search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு வகுப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை.
    • தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் அதிகமானதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது.

    அரசு பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ந் தேதியுடன் மூடப்பட்டன. வெயிலில் சிறுவர்கள் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுப்பதால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

    ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தன.

    100 சதவீதம் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை. ஆனாலும் பள்ளி நிர்வாகத்தின் கட்டாயத்தின்படி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

    தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.
    • வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.

    சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு பேருந்து மூலம் செல்லும் மாணவிகள் வீட்டுக்கு செல்ல இரவு 7.30 மணி ஆகிறது.

    இதனால் கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    பொது தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.

    மேலும் மாணவிகள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும், பள்ளி சிறப்பு வகுப்பை மாலை 5 மணிக்கு முடித்துக் கொண்டு 5 மணிக்கு மாணவிகளை வீட்டிற்கு அனுப்பினால் கூட மாணவிகள் பேருந்தில் பயணித்து 6.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து சேர்வார்கள் என்றும் இதற்கு மாவட்ட நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    • தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு பொதுச்செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இது தொடா்பாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனா். தனியாா் பள்ளிகள் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.

    ஆகவே, நேரடியாக கள ஆய்வு செய்து விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

      வருகிற 29-ந் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பநாமக்கல் மாவட்டத்தில்

      பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கைட உள்ளது. விடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

      அனைத்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் வந்தால் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

      கோடை விடுமுறையில் பள்ளிகள் நடைபெற்றால் மாணவர்களின் பெற்றோர் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தையும் அல்லது மாவட்ட கல்வி அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.
      • சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

      திருப்பூர்:

      மார்ச் 2-வது வாரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பெரும்பாலான மாணவர்களை தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தியுள்ளனர். ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.

      நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற செய்வதற்கான பணிகள் நடந்து வந்தாலும், தேர்வெழுத தகுதியான மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

      மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் சூழலுக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளை காலை, மாலை நேரங்களில் நடத்திக் கொள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

      அவ்வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு வகுப்பு பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகள் நடந்தாலும், பொதுத்தேர்வு தொடங்கும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

      மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், ஒவ்வொரு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளியிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு துவங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனி ஆசிரியர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

      நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், மாலை, இரவு நேர வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்து வழங்கி வருகிறோம்.

      மாணவர்கள் பள்ளியில் இருந்து சிறப்பு வகுப்புகளுக்கு வரும் நேரம், வீடு சென்றடையும் நேரம் பெற்றோருக்கு அறிவுறுத்தி விடுவதால் பெற்றோரும் இரவு வரையிலான வகுப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.100சதவீத தேர்ச்சியை பள்ளிகள் எட்டவேண்டும் என்பதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

      • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி
      • மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

      சென்னை:

      தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு கூறியிருந்தது. மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருப்பதால், விடுமுறை நாட்களில் எந்த காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவாக தெரிவித்திருந்தார்.

      ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

      மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதுபோன்ற அறிவிப்பு மற்ற மாவட்டங்களிலும் வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இனி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கான பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டும்.

      ×