என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எரிந்தது"
- தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம்.
- குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
நாகர்கோவில் :
தக்கலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம். இந்த மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. அதனருகில் மருத்துவ மனை ஊழியர்கள் குப்பை கழிவுகள் போடுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை அந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை கண்ட நோயாளிகள் பலர் ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றி அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீயை அணைந்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க. கவுன்சிலர் கூறும் போது, "தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அதற் கான குடியிருப்பு இல்லாத பகுதியில் கொட்டி எரித் தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அரசு இது குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
- சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அடுத்த அணைக்கரை மதுசா லையில் வசிப்பவர் பாஸ்கர் (வயது 40) விவசாயி. இவர் தனது வீட்டின் வளர்க்கும் மாடுகள், கன்றுகளுக்காக வயலில் அறுவடை செய்த வைக்கோலை சுமார் 100 கட்டுக்கும் மேலாக அடுக்கி வைத்து போராக அமைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவி டைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வின்சென்ட் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் குப்பை களை கொளுத்தி யதால் காற்றில் தீ பரவியதில் வைக்கோல் போர் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரூ.20 ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
- ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 5 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. வீடுகளில் இருந்த பீரோ, நகை, பணம், டிவி, மிக்சி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு ஆவணங்களும் தீயில் கருகின.
வீடுகளில் பிடித்த தீ, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலிலும் பரவியது. இதில் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. விசாரணையில், உசேன் என்பவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் இந்த தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
விபத்து குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுளையும் செய்தனர்.
பின்னர், ஆத்தூர் நகர தி.மு.க செயலாளர் பாலசுப்பிரமணியம் வழி காட்டுதலின்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கான வசதியும், தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
- அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவ சாயம் செய்து வருகிறார். இவரது வீடு தென்ன ங்கீற்று ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீடா கும்.
இந்த நிலையில் காலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
இதனால் ஓலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடன டியாக வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தப்பினார்.
இதையடுத்து அக்கம் பக்கம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்