என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
- தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தற்காப்பு பயிற்சி பெற்றனர்.
- எதிராளியை நிலைகுலைய செய்து தாக்குவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் :
மங்கலம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில், மாணவிகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆண்டுக்கான, தற்காப்பு பயிற்சி வகுப்பு, ராணி லட்சுமிபாய் ஆத்ம ரக் ஷா பிரசிக் ஷன் திட்டத்தில் நடக்கிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மங்கலம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில், 125 மாணவிகளுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. தன்னம்பிக்கையை வளர்ப்ப துடன், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தற்காப்பு பயிற்சி பெற்றனர். அதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
எதிரி தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளுதல், எதிராளியை நிலைகுலைய செய்து தாக்குவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிலம்ப விளையாட்டு தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் சுப்பிரமணியம், ஊராட்சி தலைவர் மந்திராசலமூர்த்தி, துணை தலைவர் தாகாநசீர், முன்னாள் மாணவர் பேரவை உறுப்பினர் வெங்கடாசலம், விநாயகம், தலைமை ஆசிரியர் கணேஷ்வரி, பயிற்சியாளர் முத்தையா, சக்திமுருகன், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.