என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி 20 உலக கோப்பை"
- இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
- இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.
முதலில் பேட் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 13-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது.
டி 20 உலக கோப்பையை வெல்லும் அணியில் முதன்மையான அணியாக கருதப்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், எங்கள் கனவை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது.
ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி.
இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என பதிவிட்டுள்ளார்.
- முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- நெதர்லாந்து தான் ஆடிய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
பெர்த்:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெறும் 2-வது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்குதல் கொடுத்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
அந்த அணியின் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 150 ரன்களை எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹுசைன் ஷாண்டோ அரை சதமடித்து அசத்தினார்.
பிரிஸ்பேன்:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஹுசைன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான மாதேவீர், எர்வின், மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். ரியான் பர்ல் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்காளதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- டி20 உலக கோப்பை தொடரில் இன்று வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 150 ரன்களை எடுத்துள்ளது.
பிரிஸ்பேன்:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 14 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ஷகில் அல் ஹசன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹுசைன் ஷாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹுசைன் ஷாண்டோ அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
- டி 20 உலக கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
பெர்த்:
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளும் தங்களது 3-வது போட்டியில் நாளை பெர்த்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும். அதிலும் பெர்த் ஆடுகளம் உலகின் அதிவேக வேகப்பந்து ஆடுகளம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.
இந்நிலையில், நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நோர்ஜே கூறியதாவது:
நாங்கள் எங்களை நம்புகிறோம். உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணிகளில் நாங்களும் ஒன்று. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் எங்களுடைய முழு திறமை மீது நம்பிக்கை வைத்து செல்வோம். நாங்கள் விதவிதமான வகையில் பந்து வீசும் வீரர்களைக் கொண்டுள்ளோம். நாங்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணி. எங்களுடைய வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு இடங்களை சரிசெய்வோம்.
வேகப்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் நாங்கள் எங்களுடைய திறமையைின் மீது நம்பிக்கை வைத்து செல்வோம். எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் நாளில் நாங்கள் எங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, வெற்றிபெற முயற்சிப்போம்.
அத்துடன் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம். நாளைய போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதன்மீது கவனம் செலுத்துவோம்.
பெர்த் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளை வைத்து பார்க்கும்போது, சிறந்த ஆடுகளமாக தெரிகிறது. அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ளது. நாளைய போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை குறித்து உறுதியாக கூற இயலாது. சற்று மாறுபட்டு காணப்படலாம் என தெரிவித்தார்.
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் நோர்ஜே 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது.
மெல்போர்ன்:
டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது. அனைத்து வடிவிலான போட்டியிலும் சேர்த்து இந்திய அணி 39 வெற்றியைப் பெற்றுள்ளது.
டெஸ்டில் 2, ஒருநாள் ஆட்டத்தில் 13, டி20 போட்டியில் 24 என 39 வெற்றி கிடைத்துள்ளது.
2003-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்து உள்ளது.
கடந்த 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த சாதனையை சமன் செய்திருந்தது. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் சாதனை முறியடிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய இலங்கை 20 ஓவரில் 157 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பெர்த்:
Australia beat Sri Lanka in T20 world cup
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். சரித் அசலங்கா 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார். ஸ்டோய்னிஸ் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்தில் அரை சதமடித்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 59 ரன்னும், ஆரோன் பின்ச் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
- கொரோனா தொற்றால் ஆடம் ஜாம்பா இடம்பெறவில்லை.
பெர்த்:
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுதை அடுத்து இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா, நிசரங்காவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 26 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். பானுகா ராஜபக்ச 7 ரன்னிலும், டாசன் ஷனகா 3 ரன்னிலும், ஹசரங்கா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சரித் அசலங்கா 38 ரனனுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- டி20 உலக கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
பெர்த்:
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
- இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்து விட்டது.
சிட்னி:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.
நாளைய தினம் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழுவீச்சில் செய்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது குறித்து ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிக்கான தலைமை நிர்வாகி மிட்செல் என்ரைட் நேற்று கூறுகையில் , 'உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் ஒன்று. இந்த போட்டிக்காக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக (90 ஆயிரத்திற்கும் மேல் இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியம்) விற்று தீர்ந்து விட்டது. பின்னர் கூடுதலாக இணைக்கப்பட்ட சொகுசு டிக்கெட்டுகளும் 10 நிமிடத்திற்குள் காலியானது. இதே போல் சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்திற்கான (அக்.22-ந்தேதி, சிட்னி) டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது.
தொடக்க நாளில் நடக்கும் இரு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்னும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இவ்விரு ஆட்டங்களுக்கும் மற்றும் சூப்பர் 12 சுற்றுக்கான வார இறுதி நாட்களிலும் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதை நினைக்கும்போதே உற்சாகம் அளிக்கிறது. அக்டோபர் மாதத்தில் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்புவது அற்புதமானது. இன்னும் கணிசமான டிக்கெட்டுகள் உள்ளன. டிக்கெட் கிடைக்காதவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் டிக்கெட்டுகளின் மறுவிற்பனை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்குவது மற்றும் விற்பது பாதுகாப்பானது' என்றார்.
- டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகினார்.
- அவருக்கு பதில் பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
லாகூர்:
டி 20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை.
இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
- டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.
8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
டி 20 உலக கோப்பையில் பங்கேற்கச் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு பெர்த் மைதானத்தில் 13-ம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்