search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்த நாள்"

    • அண்ணா பிறந்த நாள் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • தொழில்நுட்ப பிரிவு தவமணிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    திருமங்கலம்,

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் நகரில் உள்ள தெற்கு மாவட்ட அலுவ லகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

    தொடர்ந்து அரசு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், இளமகிழன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டியன், ராமமூர்த்தி, தனபாண்டி யன், நாகராஜன் பாண்டி யன், இளைஞர் அணி விமல், பொதுக்குழு உறுப்பி னர்கள் சிவமுருகன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், தகவல் தொழில்நுட்ப பிரிவு தவமணிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவித்தால் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து போட்டியிடுவேன்
    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ பேச்சு

    திருவட்டார் :

    அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. திருவட்டார் கிழக்கு ஒன்றியம் சார்பாக குலசேகரம் சந்தை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெஸ்டின் ராஜ் வரவேற் றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர்உசேன், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய சுதர்ஷன், துணை செயலாளர் அண்ணா, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பிரதீப்குமார், பேரூர் செய லாளர்கள் மோகன்குமார், விஜுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், மாநில பேச்சாளர் தீக்கனல் லெட்சு மணன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்த லில் தலைமை கழகம் அறிவித்தால் பத்மநாபபுரம் தொகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.

    ஆவின் நெய் தற்போது 110 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதனை குறைக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். இந்த தொகுதிக்கு எந்த ஒரு பெரிய திட்டங்களும் கொண்டு வரவில்லை.

    குலசேகரத்தில் செயல் பட்டு வந்த ரப்பர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் தீ பற்றி எரிந்தது அதில் உறுப்பினராக இருக்கும் ரப்பர் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை பெற்று கொடுக்கவில்லை. குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் எங்கேயும் பசுமையை காணவில்லை.

    ஊழல் செய்த அமைச்சர் ஒருவர் விசாரணை கைதியாக சிறையில் இருக்கிறார். அவரை அமைச்சராக நிர்வாகத்தில் வைத்திருப்பது நல்லது அல்ல. ஆனால் தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது அமலாக்க துறை, மணல் குவாரிகளில் ரெய்டு செய்து கொண்டிருக்கிறது. அரசு ரப்பர் கழகம் விரை வில் மூடும் நிலைமைக்கு வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவ குற்றாலம், பேச்சிப் பாறை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி துணை செய லாளர் அன்சார், திருவட் டார் மேற்கு ஒன்றிய பொரு ளாளர் ஆல்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலை இலக்கிய அணி பொருளாளர் எல்ஜின் நன்றி கூறினார்.

    • அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடு துறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் விரைவு மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழாவை யொட்டி மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் 20பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விரைவாக மிதிவண்டி இயக்குதல் போட்டி நடைபெற்றது.

    இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியை சேர்ந்த 80மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 15வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரோஸ்லின்மேரி முதலிடம் பெற்று ரூ.5ஆயிரமும், 17வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 11-ம் வகுப்பு மாணவி ஷமினாராகவி 2-ம் இடம் பெற்று ரூ.3ஆயிரமும், 12-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ் மூன்றாம் இடம் பெற்ற ரூ.2ஆயிரமும் பரிசுதொகையை பெற்றனர்.

    மேலும் 15பேர் தலா ரூ.250பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

    இதனிடையே வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடை நம்பி தலைமையில் நடைபெற்றது.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வ ரிராஜசேகரன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுதொகையையும் வழங்கினார்.

    இதில் நகர்மன்ற துணை தலைவர் ம.சுப்பராயன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிறைவில் உதவி தலைமைஆசிரியரும், உடற்கல்வி இயக்குனருமான எஸ்.முரளிதரன் நன்றிக்கூறினார்.

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.
    • இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ராமநாதபுரத்தில் வருகிற 15-ந்தேதி நடக்கும் சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ. தூரம் செல்கின்றனர். மாணவிகள் 10 கி.மீ. தூரம் செல்கின்றனர். 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கான பிரிவு மாணவர்கள் 20 கி.மீ. தூரமும், மாணவிகள் 15 கி.மீ. தூரமும் செல்கின்றனர்.

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வர உள்ளனர்.

    இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-வது இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும்.

    இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    ×