த தேவநேய பாவாணருக்கு, சென்னையில் சிலை, சங்கரன்கோவில் நகர்ம க்களுக்கு தினசரி குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் 2 புறவழிச் சாலைகள், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி முதல் திருவேங்கடம் சாலை வரை நான்கு வழிச்சாலை திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. அரசு அமைந்த உடன் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு மருத்துவ கட்டிடங்கள், புதிய அரசு விருந்தினர் மாளிகை, சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில் பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி பொறியாளர்கள் சுரேந்தர், பாக்கியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.இது தொடர்பாக எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், அதை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சங்கரன்கோவில் மற்றும் தென்காசியில் ஆய்வுப்பணி களுக்காக வர இருப்பதால் அது குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.