search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கராத்தே பயிற்சி"

    • பிராகன் கிங் சிட்டோரியா கராத்தே பயிற்சி மையத்தின் மூலம் பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி மாணவ- மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் பிராகன் கிங் சிட்டோரியா கராத்தே பயிற்சி மையத்தின் மூலம் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். யோகா மைய ஆசிரியர்கள் சுதா, செல்வி, சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஸ்டர் சசிகுமார் வர வேற்றார். மாஸ்டர்கள் சின்னத்துரை, அர்ஜுன் ஆகியோர் கராத்தே பயிற்சி அளித்தனர். நிலக்கோட்டை மகளிர் மருத்துவர் ஆர்த்தி ஹரிஷ் மாணவ- மாணவி களுக்கு பயிற்சி பெல்ட் வழங்கினார். இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி மாணவ- மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தற்காப்பு பயிற்சி பெற்றனர்.
    • எதிராளியை நிலைகுலைய செய்து தாக்குவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    மங்கலம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில், மாணவிகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆண்டுக்கான, தற்காப்பு பயிற்சி வகுப்பு, ராணி லட்சுமிபாய் ஆத்ம ரக் ஷா பிரசிக் ஷன் திட்டத்தில் நடக்கிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மங்கலம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில், 125 மாணவிகளுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. தன்னம்பிக்கையை வளர்ப்ப துடன், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தற்காப்பு பயிற்சி பெற்றனர். அதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    எதிரி தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளுதல், எதிராளியை நிலைகுலைய செய்து தாக்குவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிலம்ப விளையாட்டு தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் சுப்பிரமணியம், ஊராட்சி தலைவர் மந்திராசலமூர்த்தி, துணை தலைவர் தாகாநசீர், முன்னாள் மாணவர் பேரவை உறுப்பினர் வெங்கடாசலம், விநாயகம், தலைமை ஆசிரியர் கணேஷ்வரி, பயிற்சியாளர் முத்தையா, சக்திமுருகன், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

    • கொன்றைக்காடு தொடக்கப்பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
    • பயிற்சியாளர் ரென்சி பாண்டியன் தற்காப்பு கலையின் அவசியத்தை மாணவர்களுக்கு கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

    விழாவிற்கு தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பயிற்சியாளர் ரென்சி பாண்டியன் தற்காப்பு கலையின் அவசியம் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    வாரம் 2முறை நடக்கும் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சிகளில் மாணவ, மாணவிகள் 84 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக கராத்தே சங்கத்தின் புதிய விதிமுறைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதில் சிறப்பு பயிற்சியாளராக உலக கராத்தே நடுவர் சிகான் சம்பத்குமார் பயிற்சி அளித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக உலக கராத்தே சங்கத்தின் புதிய விதிமுறைகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் எட்டர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பயிற்சி பெற்றனர். இதில் சிறப்பு பயிற்சியாளராக உலக கராத்தே நடுவர் சிகான் சம்பத்குமார் பயிற்சி அளித்தார். உதவியாக ஈரோடு மாவட்ட தேசிய நடுவர்கள் சென்சாய் ஆனந்த் மற்றும் சரவணன் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் சிந்தியா பாபு தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டு தேசிய அளவில் நமது ஊரில் உள்ள மாணவர்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக குமரமங்கலம் நாட்டாமைக்காரர் வடிவேல், திருச்செங்கோடு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகர மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் பாஸ்கர், குழந்தைவேல், தனபால், பவித்ரா, வினோத், தீபக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    ×