என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடியடி"

    • மகாராஷ்டிராவில் முதன்முறையாக வார்காரிஸ் பக்தர்கள் மீது தடியடி
    • 75 பேருக்குப்பதில் அதிகமானோர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    கடந்த முறை ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த முறை 75 பேர் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினார்கள். வார்காரி பக்தர்கள் மீது தடியடி நடத்துவது, மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவே முதல் முறையாகும்.

    இந்த சம்பவத்திற்காக உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''ஐயோ.. இந்துத்துவா அரசின் பாசாங்குகள் அம்பலமானது.. முகமூடி அவிழ்ந்தது. மகாராஷ்டிராவில் முகலாயர்கள் மறுஅவதாரம் எடுத்துள்ளனர்'' எனக்குறிப்பிட்டுள்ளார்.

    ''ஸ்ரீ ஷேத்ரா ஆலந்தியில் வார்காரி பக்தர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விதம் மிகவும் மூர்க்கத்தனமானது. மகான் ஞானேஸ்வர் மகாராஜ் முன்னிலையில் வார்காரிகளை அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வார்காரி பிரிவினர் மீது அரசுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கிறதா அல்லது இல்லையா?'' என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
    • ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.

    அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.



    • கார்பைடு தொழிற்சாலை கழிவுகளை போபாலில் இருந்து பிதாம்பூருக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் தடியது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டு கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வெளியான விசவாயுவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 வருங்கடகளாக நச்சுக் கழிவு அங்கேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை தொழிற்சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவை 12 கண்டெய்னர்கள் மூலம் தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு 12 பிரத்யேக கண்டெய்னர்கள் மூலம் பிதாம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது என்ன நியாயம்?. அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரும்பால அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் நச்சுக் கழிவை பிதாம்பூருக்கு மாற்றியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    இதனால் போராட்டம் நடந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தனியாக மாட்டிய இளைஞர்களை போலீசார் லத்தியால் மிகக்கொடூரமாக தாக்கினர். இச்சம்பவம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிதாம்பூரில் கழிவுகளை எரிக்கும் மிக அதிநவீன ஆலை உள்ளது. இந்த ஆலையில்தான் நச்சுக் கழிவு எரிக்கப்பட இருக்கிறது. ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். வேகத்தை மணிக்கு 270 கி.மீ. என அதிகரித்தால் 51 நாட்கள் ஆகும்.

    • போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்ய வேண்டும்
    • இந்து முன்னனி கோரிக்கை

    கன்னியாகுமரி:

    தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் 153 ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மண்டை க்காடு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    முன்னதாக அனைத்து விநாயகர் சிலைகளும் வாக னங்களில் ஊர்வலமாக தக்கலை அருகே உள்ள வைகுண்ட புரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டு வரப்பட்டது. அப்போது வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

    இதில் சில வேன்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்ப்பட்டுள்ளது. சங்கரன் காவு பகுதியில் இருந்து வந்த வாகனம் அழகிய மண்டபம் பகுதியில் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும் படி கூறினர்.

    இதனால் போலீசாருக்கும் வாகனத்தில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதன் பிறகு விநாயகர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டபுரம் ராமர் கோவிலுக்கு வந்தது. அங்கு வந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் சங்கரன் காவு பகுதியில் இருந்து வந்தவர்கள் போலீஸ் தடியடி குறித்து புகார் கூறினர்.

    மேலும் சம்பவத்தின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அங்கு இருந்த தாகவும் அவரது உத்தரவின் பேரில் தான் தடியடி நடத்தப்பட்ட தாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    இதற்கிடையில் தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத்தை இடம் மாற்ற செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்காக கண்டன போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    தக்கலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இன்று மாலை இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை எங்கு நடத்துவது, எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×