search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் கொண்டாட்டம்"

    • கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப்.
    • ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்தே மாநிலம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்தபடி இருந்தது.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்தார். கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப் (வயது52).

    முன்னாள் தேசிய கைப்பந்து வீராங்கனையான இவர் மலப்புரம் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் தான் மேரிக்குன்னு பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

    அங்கு நடத்தப்பட்ட இசை நாற்காலி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது ஜிப்சி திடீரென சுருண்டு விழுந்தார். சுயநினைவின்றி காணப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓணம் கொண்டாட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
    • கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், டாக்டர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், சயின்ஸ் அண்டு ஹிமானீட்டீஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சித்ரா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.

    • கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
    • போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் பலர், அதில் தாங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் அதிக லைக்குகள் வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள்.

    அதேபோலத்தான் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் அனைவரும்சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கறிவிருந்துக்கு தேவையான பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் போலீஸ் ஜூப்பில் சென்று வாங்குவது, அனைவரும் சேர்ந்து சமையல் வேலையை செய்வது, பின்பு சமைத்த உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஒருவருக்கு ஒருவர் ஊட்டுவது என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தனர்.

    அந்த வீடியோ பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தாலும், பணி நேரத்தில் போலீஸ் சீருடையில், போலீஸ் நிலையத்தில் வைத்து அனைவரும் சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த போலீஸ் நிலைய போலீசாருக்கு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சர்ச்சை வீடியோ விவகாரம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, போலீசார் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், போலீஸ் நிலையத்தில் போலீசார் வண்ண உடையணிந்து ஆடிப்பாடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவை டிரெண்டிங் ஆகிவிடுவதால் அடிக்கடி வீடியோக்களை பதிவிடுகிறார்கள். போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவிகள் அத்தப்பூ கோலம் போட்டு குத்துவிளக்கு ஏற்றி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
    • முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாடப்பட்டது .கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் கல்லூரி செயலாளர் சுமதி கிருஷ்ண பிரசாத், கல்லூரி ஆலோசகர் மற்றும் இயக்குனர் ஜெ.மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலம் போட்டு அதில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நடனமாடி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர். இதில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு ஓண திருவிழாவை கொண்டாடினர். இதற்கான ஆலோசனை மற்றும் பணிகளை கல்லூரி பேரவை ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை இணை பேராசிரியருமான டி.வி. பானுமதி மற்றும் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் சுமதி, பேரவை உறுப்பினர்களும் செய்து இருந்தனர். கல்லூரி பேரவை மாணவ தலைவர், எம் தர்ஷினி , செயலாளர் மற்றும் துணைச்செயலாளர் விழாவிற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அத்தப்பூ கோலம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • ஆதிலா, ஜெப்ரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அத்தப்பூ கோலம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் வரலாறு குறித்து மாணவி வர்ஷா பேசினார். பேபிஜெனிகா ஓணம் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நடத்தினார். மாணவிகள் ஆதிலா, ஜெப்ரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.

    • மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
    • தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலை அருகில் அமைந்துள்ள செந்தூர் கார்டன் பகுதியில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

    உடுமலை பகுதிகளில் வசிக்கும், கேரள மாநில மக்கள், வீடுகளின் முன் பூக்களால் அத்தப்பூ கோலம் வரைந்து, தீபம் ஏற்றியும், 21 வகையானஉணவுகள் தயாரித்து, இலைகளில் பரிமாறி, மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர்.உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறியும், பாரம்பரிய விளையாட்டுக்களுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

    • வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
    • கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. அறக்கட்டளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.

    விழாவில் மாணவர்களுக்கு பகவான் மகாவிஷ்ணு பிறந்தநாளின் சிறப்பையும், வாமனர் அவதரித்த தினமான ஓணத்தின் சிறப்பினையும் மாணவி ரேஷ்மா எடுத்துரைத்தார். கேரள மங்கையர்களாக மாணவிகளின் திருவாதிரை நடனம் நடைபெற்றது. குழந்தைகள் பலர் கேரள பாரம்பரிய உடை அணிந்து மேடையை அலங்கரித்தனர். மக்கள் செழிப்பாக வளமோடு வாழ்கிறார்களா என்பதை காண சிறப்பு தோற்றத்துடன் மகாபலி சக்கரவர்த்தியின் வருகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    • வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
    • பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சியடைந்தனர்.

    ஊட்டி,

    கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியிலும் இந்த பண்டிகை களை கட்டத் தொடங்கி உள்ளது.

    கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

    குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் அதிக அளவில் கேரளா மாணவிகள் படித்து வருவதால் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அருட்தந்தை விமல் திருப்பலி நடத்தி ஓணம் பண்டிகை விழாவை தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பட்டாசு வெடித்தும், திருவாதிரை களி நடனமாடியும் ெசண்டை மேளம் முழங்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அனைத்து பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    ×