search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகை பூ"

    • கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.
    • பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
    • பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மல்லிகை பூ போலவே பிச்சி பூ, கனகாம்பரம் கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது.
    • பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்கள், கோவில் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

    தற்போது கார்த்திகை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடத்த மாட்டார்கள். எனவே அடுத்ததாக தை மாதம் பிறந்த பின்னரே சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நாளை (வியாழக்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லிகை பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ. 1,000 உயர்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதேபோல் பிச்சிப்பூ கிலோ ரூ.700-க்கும், ரோஜா பூ ரூ.100 முதல் 150 வரையும், கேந்தி பூ ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்கப்பட்டது.

    பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

    • பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ்பெற்ற பூ சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், ஆவரைகுளம், பழவூர் ஆகிய ஊரிலிருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், நெல்லை மாவட்டம் திருக்கண்ணங்குடி, அம்பாச முத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊரிலிருந்து பச்சை துளசியும், தோவாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, சேலத்தில் இருந்து அரளிப்பூ வருகின்றன.

    தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கும், அரளி, ரோஸ் ரூ.150-க்கும், கிரேந்தி ரூ.80-க்கும், மஞ்சள் கிரோந்தி ரூ.85-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படு கிறது.

    இதே பனிப்பொழிவு நீடிக்கும் என்றால் பூக்கள் விலை இதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.

    • பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.

    இதேப்போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர்.

    வியாபாரிகள் மொத்தமா கவும் பூக்கள் வாங்கி செல்வர்.

    பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    அந்த வகையில் இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையாகின.

    ஆனால் இன்று கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    1100, முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இவற்றின் விலையும் நேற்றைய விட அதிகமாகும்.

    இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது.

    இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.

    • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பலர் வீட்டில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

    அப்போது விநாயகருக்கு எருக்கம் பூ, அருகம்புல் மாலையிட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பொரி, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவார்கள்.

    விநாயகர் சிலைகள்

    இதையொட்டி இன்று காலை முதலே சேலம் கடைவீதி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், பட்டைக்கோவில், ஆனந்தா காய்மார்க்கெட், சாலையோர கடைகள் மற்றும் அனைத்து உழவர் சந்தைகளிலும் எருக்கம் பூ மாலை, அருகம்புல், விநாயகர் சிலைகள் மீது வைக்கப்படும் அலங்கார குடைகள் மற்றும் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய விநாயகர் சிலை முதல் பெரிய அளவிலான, பல்வேறு வடிவ சிலைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. சிலைகளின் அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனால் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். பெரிய அளவிலான சிலைகளை மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் வைத்து வழிபட கொண்டு சென்றனர்.

    பூஜை பொருட்கள்

    இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூஜைக்கு தேவையான பொருட்களான வெற்றிலை, பாக்கு, இலை, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், அருகம்புல், விநாயகருக்கு உடுத்துவதற்கு பட்டு துணி, அலங்கார குடைகள் எருக்கம் பூ மாலை உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பிரசாதம் செய்வதற்கான பொருட்கள், பொரி, கடலை, வெல்லம் போன்ற பொருட்களை வாங்கவும் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இது மட்டுமின்றி பூக்கள், தேங்காய், வாழை தார் உள்ளிட்டவையும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    மல்லிகை கிலோ ரூ.1200

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சாமந்தி, சம்மங்கி, ரோஜா, மல்லிகை, முல்லை, அரளி உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்குமல்லிகை-ரூ.800, முல்லை-ரூ.500, ஜாதிமல்லி-ரூ.280, காக்கட்டான்-ரூ.360, கலர் காக்கட்டான்-ரூ.360, மலைக்காக்கட்டான்-ரூ.360, அரளி-ரூ.140, வெள்ளைஅரளி -ரூ.150, மஞ்சள் அரளி -ரூ.150, செவ்வரளி -ரூ.200, ஐ.செவ்வரளி -ரூ.150, நந்தியாவட்டம் -ரூ.150, சி.நந்தியாவட்டம் -ரூ.300, சம்மங்கி -ரூ.140, சாதா சம்மங்கி -ரூ.140-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் ஆப்பிள்-ரூ.250, சாத்துக்குடி-ரூ.80, ஆரஞ்சு-ரூ.250, மாதுளை-ரூ.200, திராட்சை ரூ.100-க்கு விற்கப்பட்டது. இவை தவிர பேரிக்காய், கொய்யா சோளம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    • சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
    • இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

    இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.நேற்று 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 600 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லைப்பூ நேற்று 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 400 ரூபாயாக உயர்ந்தது.

