என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மநபர்"
- இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) நுழைந்த ஒருவர் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மற்றவர்களை தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலைமைகள் இன்னும் தெரியவில்லை என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இனிமேல் யாரும் இங்கு வரவேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த ஒருவர் திடரென கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார்.
- 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.
தஞ்சாவூர்:
காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மனைவி கண்ணம்மை (வயது 51).
இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.
இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கி உள்ளனர்.
இவரது மகன் அரவிந்த் (20) தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சுப்பிரமணியன் தனது மனைவி கண்ணம்மை, மகன் அரவிந்த் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தார்.
நேற்று அரவிந்தை அவர் படிக்கும் கல்லூரியில் கொண்டு விடுவதற்காக காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சைக்கு குடும்பத்துடன் வந்தார்.
அப்போது மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அறிந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி 3 பேரும் சாப்பிட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகில் வந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த மர்ம நபர் ஒருவர் திடரென கண்ணம்மையின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார்.
இதில் 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.
இதில் அதிர்ச்சியடைந்த கண்ணம்மை மற்றும் குடும்பத்தினர் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டனர்.
ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அவர் தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார்.
- அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார். அப்போது அந்த நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம்.
அதனை நீங்கள் சரியாக செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் நாங்கள் இரண்டு மடங்காக பணம் செலுத்திக் கொண்டே இருப்போம். இதற்காக குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என ஆசைவார்த்தை கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் பல தவணைகளாக அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 74 செலுத்தி யுள்ளார். ஆனால் கூறியபடி வங்கி கணக்கில் பணம் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் டெலிகிராம் ஆன்லைன் செயலியில் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.
இது குறித்து அப்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திர் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சாமிநாதனின் தாயார் வீட்டிற்குள் மர்மநபர் இருட்டில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கோவை,
கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள வெற்றி லைகாளி பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்தார். அறையில் படுத்து இருந்த சாமிநாதனின் தாயார் வீட்டிற்குள் யாரோ மர்மநபர் இருட்டில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு சாமிநாதன் வெளியே வந்து பார்த்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை. அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அது பூட்டி இருந்ததால் அனைவரும் தூங்க சென்றனர்.
மறுநாள் காலையில் சாமிநாதன் பீரோவை திறந்து பார்த்தார். அதில் இருந்த செயின், மோதிரம், கைசெயின், கம்மல் உள்பட 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. அதனை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆட்கள் இருக்கும் போது அத்துமீறி நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- 1 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த 10 வாழை மரங்கள் வெட்டப்பட்டன.
- வாழை மரங்களை வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் சத்தி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). விவசாயி.
இவர் அல்லிகுளம் பகுதியில் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி ராஜேந்திரன் வேலையை முடிந்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
இரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர் யாரோ 1 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த 10 வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றனர்.
மறுநாள் காலையில் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரன் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தர். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- குமரவேல் தனது மோட்டார் சைக்கிைள வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.
- அதை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிந்தது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம் பராம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(46). இவர் தனது மோட்டார் சைக்கிைள வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிைள காணவில்லை. அதை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிைள திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்.
- மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்..
- சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை,யாரோ மர்மநபர் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்,
கடலூர்:
கடலூர் மாவட்டம்புவனகிரி பகுதி சேர்ந்தவர் மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு வடலூர் செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்.
சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை. ,என்ற சந்தேகத்தில் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார்.
- அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும், பீரோ சாவியை கொடு என கேட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அமிர்தவல்லி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.
- அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்த ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முத்துலட்சுமி எழுந்து வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
- கடந்த 16-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளை குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை,
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது.
இங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவை மாநகரம், மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.
அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். செல்வகுமார் பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு அதிகம் இருக்கும் போலீஸ் பயிற்சி வளாகத்திற்குள் நுழைந்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் கோவை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கார்கூடல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார்கூடல் ஆற்று பகுதியில் மர்ம நபர் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், மணல் திருடிய நபர் கோ.பொன்னேரி பகுதியை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய வீரமணியை தேடி வருகின்றனர்.
- தொழிலாளி ஒருவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.
- போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை கைது செய்தனர்.
பட்டீஸ்வரம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43) தொழிலாளி. இவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம் செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபர் பாபநாசம் அருகே உத்தமதானியை சேர்ந்த உத்திராபதி (25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பதுங்கி இருந்த உத்திராபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரமேஷ்பாபுவை பத்திரமாக மீட்டனர்.
இவ்வழக்கை விரைவாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்