என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்ற வளாகம்"

    • நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை, கல்வித்தந்தை மருத்துவர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்தான முகாம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டா ளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இபுராஹிம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் பரணிதரன், மாவட்ட அமர்வு நீதிபதி விரைவு மகளிர் நீதிமன்றம் கோபிநாத், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    • ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.

    நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவு.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிகரன், அருள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தின் அப்பேத்கர் சிலை அருகே கார் பார்க்கிங்கில் வைத்து லஞ்ச் பேக்கில் நாட்டு வெடிகுண்டுகள் கைமாறியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

    இதைதொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது எப்படி ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், வெடிகுண்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    • கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
    • நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பஞ்செட்டி சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.49.28 கோடி செலவில் 4 மாடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்டப்படுகிறது.

    சுமார் 6.35 ஏக்கர் பரப்பளவில் 6 நீதிமன்ற வளாகங்கள் இதில் வருகின்றன. இதற்கான கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏ.டி.எம். மையம், தபால் நிலையம், கேண்டீன் ஓய்வறை, கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.

    கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை, சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ், தர்மதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நீதிமன்ற வளாகத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது.
    • பல்லடம் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். விழாவில் நூலகம், மற்றும் மறைந்த மூத்த வழக்கறிஞர்கள் ராஜமாணிக்கம், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உருவப் படத்தை திருப்பூர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள்,மூத்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவுபடி அருப்புக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் இணைந்து நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள இ.எஸ்.ஐ. அல்லது பி.எப்.திட்டத்தில் உறுப்பினர் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள், சமையல் பணியாளர்கள், நெசவாளர்கள், சாலையோர வியாபாரிகள், சலவைத்தொழிலாளர்கள், முடி திருத்தபவர்கள் பங்கேற்கலாம்.

    அதேபோல் தையல் தொழிலாளர்கள், பனைமர தொழிலாளர்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், வாகனம் பழுது நீக்கும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் இதர அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பங்கேற்று பதிவு செய்து பயன் பெறலாம்.

    அந்த முகாமில் பதிவதற்கு ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×