search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனரமைப்பு பணிகள்"

    • கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாநக ராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட சரவணா நகர் பகுதியில் மாநகராட்சி சிறப்பு நிதியின் கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் ரூ. 5.03 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சோ நகர், பள்ளி வாசல் தெரு, சீமான் தெரு ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூபாய் 1.27 கோடி மதிப்பீட்டில் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், திருப்பாதிரிப்பு லியூர், தானம் நகர் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், வண்ணாரபாளையம் பகுதியில் ரூபாய் 45.74 லட்சம் மதிப்பீட்டில் கே.கே.நகர் குளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறித்தினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா , மாநகர பொறியாளர் குருசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
    • வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • காந்தி மியூசிய புனரமைப்பு பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • சிற்பங்கள் மற்றும் ஒவி யங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    தென்னிந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மதுரை காந்தி மியூசியம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப் பிக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    அதனடிப்படையில் காந்தி மியூசியத்தில் புனர மைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணி களை அமைச்சர் வெள்ளக் ேகாவில் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இந்தியாவின் பழமையான அருங்காட்சிய கத்தையும், உலக தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு கருத்தரங்க கூடங்கள், ஆய்வரங்கங்கள், பார்வையாளர் அரங்கம் மற்றும் நூலகத்தையும் அமைச்சர் ஆய்வு ெசய்தார்.

    சங்கத்தமிழ் காட்சிக் கூடத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஒவியங்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • தினமும் இசையின்றி நடக்கும் பூஜைகளால் பக்தர்கள் வேதனை
    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருளடைந்து கிடக்கும் பிரகாரம்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட இத்திருத்த லத்தில் .கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-.ந்தேதி, 418 ஆண்டு களுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுகிழமை களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு, ஆங்கில மாதத்துக்குப்பதில் தமிழ் மாதமான ஆனிமாத உத்திரம் நட்சத்திர நாளான வருகிற 26-ந்தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி,அய்யப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. அன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் கோவிலில் உள்ள குறைகள் இன்னும் களையப்படாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது கோவில் பிரகாரம் மற்றும் வெளிப்புறத்தில் புதியதாக ரூ.17 லட்சம் செலவில் விளக்குகள் பொருத்தப்பட்டது.

    இந்த விளக்குகள் பொருத்தப்படும் போது ஜெனரேட்டரும் அமைக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை ஜெனரேட்டர் நிறுவப்பட வில்லை. இதனால் திடீரென மின் தடை ஏற்படும்போது கோவில் பிரகாரம் இருளில் மூழ்குகிறது.

    கோவிலில் வேலை பார்த்த நாதஸ்வரக்கலைஞர், தவில் கலைஞர் ஆகியோர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. அதன் பின்னர் கோவிலில் பூஜைகளும், மாலை நேர தீபாராதனைகளும் இசையின்றியே நடக்கிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக்களின் போது மட்டும் வெளியூர் கோவிலில் இருந்து தற்காலிகமாக இசைக்கலைஞர்களை அழைத்து தவில், நாதஸ்வரம் வாசிப்பார்கள். தற்போது கோவிலில் பூஜைகளின் போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்படாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தவில், நாதஸ்வ ரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். 25-க்கும்மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த திருவட்டார் கோவிலில் இன்று வெறும் 5 பூசாரிகள் மட்டுமே வேலையில் உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் கோவிலில் வழிபாட்டுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பூசாரிகள் நியமிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவிலின் கருவறையைச்சுற்றி மியூரல் ஓவியங்கள் சுமார் ரூ.75 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு ஓவியங்களை வரையப்பட்டது. ஓவியங்களை தீட்டியவர்கள் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு சென்றுள்ளனர்.

    இதனால் ஓவியங்கள் முழுமை பெறாமல் காட்சி தருகிறது. இது தொடர்பாக கும்பாபிஷேகத்தின் போது கோவிலுக்கு வந்த அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆகியோர் "கும்பாபிஷேகம் முடிந்ததும் ஓவியங்களின் முழுமையான வடிவம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன்படி ஓவியங்கள் முழுமையாக வரையப்படும்" என்றனர். ஆனால் இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் காட்சி தருகின்றன. இந்த ஓவியங்கள் முழுமையாக வரையவேண்டும் எனவும் பக்தர்கள் கூறினர்.

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
    • புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு, காரைக்கால் மட்டுமில்லாது, அண்டை மாவட்டமான, நாகை,திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான நோயாளிகள், தினசரி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, உயர்தர சிகிச்சை, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஜிம்பர் சார்பில், அண்மையில், சுமார் ரூ.30 கோடிக்கு மேல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், தொடரும் அவலமாக, கடந்த சில வாரமாக, நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், வெறும் தரையிலும், சிலர் பாய், போர்வை உள்ளிட்ட வசதிகளோடு படுத்துறங்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இதில், அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட நோயாளிகளும் இருப்பது வேதனையானது. இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய ஆஸ்பத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

    அதேபோல், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதி பெற்று, புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களின் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குறைந்த செலவில், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி. ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத ந்தால், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை க்காக வந்து மரணம் அடையும் நோயாளிகளின் எண்ணி க்கை குறையும். எனவே, முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை செய்துதர முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்வரவேண்டும், என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×