என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பதாகை"
- ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.
- அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வ ரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பந்தநல்லூர் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.
மேலும். இந்த கட்டிடத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை என பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், மயிலாடு துறை அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை க்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்து சமபய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில், துணை ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், அறநிலையதுறை ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.
மேலும், அந்த இடத்தில் விளம்பர பதாகைகளையும் அமைத்தனர். இதைத் தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அங்கு பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் அனைத்து துறைகள் சார்பில் 5-ந் தேதி தொடங்கி வரும் 11-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை யில் இன்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வழிகாட்டுதலில் அனைத்து துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கியது.
இப்பேரணியினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்டத் தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் முனியாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உமா மகேஸ்வரி, சி தொண்டு அமைப்பு நிறுவனர் முனைவர் ஜெகதீஸ்வரி, ரெட்கிராஸ் துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள், பள்ளி ,கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று மீண்டும் விளை யாட்டு மைதானம் வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் செய்திருந்தார்.
- ரூ.14 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
- எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூரில் கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
ரூ.14 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகப்பட்டினம் இணை ஆணையர் குமரேசன் தலைமையில், திருவாருர் உதவி ஆணையர் ராணி, திருவாரூர் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லெட்சுமி பிரபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.
இப்பணியில் இத்திருக்கோவில் செயல் அலுவலர் சிவகுமார், கோட்டூர் சரக ஆய்வாளர் புவனேஸ்வரன், நில அளவையர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
- போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாணவ -மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், உதவி ஆணையர் (கலால் ) பழனிவேல், கோட்ட கலால் அலுவலர்கள் தங்க பிரபாகரன், அருணகிரி, தாசில்தார் சக்திவேல், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சாப்பிட்ட பிறகு தவறாமல் வாய் கொப்பளிக்க வேண்டும்.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சாலை வழியாக பேரணியாக புறப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயிலடியில் இன்று இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு தஞ்சாவூர் கிளை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், செயலாளர் இலியாஸ் பாட்ஷா, பொருளாளர் ரவிக்குமார், சி.டி.எச்.கன்வீனர் பொன்மொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.
தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும், 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும், சாப்பிட்ட பிறகு தவறாமல் வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சாலை வழியாக பேரணியாக புறப்பட்டனர்.
பழைய பஸ் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.
இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
- மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மற்றும் மன்னார்குடி ரெட் கிராஸ் சொசைட்டி வட்டக் கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மன்னார்குடியில் நடத்தியது.
மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
வட்டாரப் போக்கு–வரத்து அலுவலக கண்காணிப்–பாளர் ராஜ்குமார், மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஓருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆன்டோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
நிகழ்ச்சியில் மன்னார்குடி வட்ட கிளைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஜே. ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் ரமேஷ், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சுகுணா, செங்கமலத் தயார் மகளிர் கல்லூரி கவியரசி, பவித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
- பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.
- துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியை வேதார ண்யம் வருவாய் கோட்டா ட்சியர் ஜெயராஜ் பவுலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சேது ராஸ்தா, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதிவழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.
வழிநெடுகிழும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களுக்கு வழங்கினர்.
- உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்றார்.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.
தஞ்சாவூர்:
உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர்மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம்,
நிலைய மருத்துவ அதிகாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.
மூளை நரம்பியல் துறை தலைமை பேராசிரியர் ரவிக்குமார் பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். மூளை நரம்பியல் துறை உதவி பேராசிரியர் சாந்தபிரபு நன்றியுரை ஆற்றினார்.
இந்த பேரணியில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு கல்லூரி மாணவிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுப்போம், பெண்களின் நலம் வீட்டின் நலம், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிந்து குணப்படுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
இந்த பேரணியானது ராமநாதன் ரவுண்டானா, ரயிலடி வழியாக சென்று ஆயுதப்படை மைதானத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புயல், வெள்ள பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
- பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் உலக பேரிடர் இன்னல்குறைப்பு விழிப்புணர்வு பேரணி தாசில்தார் மலர்கொடி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது அவர் பேசும்போது,
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ள பாதிப்புகளை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அர்ப்பணிப்பு தன்மையுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், அப்போதுதான் பேரிடர் இன்னல்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம் நடைப்பெற்றது. பேரணி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரைநடைப்பெற்றது.
பேரணியில் பாலம் தொண்டுநிறுவன செயலாளர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்குமார், நிலைய தீயணைப்பு அலுவலர் காளிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளிதரன், , கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம், பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள். கலந்துக்கொண்டனர்.
- அனைவரும் பேரணியாக புறப்பட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என விழிப்புணர்வு பதாகை.
தஞ்சாவூர்:
தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைபெற்ற இந்தப் பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் அவர்களும் பேரணியாக புறப்பட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னா ர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.
பிளா ஸ்டிக்கை தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படு த்துவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பேரணியானது அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊரா ட்சிகள் உதவி ஆணையர் சங்கர், தஞ்சை தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் மேத்தா, முன்னாள் கவுன்சி லர் வீரையன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்