search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சமூக வலைதளத்தில் பரவும் கேரள போலீசாரின் ஓணம் கொண்டாட்ட வீடியோ
    X

    சமூக வலைதளத்தில் பரவும் கேரள போலீசாரின் ஓணம் கொண்டாட்ட வீடியோ

    • கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
    • போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் பலர், அதில் தாங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் அதிக லைக்குகள் வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள்.

    அதேபோலத்தான் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் அனைவரும்சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கறிவிருந்துக்கு தேவையான பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் போலீஸ் ஜூப்பில் சென்று வாங்குவது, அனைவரும் சேர்ந்து சமையல் வேலையை செய்வது, பின்பு சமைத்த உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஒருவருக்கு ஒருவர் ஊட்டுவது என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தனர்.

    அந்த வீடியோ பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தாலும், பணி நேரத்தில் போலீஸ் சீருடையில், போலீஸ் நிலையத்தில் வைத்து அனைவரும் சேர்ந்து கறிவிருந்து தயாரித்து சாப்பிட்ட விவகாரம் பிரச்சனையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த போலீஸ் நிலைய போலீசாருக்கு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சர்ச்சை வீடியோ விவகாரம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே, போலீசார் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், போலீஸ் நிலையத்தில் போலீசார் வண்ண உடையணிந்து ஆடிப்பாடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் போலீசார் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவை டிரெண்டிங் ஆகிவிடுவதால் அடிக்கடி வீடியோக்களை பதிவிடுகிறார்கள். போலீஸ் சீருடையணிந்து கொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவதால், அது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×