    ஜாதிமல்லிகை கிலோ-260, கலர் காட்டன்-240, அரளி-50, சம்பங்கி100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த பூக்கள் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில் இனிவரும் நாட்களில் முகூர்த்த நாட்கள் இருப்பதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் இருக்கும் என்று தெரிவித்தனர்.

    • கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    நெல்லை:

    கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.

    இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.

    அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

    • மல்லிகை சாகுபடி பயிற்சி நடந்தது.
    • உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசு 23-24-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் விருதுநகர் மதுரை திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளடக்கி மல்லிகை மண்டலமாக தரம் உயர்த்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.

    அதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மல்லிகை சாகுபடி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரம் தொட்டியாங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கேற்றனர் அவர்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே) இணை பேராசிரியர்கள் அருள், அரசு (தோட்டக்கலை) மற்றும் பரமசிவன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

    இப்பயிற்சியில் மல்லிகை சாகுபடி தொழில், கவாத்து முறைகள், பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் மேலாண்மை, பருவமில்லா காலங்களில் மல்லிகைப்பூ உற்பத்தி பெருக்குதல், பூச்சி, இயற்கை முறையில் மல்லிகை வளர்ப்பு பற்றியும் எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மல்லிகை சாகுபடியில் உள்ள சந்தேகங்களை வயல்வெளி சென்று விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாரீஸ்வரி, தோட்டக்கலைஉதவி இயக்குனர் கண்ணன், தோட்டக்கலை அலுவலர் பூ கலைவாணி, உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மல்லிகை பூக்கள் விலை ‘திடீரென’ சரிந்தது.
    • திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு.

    மதுரை

    திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வது வழக்கம். அதன்படி முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கிலோ 4 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும்.

    அதுபோல் திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு. தற்போது திருவிழா காலங்கள் முடிந்ததாலும், அதிக அளவில் முகூர்த் தங்கள் இல்லாததாலும் மதுரையில் மல்லிகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    மேலும் பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் மதுரை மாட்டுத்தா வணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மல்லிகை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மற்ற பூக்களான பிச்சி 200 ரூபாய்க்கும், முல்லை 250 ரூபாய்க்கும், சம்மங்கி 50 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 50 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விற்பனை மந்தமாக உள்ளதாலும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்னும் சில நாட்களில் முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை வழக்கம்போல சீராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.
    • மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மதுரை:

    மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மல்லிகை பூக்கள் அதிகளவில் கிடைப்பதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

    தினமும் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு 20 முதல் 25 டன் வரை மல்லிகை பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது மல்லிகை பூக்கள் விலை பெருமளவு சரிந்துள்ளது.

    பண்டிகை, திருவிழா மற்றும் முகூர்த்த நேரங்களில் மல்லிகை பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும். சில நேரம் கிலோ ரூ. 1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகும். இதனால் மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை மிகவும் வீழ்ச்சியடைந்து மதுரை மார்க்கெட்டில் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பிச்சி, முல்லை பூக்கள் விலையும் குறைந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.300-க்கும், பட்டர் ரோஸ் கிலோ ரூ. 80-க்கும், சம்பங்கி பூக்கள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    வழக்கமாக கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படும் கனகாம்பரம் மலர்களும் இன்று கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் விலை சரிவு காரணமாக மலர் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஆனால் விலை குறைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மல்லிகை பூக்கள் உள்பட பல்வேறு பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு தினமும் வருகிறது. இங்கிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்வார்கள்.

    பூக்கள் விலை உயர்வு

    வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று சந்திப்பு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்து ரூ. 800-க்கு விற்கப்பட்டது.

    அதே போல் அரளிப்பூ நேற்று ரூ. 150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரு. 50 உயர்ந்து ரூ. 200-க்கு விற்பனையானது. சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.200-க்கும் விற்பனையானது. எனினும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    ×