search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிக்க அனுமதி"

    • குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் அருவிகளில் குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
    • தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் அருவிகளில் குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் சில நாட்களாக தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பாறை கற்கள் உருண்டு விழுந்ததால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு கருதி போலீசார் அபாய ஒலியை எழுப்பி குளிப்பதற்கு தடை விதித்தனர்.
    • காலையில் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் குறைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில், நேற்று மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அபாய ஒலியை எழுப்பி அப்புறப்படுத்தி குளிப்பதற்கு தடை விதித்தனர்.

    இதனால் ஐந்தருவி மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    காலையில் குற்றாலம் பகுதியில் லேசான வெயிலுடன் இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்தே மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறையத்தொடங்கியது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக ஐந்தருவியில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் பழைய குற்றாலத்திலும், அதன்பின்னர் சிறிது நேரத்தில் மெயினருவி என படிப்படியாக அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    4 நாட்கள் தடைக்கு பின்னர் கிடைத்த அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். 

    • வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் சாரல் மழையினால் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் அருவிகளில் நீர்வரத்து சற்று சீராக தொடங்கியதால் ஒவ்வொரு அருவிகளிலும் படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தாலும் குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வமுடன் அருவிகளில் குளிக்க தொடங்கி உள்ளனர்.

    மேலும் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் இன்று மாலையில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத் தப்படும் எனகூறப்படுகிறது. 

    • ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுப்பு.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

    இந்நிலையில், பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சுற்றுலா பயணிகள் தென்காசி பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பழைய குற்றால அருவியில் ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு அனுமதி
    • கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவும், ரசிப்பதற்கும் தடை் விதிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குைறந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. தடுப்ப ணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கடந்த 5 நாட்களுக்கு பிறகு கொடி வேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர். தொடர்ந்து அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    • தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள் விடுமுறை விடப்பட்டது.
    • தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    மறு கால் திறந்து விட்ட தால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள் விடுமுறை விடப்ப ட்டதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திரண்டு வந்தனர். இதனால் 7 நாட்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டு இருந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் குளித்து விட்டு குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து வந்தனர். அதன்பிறகு அருவியின் மேற்பகுதியில் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    • கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும்

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப் பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்ப த்துடன் வருவார்கள். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் பொது மக்கள் குளிக்கும் இடங்க ளிலும் தண்ணீர் அதிகளவு சென்றது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. ஆற்றிலும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதையொட்டி கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் குறைந்து உள்ளதால் இன்று முதல் பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் வந்து கொடிவேரி தடுப்பணைக்கு வந்து பார்த்து ரசித்தனர்.

    மேலும் பலர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களை ருசித்து விட்டு சென்றனர்.

    ×