என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டாகியும் முடிவடையாத புனரமைப்பு பணிகள்
- தினமும் இசையின்றி நடக்கும் பூஜைகளால் பக்தர்கள் வேதனை
- திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருளடைந்து கிடக்கும் பிரகாரம்
கன்னியாகுமரி :
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட இத்திருத்த லத்தில் .கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-.ந்தேதி, 418 ஆண்டு களுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுகிழமை களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு, ஆங்கில மாதத்துக்குப்பதில் தமிழ் மாதமான ஆனிமாத உத்திரம் நட்சத்திர நாளான வருகிற 26-ந்தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி,அய்யப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. அன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் கோவிலில் உள்ள குறைகள் இன்னும் களையப்படாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது கோவில் பிரகாரம் மற்றும் வெளிப்புறத்தில் புதியதாக ரூ.17 லட்சம் செலவில் விளக்குகள் பொருத்தப்பட்டது.
இந்த விளக்குகள் பொருத்தப்படும் போது ஜெனரேட்டரும் அமைக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை ஜெனரேட்டர் நிறுவப்பட வில்லை. இதனால் திடீரென மின் தடை ஏற்படும்போது கோவில் பிரகாரம் இருளில் மூழ்குகிறது.
கோவிலில் வேலை பார்த்த நாதஸ்வரக்கலைஞர், தவில் கலைஞர் ஆகியோர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. அதன் பின்னர் கோவிலில் பூஜைகளும், மாலை நேர தீபாராதனைகளும் இசையின்றியே நடக்கிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக்களின் போது மட்டும் வெளியூர் கோவிலில் இருந்து தற்காலிகமாக இசைக்கலைஞர்களை அழைத்து தவில், நாதஸ்வரம் வாசிப்பார்கள். தற்போது கோவிலில் பூஜைகளின் போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்படாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தவில், நாதஸ்வ ரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். 25-க்கும்மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த திருவட்டார் கோவிலில் இன்று வெறும் 5 பூசாரிகள் மட்டுமே வேலையில் உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் கோவிலில் வழிபாட்டுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பூசாரிகள் நியமிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிலின் கருவறையைச்சுற்றி மியூரல் ஓவியங்கள் சுமார் ரூ.75 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு ஓவியங்களை வரையப்பட்டது. ஓவியங்களை தீட்டியவர்கள் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனால் ஓவியங்கள் முழுமை பெறாமல் காட்சி தருகிறது. இது தொடர்பாக கும்பாபிஷேகத்தின் போது கோவிலுக்கு வந்த அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆகியோர் "கும்பாபிஷேகம் முடிந்ததும் ஓவியங்களின் முழுமையான வடிவம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன்படி ஓவியங்கள் முழுமையாக வரையப்படும்" என்றனர். ஆனால் இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் காட்சி தருகின்றன. இந்த ஓவியங்கள் முழுமையாக வரையவேண்டும் எனவும் பக்தர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்